காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்  எழுதிய ‘தம்பி  செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு   மார்கழி 20, 2047   புதன்கிழமை  04/01/2017 மாலை 5 மணி சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை   தலைமை : பழ.நெடுமாறன் ( தலைவர்- தமிழர் தேசிய முன்னணி ) நூல் வெளியீடு : வைகோ ( பொதுச்செயலாளர் – ம.தி.மு.க) நூல் பெறுபவர் : ம.நடராசன் ( ஆசிரியர் – புதிய பார்வை ) நிகழ்வு நெறியாளர்: இலக்கியர்  செயபாசுகரன்…

நியூ யார்க்கில் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் பொங்கும் விழா

அன்புடையீர்!   வரும் சனவரி மாதம் 14 ஆம்நாள் இலங்கைத் தமிழ்ச் சங்கம், அமெரிக்காவும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கமும்  இணைந்து தமிழர் திரு நாளான பொங்கல் திரு நாளை  புதுயார்க்கு/நியூயார்க்கு  அரசி/குயின்சு நகரில் வெகு  சிறப்பாகக்  கொண்டாட  உள்ளன.   காலையில் தமிழரின்  பண்பாட்டு முறையில் சூரிய வெளிச்சத்தில் பொங்கல் பொங்கும் நிகழ்ச்சி  அனுமான் ஆலயத்தில் நடை பெறும்.   மாலையில் நாவலர் தமிழ்ப் பாடசாலை சிறுவர் நிகழ்ச்சிகளுடன்   உச்சப்பாடகர்(சூப்பர் சிங்கர்)கள்  வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி  கிளென் ஓக்சு நகரில் உள்ள(…

ஏழாம் ஆண்டில் கற்க கசடற – திருக்குறள் போட்டி , இலண்டன்

  தமிழ் இளையோர் அமைப்பு 7  ஆவது வருடமாகக் கற்க கசடற  – திருக்குறள் போட்டி   வணக்கம்.   தமிழ் இளையோர் அமைப்பின் கற்க கசடற நிகழ்வின் 7 ஆம் ஆண்டு நிரல்   வடகிழக்கு  – ஞாயிறு,  சனவரி 29, 2017 காலை து.மெ.நி இல்லம்,மனோர் பூங்கா, இலண்டன் (TMK House, 46A East Avenue, Manor Park, London E12 6SQ) வடமேற்கு – ஞாயிறு,  சனவரி 29, 2017 காலை   ஈலிங்கு அம்மன் கோயில், இலண்டன் (Ealing…

தமிழரின் பெருமை – அறிஞர் கால்டுவெல்

தமிழரின் பெருமை  குமரி முனைக்குத் தென்பால் உள்ள பெருநாட்டில் முதன் முதல் தோன்றி வாழ்ந்த நன்மக்களே ஒரு காலத்தில் இந்திய நாடெங்கும் பரவிய தமிழர் ஆவர். தமிழரை வடமொழியாளர் திராவிடர் என்று அழைத்தனர்.   குமரிக் கண்டத்தைக் கடல் கொண்ட பொழுது இவருள் சில பகுதியினர் கடல் வழியாகவும், நில வழியாகவும் பெலுசித்தான், மெசபடோமியா முதலிய வடமேற்கு ஆசிய நாடுகளில் சென்று வாழ்ந்தனர்.  – அறிஞர் கால்டுவெல்

சார்சாவில் ஒவ்வொரு மாதமும் பல் மருத்துவ இலவச முகாம்

சார்சாவில் ஒவ்வொரு மாதமும்  பல் மருத்துவ இலவச  முகாம்  சார்சா  இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு  பல்துறைமருத்துவமனையில்(பாலிகிளினிக்கில்  பல் மருத்துவ இலவச முகாம்  அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது.   இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த  மருத்துவர் சிராசுதீன் பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான  பண்டுவங்கள்(சிகிச்சைகள்) குறித்து இலவச  அறிவுரை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர்,  0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மருத்துவர் சிராசுதீன்  : dr…

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை .

கார்த்திகை 12, 2047 / திசம்பர் 29, 2016  பிற்பகல் 2.00 மணி முதல் பசும்பொன் தேவர் மண்டபம், சென்னை 600 017 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை .   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தமிழகத்தில் தமிழிசைப்பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவைத் திசம்பர் மாதத்தில் நடத்தி வருகின்றது.  சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையோடு இணைந்து பேரவை, 4-ஆம் ஆண்டுத் தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள்…

பெரியார் 43-ஆவது நினைவு நாள் – பல்வழி அழைப்புக் கூட்டம்

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா பெரியார் 43-ஆவது நினைவு நாள் பல்வழி அழைப்புக் கூட்டம் பேரா.சுப.வீரபாண்டியன்:  பெரியாரும் இன்றைய தமிழகமும் மார்கழி 08, 2047 / திசம்பர் 23, 2016  அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8.00 முதல் 9.00 வரை அழைப்பு எண் (712)4321500  குறி: 951521# தரவு: சோம.இளங்கோவன்

திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா

திருச்சியில் மலேசியா எழுத்தாளருக்குப் பாராட்டு விழா   நந்தவனம்  நிறுவம், திருக்குறள் கல்வி மையம், கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் இணைந்து மலேசியா முத்தமிழ்ப் படிப்பகத் தலைவர் பெ.இராமன் அவர்களுக்கான பாராட்டு விழாவைத் திருச்சிராப்பள்ளியில் சிறப்பாக  நடத்தின.   திருக்குறள் கல்வி மையத்தலைவர் சு.முருகானந்தம் தலைமையில் எழுத்தாளர் மழபாடி இராசாராம் முன்னிலையில்  இவ்விழா நடைபெற்றது.   நந்தவனம் சந்திரசேகரன், கப்பல் கவிஞர் கிருட்டிணமூர்த்தி சூரியக்குமார்,  புலவர் தியாகசாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.    முன்னதாகக் கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தலைவர் ப.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.   …

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்குக் கற்றல் துணைக்கருவிகள்

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு  உரூ. 20, 000 பெறுமதியான கற்றல் துணைக்கருவிகள்   திருநேல்வேலி சேர்ந்த வில்வராசன் சுதாகரனின் முதலாம் ஆண்டு  நினைவுநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் கார்த்திகை 24, 2047 / 09.12.2016  அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு  உரூ. 20,000 பெறுமதியான கற்றல்  துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.   இல்லச் சிறார்களின் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றல் துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கிய வி.சுதாகரனின் குடும்பத்தினருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்ளும் தருணம் அமரர் சுதாகரனின் …

பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தினருக்குப் புதுத்துணி வழங்கல்

பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகத் துணிகள் வழங்கல்     புலம்பெயர் உறவான இலண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி சிறிக்காந்து தனது பிறந்த நாளை முன்னிட்டு முள்ளியவளையில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகப் துணிகள், காவிக்கண்டு(சொக்லேட்-Kandos) என்பவற்றை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக  கார்த்திகை 24, 2047 / 09.12.2016 அன்று வழங்கி வைத்துள்ளார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]  

நினைவுகூர் நாள் 2016

நினைவுகூர் நாள் 2016   ஊடகப்பணியாளர்கள் அடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும்  ஒப்படைப்புஉணர்வோடும் செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தினர்; இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவுகொள்ளும் வகையில் தற்போதும் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்களுக்குச் சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவுடன், துணிவோடும் ஒப்படைப்புஉணர்வோடும், தாயகத்திலிருந்து ஊடகப்பணியாற்றிவரும் ஆறு ஊடகப்பணியாளர்களுக்கு அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டுத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பர்னட்டு ஓக்கு  பகுதியில்(St.Alphage…

இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை

இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை      குளிர் காலத்தை முன்னிட்டு இனிய வாழ்வு இல்லச் சிறார்களுக்குக் கம்பளி ஆடைகள் தந்துதவுமாறு  அதன் பொறுப்பாளர்கள் வேண்டினர்.  வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உரூ.38300 பெறுமதியான 50 கம்பளி ஆடைகள் கார்த்திகை 18, 2047 /  3.12.2016 சனிக்கிழமை இனிய வாழ்வு இல்லச் சிறார்களிடம் கையளிக்கப்பட்டன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] athangav@sympatico.ca