அணுஆற்றல் எதிர்ப்புப் போராட்ட ஆதரவுக்கூட்டம்

தை 10, 2047  / சனவரி 24, 2016 சென்னை   மே 17 இயக்கம் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் பூவுலகின் நண்பர்கள் சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்

மா.பெ.பொ.கட்சியின் நாற்பெரு நிகழ்வுகள், சென்னை

தோழரீர் வணக்கம்! மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் தை 09, 10, 2047 /  2016 சனவரி 23-24 சனி-ஞாயிறு நாள்களில் சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமணக் கூடத்தில் “சிந்தனையாளன் பொங்கல் மலர் – 2016” வெளியீடு தமிழ்வழிக் கல்வி – இந்தி ஆதிக்க எதிர்ப்பு, நீராண்மை – வேளாண்மைப் பாதுகாப்பு மாநாடு, மது ஒழிப்பு மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒன்றுபட்டுப் போராடாமல் விடுதலை இல்லை. ஒன்றுபடுவோம் – போராடுவொம் – மாற்றுவோம் குடும்பத்தோடு வாருங்கள் ! திரளாக வாருங்கள்…

மொழிப்போர் வீரவணக்கநாள், வள்ளலார்நகர்

இந்த ஆண்டு மொழிப்போர் ஈகியர் நாள் நிகழ்வுகள் பல ஊர்களில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது . சிறப்பு: தை 11, 2047 / 25 01 2016 திங்கள் காலை 9 மணிக்கு மூலக் கொத்தலத்தில் உள்ள மொழிப்போர் முதல் ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடம் நோக்கிப் பேரணி! ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடத்தில் மொழிப்போர் வரலாற்று நினைவிடம் அமைத்திடு! தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கிடு!- தமிழ் உரிமைக் கூட்டமைப்பு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அனைவரும் வாரீர் வாரீர் .

கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில் நூல் வெளியிட்டு விழா

  வணக்கம். எதிர்வரும் தை 07, 2047 / 21-1-2016 மாலை, 6.30 மணிக்கு, கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில், அறிஞர் மா.சோ.விக்டர் அவர்களின் “பண்டைய தமிழரின் நில மேலாண்மை” என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது.. அனைவரும் அன்புடன் வருக! தொடர்புக்கு.: செயகோபி 019-3307252., மரு. ஆனந்தஇராசன் 019-2256402. நன்றி  ஆனந்தஇராசன்

கொடுவாளெடுக்கத் தயக்கமேன்? – வாணிதாசன்

தமிழ்மறை போற்று கின்றீர்: சங்கநூல் விளக்கு கின்றீர்; தமிழ்மொழி எங்கள் ஈசன் தந்ததொன் மொழியென் கின்றீர்; தமிழ்மொழி தொலைக்க வந்த இந்தியை வெட்டிச் சாய்க்கத் தமிழ்ப்புல வீர்காள்! ஏனோ தயங்குகிறீர்! மனமே இல்லை! தமிழரே திராவி டத்தில் தனியர சாண்டி ருக்கத் தமிழர்கள் வடவ ருக்குத் தலைசாய்த்து வாழ்வதற்குத் தமிழரில் ஒருசி லர்கள் சரிசரி போடக் கண்டும் தமிழ்க்கொடு வாளெ டுக்கத் தயக்கமேன்? மனமே இல்லை! வாணிதாசன்

சப்பானில் சல்லிக்கட்டை வலியுறுத்தி மாபெரும் ஓவியப்போட்டி!

சல்லிக்கட்டை வலியுறுத்தி சப்பானில் மாபெரும் ஓவியப்போட்டி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துகள்!! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு மாசி 01, 2047 / பிப்பிரவரி 13ஆம் நாள் நடைபெறவிருக்கும் நமது பொங்கல்விழாவை முன்னிட்டுச் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வருடம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குமாகச் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் நடத்தப்படவுள்ளது. நடைபெறும் இடங்கள்: 1.கொஅனா இன்டர்நேசுனல்,கவாசாகி [Kohana International school,Kawasaki] 2.சேய்சின்சோ சமூக கூடம், நிசிகசாய் [Seishinchou community…

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா 2047 / 2016

  அனைவருக்கும் அன்புகலந்த இனிய வணக்கங்கள்! மார்கழிக்குளிரை வென்று தத்தம் மனைகளின் முற்றத்தில் மாக்கோலமதனைத் தீட்டி பசுஞ்சாணப் பிடியதனில் பரங்கிப்பூச் சொருகி வைத்து ஆதவன்தன் வடதிசை பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த களைப்பு நீங்க காளைகளை அடக்கி ஆளும் தமிழ்க் காளைகளின் வீரம் பொங்க சீர்கொண்டு வந்திறங்கும் சுறவமகளை வரவேற்று வயற்தாயின் வயிற்றில் விளைந்த நெல்மணி முத்துகள் திரட்டி புத்தரிசிப் பொங்கலிட்டுப் பொங்கலோ!பொங்கல்!! எனத் தீந்தமிழ் மாதரும் தோள்கள் தினவெடுத்த தமிழரும் குதூகலமாய்க் குடும்பத்துடன் தொன்றுதொட்டு தரணிதனில் திகட்டாமல் கொண்டாடி மகிழ வாய்த்ததொரு நன்னாளாம்!-நம்…