சிங்கள அரசு செய்தது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலையே: வைகோ

  இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ! இப்படியும் ஒரு கொடுமையா? என்று புலம்பி தவிக்கிறது….

பன்னாட்டுக் கருத்தரங்கம்-தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள்

  அன்பு வலைப்பதிவு நன்பர்களுக்கு வணக்கம்.   தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்ச்சு 27,28 – 2014 அன்று திருச்சிராப்பள்ளியில் எமது கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கிற்குப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் கணினி தொழில்நுட்ப அறிஞர்களிடமிருந்து கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன. இத்துடன் அழைப்பிதழை இணைத்துள்ளேன். தொடர்பிற்கு முனைவர் துரை.மணிகண்டன் அலைபேசி எண்: 9486265886 http://www.manikandanvanathi.blogspot.in/2014/01/blog-post.html

“தென்றல்” சிறுகதைப் போட்டி

தென்றல் சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்காணுமாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு: $300 இரண்டாம் பரிசு: $200 மூன்றாம் பரிசு: $100 நகைச்சுவை, குமுகாயம், அலுவலகம், அறிவியல் என்று எதைப்பற்றியும் சிறுகதைகள் எழுதலாம். சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கலாம். நல்ல தமிழில் விறுவிறுப்பாக எழுதப்பட வேண்டும். நட்பு, மனிதநேயம், கருணை, உழைப்பு, ஈகம்(தியாகம்), கொல்லாமை போன்ற உயர்பண்புகளைச் சித்திரிப்பவையாக இருத்தல் நல்லது. ஒருவர் 3 கதைகளுக்கு மிகாமல் அனுப்பலாம். உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்கள் பங்குகொள்ள…

மதுரையில் மூலிகை மருத்துவப் பயிற்சிச் சான்றிதழ்

மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி- விரிவுப்பணித்துறை திட்ட அலுவலர் சாந்தி விடுத்துள்ள செய்திக் குறிப்பு  வருமாறு:–  மதுரை காமராசர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர் கல்வி-விரிவுப்பணித் துறை சார்பில், 6 மாதகால மூலிகை மருத்துவம் சான்றிதழ்ப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10– ஆம் நாள் தொடங்கும் இந்தப் பயிற்சி, வாரத்தில் 3 நாட்களுக்கு (ஞாயிறு முதல் செவ்வாய் வரை) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.  பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, மாணவ–மாணவியர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது….

தாவணி நாள் கொண்டாடுக! – சகாயம் வேண்டுகோள்

 கூட்டாலை(கோவாப்டெக்சு) நிறுவனம் உலக மகளிர் நாளான மார்ச்சு 8 அன்று  தாவணிநாள் கொண்டாட முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் வேட்டி நாள் கொண்டாடியதுபோல், மார்ச்சு 8 வரையிலான ஒரு நாள் தாவணி நாள் கொண்டாடும்படி அதன் மேலாண் இயக்குநர் சகாயம் இ.ஆ.ப. வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கேற்ப கூட்டாலை விற்பனை நிலையங்களில், பல வண்ணங்களில், தாவணிகள் விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வேட்டிநாளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததுபோல், கல்லூரி மாணாக்கியரிடமும் பல்கலைக்கழக மாணாக்கியரிடமும் தாவணி நாளுக்குப் பெரும் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தூக்குத் தண்டனை நீக்கம்; உலகெங்கும் நீதியின் ஒளி: வைகோ

  இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிமான்கள் சதாசிவம், இரஞ்சன் கோகோய், சிவ் கீர்த்தி(சிங்) ஆகிய மூவர் அமர்வு, 15 பேர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தூக்குத் தண்டனையை  நீக்கி,  வாணாள் தண்டனையாக அறிவித்து இருக்கின்ற தீர்ப்பு, இந்திய நீதிமன்ற வரலாற்றில் பொன்னேடு ஆகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரப்பன் கூட்டாளிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம், மீசை மாதையன் ஆகியோருக்கு, 2004 இல், உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனையை உறுதி செய்தது. குடியரசுத் தலைவருக்கு…