வணக்கத்திற்குரிய நவம்பர் 27
இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்! கலையாத வீரமும் குறையாத ஈரமும் ஓர் களங்கம்வாராத தீரமும் கன்றாத படைமையும் குன்றாத துணிவும் நலிவிலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத நட்பும் தவறாத சொல்லும் தாழாத எழுச்சியும் மாறாத புகழும் தடைகள் வாராத செயலும் தொலையாத பற்றும் கோணாத தலைமையும் துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும் இணைந்து வாழ்ந்த மாவீரர்கள் இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் இதழுரை – அகரமுதல
அடிப்படை அறிவற்றவரா கே.எசு.அழகிரி? – இலக்குவனார் திருவள்ளுவன்
அடிப்படை அறிவற்றவரா கே.எசு.அழகிரி? பேராயக்(காங்.)கட்சியின் தமிழகத் தலைவரான கே.எசு.அழகிரி அடிப்படை அறிவற்றவரா எனக் கேட்டால், கட்சியை நடத்துவதற்குரிய, திட்டமிடுவதற்குரிய நல்லறிவு படைத்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவருடைய பேராயக்(காங்.)கட்சிக்குரிய இலக்கணத்தின் படி கட்சியின் இந்தியத்தலைமைக்கு அடிமையாகக் காட்டிக் கொள்வதற்குரிய கருத்துகளை வெளியிடுவதில் வல்லவராக உள்ளார். மறந்தும் தமிழ், தமிழர் நலன்களில் அவர் கட்சி மேற்கொள்ளவேண்டியநடவடிக்கைகள் குறித்து மேலிடத்தில் தெரிவிக்க மாட்டார். இராசீவு காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்ட எழுவரையும் விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் சட்டமன்றத் தீர்மானம் முதலான பல நடிவடிக்கைகளையும்…
உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
View Post உள்ஒதுக்கீட்டு ஆணைக்குப் பாராட்டு! எழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக! அரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக்கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு மனமாரப்பாராட்டுகிறோம்! மருத்துவப் படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை…
ஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஊடக வலிமை உணர்ந்தவர்கள் இனப்பகைவன் வேடத்தில் நடிக்க மாட்டார்கள்! மக்களுக்கு வழி காட்டுவதாகவும் திசை மாற்றுவதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் ஊடகங்கள் இருக்கின்றன. திரைக்காட்சியிலும் தொலைக்காட்சியிலும் உள்ளவர்கள் தோற்றத்திலும் பண்பிலும் எத்தன்மையராக இருந்தாலும் மக்களைக் கவர்ந்துவிட்டார்கள் என்றால் மக்களின் நாயக நாயகியர் அவர்களே என்பதில் ஐயமில்லை. குடும்பத்தினரிடையே, உறவினரிடையே, பழகுநரிடையே, காண்பவரிடையே நிறவேற்றுமை பார்ப்பவர்கள், உருவ அழகிற்கேற்ப பழகுபவர்கள் பெரும்பான்மையர் உள்ளனர். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்னும் திருக்குறளைப் படித்திருந்தாலும் அதைப் பின்பற்றமாட்டார்கள். ஆனால், இவர்களே, திரையில் குள்ளனாக இருந்தாலும் கறுப்பனாக இருந்தாலும் கோரனாக…
காலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ! – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர் கோவை ஞானி காலமானார்! திறனாய்வு, கலை, இலக்கியம், பண்பாடு, அழகியல், வரலாறு, தமிழ் அறம், தமிழ்த்தேசியம், மார்சியம், பெரியாரியம், சூழலியம், மெய்யியல், ஈழ ஆதரவு, ஒடுக்கியம்(தலித்தியம்), பெண்ணியம், இதழியல் முதலிய தளங்களில் கால்பதித்து, 50 ஆண்டுகளாக இடையறாது இயங்கி வந்த அறிஞர் கோவை ஞானி இன்று(ஆடி 14, 2051 / 22.07.2020) காலமானார். முற்றிய நீரிழிவு நோயால் பார்வையை இழந்தும்(1988) தளராமல் முன்னிலும் மிகுதியாகப் படைப்புகளில் ஈடுபட்ட செயற்பாட்டாளரின் செயலுக்கு இயற்கை ஓய்வு கொடுத்து விட்டது. கோவை…
அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அயற்சொற்களைத் தமிழ் மயமாக்காதீர்! முகநூலில் சொல்லாய்வு, சொல், சொற்களம், தமிழ்ச்சொல்லாய்வு முதலான பெயர்களில் சொல்லாக்கக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இவை சொற்பெருக்கத்திற்குத் துணை நின்று தமிழ் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இப்பொழுது புதியதாக ஒரு குழுவும் இணைந்துள்ளது. அது கலைச்சொல்லாக்கம் தொடர்பான பல கருத்துகளைத் திரட்டித் தரும் நற்பணி புரிகின்றது. ஆனால், இதன் மூலம், தமிழ்ச்சொற்களை மட்டுமே பயன்படுத்தும் அறிவியல் புலமை உள்ளவர்களும் இன்றைக்கு ஒலி பெயர்ப்புச் சொற்களை இறக்குமதி செய்ய விரும்பும் வேதனையான நிகழ்வு நடைபெற்றுவருகிறது. ஒலி பெயர்ப்புச் சொற்கள் அயற்சொற்களின் தமிழ் வடிவம்…
இரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா? – இலக்குவனார் திருவள்ளுவன்
இரசினி விவரமின்றிப் பாராட்டியதை ஏற்க வெட்கப்பட வேண்டாவா? 2006 மார்ச்சு முதல் 2008 மே 18 வரை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் செயற்பட்டுவந்தது. 2008 மே 19 முதல் சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தனித்துச் செயல்பட்டு வருகிறது. இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட பொழுது அதன் இயக்குநரே இதன் இயக்குநராக இருந்தார். சென்னைக்கு இவ்வலுவலகம் மாற்றப்பட்ட பொழுது முனைவர் ப.மருதநாயகம் இதன் பொறுப்பு அலுவலராக அமர்த்தப்பட்டுச் செயல்பட்டு…
சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் – இலக்குவனார் திருவள்ளுவன்
சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் நாள் கோவிலூர் திருமடமும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து 2010இல் நடத்திய தொல்காப்பியர் கால ஆராய்ச்சிக் கருத்தரங்கத்தில் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என்றும் சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியத்தை அரங்கேற்றினார் என்றும் அந்நாளையே தொல்காப்பியர் பிறந்த நாளாகக் கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனை அரசிற்குத் தெரிவித்து அப்பொழுது நடைபெற இருந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவிக்கும்படியும் அரசிற்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், திருவள்ளுவர் ஆண்டிற்கும் இதற்கும் குழப்பம் வந்து விடுமோ என்ற ஐயத்தில் இருந்த…
சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை – இலக்குவனார் திருவள்ளுவன்
சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசாவின் சங்கச் சோலை கணிணி உகத்தில் கணிணி வழியாகத் தமிழ்த் தொண்டாற்றுபவர் சங்கத்தமிழ்த் தரவு தகைமையாளர் பாண்டியராசா. அன்றைய மதுரை /இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி என்னும் சிற்றூரில் சித்திரை 17, 1974 / 30.04.1943 இல் பிறந்தவர்; தமிழ் வளர்ச்சிக்கான அரும்பெரும் பணிகளை ஆற்றி வருகிறார். ஆசிரியர் ப.பரமசிவத்திற்கும் ஆசிரியை ஞா.பொன்னுத்தாய்க்கும் திருமகனாகப் பிறந்ததால் ஆசிரியப்பணியில் இயல்பாகவே நாட்டம் கொண்டார். ஆசிரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியரான இவரின் வாழ்க்கைத்துணைவி திருவாட்டி சு.வனசாவும் இளம்…
சடங்காகிப்போன வீர வணக்க நாள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
சடங்காகிப்போன வீர வணக்க நாள் தாய்மொழியாம் தமிழ் மொழியின் உரிமை காக்கத் தீயுண்டும் நஞ்சுண்டும் சிறைப்பட்டும் உயிர்நீத்த மாமறவர்களின் நினைவைப் போற்ற சனவரி 25 அன்று வீர வணக்க நாள் நிகழ்த்துகிறோம். தமிழகக் கட்சிகள் மாவட்டந்தோறும் இதனை நிகழ்த்தத் தவறுவதில்லை. ஆனால், மொழி உரிமைக்காகப் பாடுபட்டவர்களையும் உயிரை இழந்து பாரினை நீங்கியவர்களையும் போற்றும் நாம், நாளும் மொழி உரிமை இழந்து நலிவதில் இருந்து மீள எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவ்வப்பொழுது இந்தி எதிர்ப்பு வீரர்கள் போல் கூக்ககுரலிடுவது தவிர அன்னைத்தமிழை அழிவிலிருந்து காக்க…
தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்!
தமிழ்ப்பாரதியைப் போற்றுவோம்! சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா (பல்வகைப்பாடல்கள், பாப்பா பாட்டு: 12) யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் (பாரதியார் கவிதைகள் : தேசியகீதம், தமிழ்: 1) சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! (தேசிய கீதங்கள், தமிழ்: 2) தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் …
மாவீரர்களைப் போற்றுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மாவீரர்களைப் போற்றுவோம்! மாவீரர் நாள் 1989இல் அறிவிக்கப்பட்டு அப்பொழுது முதல், நவம்பர் 27இல் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ அமைப்பில் வீர மரணம் அடைந்த முதல் போராளி சங்கர் என்ற செ.சத்தியநாதன் வீரமரணம் அடைந்த நாள் அது.. மாவீரர் நாளைத் தேசியக் கொடியை ஏற்றியும் ஈகைச் சுடர் ஏற்றியும் மாவீரர்களின் குடும்பத்தினரைச் சிறப்பித்தும் கடைப்பிடித்து வருகின்றனர். தொடக்கத்தில் ஈகைச்சுடரை நள்ளிரவு 12.00 மணிக்கு ஏற்றினர். பின்னர் மாவீரர் சங்கர் புகழுடல் எய்திய நேரமான மாலை 6.05 மணிக்கு ஏற்றி வருகின்றனர். பொதுவாகப் பொதுவெளியில் மிகுதியும் உரையாற்றாத தமிழீழத்…