6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 3/6
(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-2/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 3/6 இந்தி எதிர்ப்புப் போர் 1937 ஆம் ஆண்டின் காங்கிரசுக் கட்சி சட்டமன்றத் தேர்தல்களுக்கு நின்று, ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற இராச கோபாலாச்சாரியார் தனது பதவிக் காலத்தில் உயர்நிலைப்பள்ளியில் முதல் மூன்று படிவம் பயிலும் மாணவர் அனைவரும் கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் விளைவாகக் கட்டாய…
இந்தி எதிர்ப்புத் தீர்மானம்: முதல்வருக்கும் பேரவையினருக்கும் பாராட்டு! எனினும் . . . .- இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் தலைமையில் தேசிய மொழிகள் ஆட்சிமொழிச் செயலாக்கக் குழு அமைக்க வேண்டும்! நேற்றைய சட்டமன்ற நாள்(ஐப்பசி 01,2053/18.10.2022) மொழிப்போர் வரலாற்றில் முதன்மையான நாள்களுள் ஒன்றாகும். நேற்று சட்டப்பேரவையில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிக்கத்தக்கதாகும். தீர்மானத்தை முன் மொழிந்து முதல்வர் மு.க.தாலின், “மொழி என்பது, நமது உயிராய், உணர்வாய், விழியாய், நம் அனைவரின் எதிர்காலமாய் இருக்கிறது. . . . ஆட்சி நிருவாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கிக், கல்வி மூலமாகத் திணிப்பது வரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள். …
இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
இந்தி கலந்து எழுதுவோரை இருட்சிறையில் தள்ளிடுக! “சமையல் குறிப்பாளர்களைத் தூக்கிலிடுக” என்று எழுத எண்ணினேன். அத்தகைய கடுஞ்சினத்திற்குக் காரணம் சமையல் குறிப்பு என்ற பெயரில் சமையல் பொருள்களை எல்லாம் இந்திச் சொற்களாலேயே குறிப்பிடுகின்றனர். . . . . . . . . . . . . . . . . . . எடுத்துக் காட்டிற்குச் சில குறிப்புகளைப் பார்ப்போம். “சுகர் பேசண்ட்சு” “முளைத்த கிராம்சு, பச்சை மூங் பருப்பு” “முளைத்த மேத்தி முளைத்த கிராம்சு”, “முளைத்த மேத்தி…
தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 34 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 35 தன்வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டைவளமாக்கத் தகுஞ்செயல்கள்நன்றாற்றி நம்பெரியார் ஈ.வெ.ராமுதுமைதனைக் கண்ட போதில்தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்புன்மொழியைத் தேசப் பேரால்சென்னைமுதல் அமைச்சரவர் கட்டாயம்ஆக்கிவிடத் திட்டம் செய்தார்! (1) தாய்மீதில் விருப்பற்ற ஓரிளைஞன்தன்னுழைப்பைத் தாய்நாட்டிற்கேஈயென்றால் மதிப்பானா? எதிரிமொழிமதித்துயிரவைத் திருப்பான் பேடி!தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியைமன்றத்திந்தி தோன்றின் நாடேதாயென்ற நிலைபோகும்! தமிழ்சாகும்!இந்தியெனும் கனிமே லாகும்! (2) ஈதறிந்த ஈரோட்டுத் தத்தாதாம்ஓயாமல் எழுத்தி னாலும்மோதியுணர் வலையெழுப்பி மக்களைத்தம்வயப்படுத்தும் மொழியி னாலும்தீதுவரும் இந்தியினால்! முன்னேற்றம்தடையாகும்! தீந்த மிழ்க்கும்ஆதரவு கிடைக்காமல் அழிவுவரும்!இந்திஉயர் வாகும்…
மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய அரங்கம் + பாவாணன் உரை
தமிழே விழி ! தமிழா விழி ! …
தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)
(தந்தை பெரியார் சிந்தனைகள் 33 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 34 (எ) இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நம்நாட்டு மகளிர் மனத்தையும் கொள்ளை கொண்டது. அவர்களும் மொழிப்போரில் ஈடுபட்டனர். 1938 நவம்பர் 13-இல் சென்னையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் (மறைமலையடிகளின் திருமகளார்) மாநாட்டுத்தலைவர். இம்மாநாட்டில் தந்தைபெரியார் ஆற்றிய சொற்பொழிவு தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்தது; உரிமை உணர்ச்சியை எழுப்பிவிட்டது. இம்மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமி பெயருக்கு முன் பெரியார் என்னும் அடைமொழி கொடுத்து அழைக்க வேண்டும் என முடிவு செய்தனர். (ஏ) பெரியார் மீது வழக்கு: இம்மாநாடு முடிந்தபின் பல பெண்கள் மறியல்…