இலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.00 கவியரங்கம் : தலைமை : திருமதி இராணி பிரகாசு நூலாய்வு : தே.ந.கந்தசாமியின் புரியாத புதிர் – திருமதி இளங்கனி

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்    காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம் எதிர்வரும் மாசி 22, 2047 /  5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது.   இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. ‘கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே’ என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். ‘அறவியல் பாடல்களிலே‘ என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று…

அன்னை மணியம்மையார் 97ஆம் ஆண்டு பிறந்தநாள், சென்னை

மாசி 27, 2047 / மார்ச்சு 10, 2016  மாலை 6.00 உலகமகளிர் நாள் நிறைவுரை : ஆசிரியர் கி.வீரமணி தலைமை : அ.அருள்மொழி   திராவிடர் கழக மகளிரணி திராவிடர் மகளிர் பாசறை  

நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு

நாம் தமிழர்,  பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு   இணையம் வாயிலாக வாழ்த்துரை – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்) நாள்: 06-03-2016 [இடம்: Gandhi 15 rue de la longueral 91270 vigneux sur seine] நேரம்: பிற்பகல் 15 மணி முதல் 19 மணி வரை (போக்குவரத்து:  தொடர்வண்டித் RER-D இறங்கும் இடம் VILLENEUV-SAINTGEORGES) தொடர்புக்கு: 0781753203, 0758559417  

சென்னைக்கம்பன்கழகத்தின் தமிழ்க்கூடல் தனிப்பாடல்

மாசி 18, 2047 / மார்ச்சு 01, 2016,  மாலை 6.30 சென்னை தமிழ்நிதி விருது பெறுநர் : பெ.கி.பிரபாகரன் ‘ஔவையார்’ சிறப்புரை: முனைவர் சாரதா நம்பிஆருரன்  தலைமை : இராம.வீரப்பன் பாரதிய வித்யா பவன்

அண்ணாமலைப்பல்கலையில் திருக்குறள் கருத்தரங்கம்

  வணக்கம். பிப்பிரவரி மாதம் 3, 4 ஆகிய நாள்களில் நடைபெற இருந்த திருக்குறள் கருத்தங்கம் தவிர்க்க இயலா காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது.   அக்கருத்தரங்கம் வரும் மாசி 27, 28 / மார்ச்சு 10,11 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. நன்றி முனைவர் சா.இராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  [படத்தை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]

மாமனிதர் இரா.நாகலிங்கம் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

    மாமனிதர் இரா.நாகலிங்கம் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் செருமனியில் வரும் பங்குனி 14, 2047 – 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு மணிக்கு  நடைபெற உள்ளது. தரவு:  

ஏழுதமிழர் விடுதலை – நூல் வெளியீடு – கருத்தரங்கம்!

“ஏழுதமிழர் விடுதலை – உச்சநீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” –  நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம்!  தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியத் தலைமையமைச்சர் இராசீவு காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி முதலான ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை – உச்ச நீதிமன்ற மறுப்பு – தமிழ்நாடு அரசு அதிகாரம்” – நூலின் வெளியீட்டு…

பிரித்தானியத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் (UKTSU) ‘மேலையிசைப் பதிற்றாண்டு’ நிகழ்ச்சி

பிரித்தானியத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் (UKTSU) ‘மேலையிசைப் பதிற்றாண்டு’ நிகழ்ச்சி   பிரித்தானியத் தமிழ் மாணவர் ஒன்றியம் (UKTSU) எனும் அமைப்பு ஆண்டுதோறும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் வரும் நன்கொடைகளை வைத்து ஈழத் தமிழ் மாணவர்களின் கல்விக்கு உதவி புரிந்து வருகிறது.   அவ்வகையில் இவ்வாண்டு அவர்கள் நடத்த உள்ள ‘மேலையிசைப் பதிற்றாண்டு’ (Western Thaalam Decennium) எனும் நிகழ்ச்சி பற்றிய விவரங்களும் இந்த அமைப்பு பற்றிய மேலும் சில தகவல்களும் அறிய: http://www.uktsu.org/wt16/ தரவு:

அரசு நூலகங்களுக்கு நூல் வழங்கு விழா, சென்னை 2

  மாசி 15, 2047 – பிப்ரவரி 27, 2016 :  காலை 11.00   மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நூலகங்களுக்கு மணற்கேணி ஒருங்கிணைப்பில் ஈசா மையத்தின் சார்பில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நூல்கள் நன்கொடையாக வழங்கும் விழா. இயன்ற நண்பர்கள் வருக!

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 9 நூல்கள் வெளியீடு!

    மாசி 15, 2047 – பிப்ரவரி 27, 2016. மாலை 6.30. எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 9 நூல்கள் வெளியிடப்படுகின்றன.   சென்னையில் நடைபெறுகிற இந்த விழாவில் ‘அமுதசுரபி’ இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன், தொகுப்பாளர் இலெனின், பாவலர் மனுசிய புத்திரன், இதழாளர் சமசு, கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்திரி சேசாத்திரி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். வெளியிடப்படும் நூல்கள்: உயிர்மை வெளியீடு: இச்சைகளின் இருள் வெளி: பாலியல் தொழிலாளி நளினி சமீலாவுடன் உரையாடல். வேற்றுலகவாசியின் குறிப்புகள்: புதிய தலைமுறையில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு….