சந்தனத் தமிழன்

  – கவிஞர் முருகு சுந்தரம் அமிழ்தமாம் தமிழைக் காக்க ஆருயிர் நெருப்பில் தந்த தமிழவேள் சின்னசாமி தமிழர்க்குப் பெரிய சாமி! உமியினைப் போன்று மக்கள் உலகினில் பலபேர் வாழ இமயத்தைச் சிறிய தாக்கி இவன் புகழ் எழுப்பி விட்டான்! மக்களும் மறவன்; ஆட்டு மந்தையில் பிறந்த வேங்கை. தக்கைகள் நடுவே மின்னும் தனித்தவோர் தங்கக் கூர்வாள்; சக்கைபோல் தமிழ ருக்குள் சந்தனத் தமிழன்; அஞ்சிப் பக்கத்தில் பதுங்கி டாமல் பாய்கின்ற சிங்கக் குட்டி. கொழுந்துவிட் டெரியும் தீயில் குந்திய அப்பா அன்று செழுந்தமிழ்த்…

அன்பர் கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு!

குறள்நெறி  மாசி 18. 1995 / 01.03.1964 இதழில், ‘பாரதம்’ எம்.சி.(இ)லிங்கம் என்னும் நண்பர் இந்தி குறித்துப் பின்வருமாறு எழுதி 7 வினாக்களைத் தொடுத்து விடை கேட்டிருந்தார். நான் பிறப்பால் தமிழன்! மொழியால் தமிழன்! என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!  சுருங்கக்கூறின் என் உடல், பொருள், ஆவி தமிழ்தான்! எனினும் தேசியப்பற்று உடையவன். என் தேசம் இந்தியா! என் தலைவர் நேருசி, என் உரிமை காமராசர், என் சகோதர,  சகோதரிகள் நாற்பது கோடி மக்களும்! ஆக,…

செந்தமிழ் மறவன் சின்னச்சாமியின் வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு : தி.ஆ.1970 (தாது ஆண்டு ) ஆடித்திங்கள் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை (30-7-1939) இரவு எட்டு மணி. தந்தை: ஆறுமுக(முதலியார்). தாய் : தங்காள். ஊர் : கீழப்பழுவூர், உடையார் பாளையம் வட்டம், திருச்சி மாவட்டம். படிப்பு : ஐந்தாம் வகுப்பு. திருமணம் : ஏவிளம்பி ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நாள் வியாழக்கிழமை காலை 9 மணி: சீர்திருத்த முறையில் செல்வி கமலம் என்பாரை மணந்தார். மணமகளின் தந்தை : வையாபுரி தாய் : விருத்தம்பாள். ஊர் : ஆடுதுறை, பெரம்பலூர் வட்டம்…

தமிழ்ப் புலவர்கட்கு வேண்டுகோள்

 – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டில் தமிழ் இன்னும் தனக்குரிய இடத்தை அடையவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி அகன்றுவிட்டபோதும் ஆங்கில மொழியாட்சி இன்னும் அகன்றிலது. ஆங்கிலேயர் ஆண்டகாலத்தைவிட இன்று ஆங்கிலம் போற்றப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகின்றது. தமிழை இந்நாட்டின் ஆட்சிமொழி என ஒப்புக்கொண்டுள்ள போதிலும் தமிழைக் கற்றுப் புலமையடைந்தோர்களைத் தக்கவாறு பயன்படுத்தும் சூழ்நிலை இன்னும் உண்டாகவில்லை. தலைமையிடத்தில் இருப்போரெல்லாரும் ஆங்கிலப் பற்று மிகுந்தோராய்த் தமிழ்ப்பற்றும் அறிவும் குறைந்தோராய் இருப்பதனால் தமிழை எள்ளி இகழ்ந்து ஒதுக்கும் நிலையிலேயே உள்ளனர். ஆகவே இச்சூழ்நிலையில் தமிழைப் போற்றிவளர்த்து, அதற்குரிய இடத்தை அடையுமாறு…

செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி

  – கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை…

மொழிப்போர் ஈகியரை நெஞ்சிலேந்துவோம்!

1938, 1965ஆம் ஆண்டு ஆதிக்க இந்தி மொழியை எதிர்த்து தமிழ்மொழி காக்கும் போரில் உயிர் நீத்த ஈகியர் : 1. நடராசன், இறப்பு: 15.1.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 2. தாளமுத்து, இறப்பு: 12.3.1939, சென்னை சிறையில் உயிர் நீத்தார். 3. கீழப்பழுவூர் சின்னச்சாமி, பிறப்பு: 30.7.1937, இறப்பு: 25.1.1964, காலை 4.30 மணிக்கு திருச்சியில் தீக்குளித்தார். 4. கோடம்பாக்கம் சிவலிங்கம், இறப்பு: 25.1.1965, சென்னையில் தீக்குளித்தார். 5. விருகம் பாக்கம் ஏ.அரங்கநாதன், பிறப்பு: 27.12.1931, இறப்பு: 27.1.1965, கோடம்பாக்கம் தொடர்வண்டித் திடலில்…

இந்தியை எதிர்ப்போர் தென்னாட்டில் இலரா?

– தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள் வடநாடு சென்று திரும்பிவந்ததும் செய்தியாளர்களிடையே, ‘‘தென்னாட்டில் இந்தியை எதிர்ப்பார் இலர்’’ என்று கூறிவிட்டு ‘‘இந்தியை எதிர்ப்பவர்களும் அரசியல் நோக்கம் கொண்டுதான் எதிர்க்கின்றார்கள்’’ என உரைத்துள்ளதாகச் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது. இந்திமட்டும் இந்தியக் கூட்டரசின் மொழியாக ஆவதையும், அது மாநிலங்களில் மறைமுகமாகத் திணிக்கப்படுவதையும் அறிஞர்களும் அரசியல் தலைவர்களும் புலவர்களும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் நாளும் எதிர்த்துவருகின்றார்கள் என்பது நாடறிந்த செய்தியாகும். அங்ஙனமிருந்தும் நம் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்கள் இட்லரின் முறையைப் பின்பற்றி ‘‘இந்தியை எதிர்ப்பார் இலர்’’…

இந்திக்கு முதன்மை பிரிவினைக்கு வித்து

 – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் இந்தியக் கூட்டரசின் பொதுப்பணிக்குழுவின் தேர்வு மொழியாக இந்தியை ஆக்குவதற்கு, இந்திமொழி பேசப்படாத மாநில முதல் அமைச்சர்களுடன் இந்தியக் கூட்டரசுத்துறையினர் ஆய்வு நிகழ்த்தப்போவதாகச் செய்தியொன்று வெளிவந்துள்ளது. கூட்டரசு மொழிகளில் இந்தியை மட்டும் பொதுப் பணிக்குழுவின் தேர்வு மொழியாக ஆக்குதல் இந்திக்கு மட்டும் ஏற்றம் அளித்து, கூட்டரசின் ஏனைய மொழிகளை இழிவுபடுத்துவதாகும்; ஏனைய மாநிலங்களுக்கு இழைக்கும் பெருந்தீங்காகும். ஆதலின் கூட்டரசு மொழிகள் அனைத்திலும் தேர்வு எழுதுவதற்கு உரிமையளித்தல்தான் கூட்டரசுக் கொள்கைக்கு ஏற்றதாகும். இன்றேல் ஏனைய மொழியாளர் கூடி வாழ்வதால் பயனில்லை என்று…

இந்தியாவின் மொழிச்சிக்கல்

–       கூடலரசன்   இந்தியத் துணைக்கண்டத்தில் நிலையான விவாதத்துக்குரிய சிறந்த பொருளாக மொழிச்சிக்கல் அமைந்துள்ளது அரசியல் வடிவம் பெற்றுள்ள மொழிஆதிக்கம் பெருநிலப் பரப்பின் கருப்பொருளாக அனைவரின் சிந்தனையையும் கவர்ந்துள்ளது. ஆட்சிப்பீடத்து ஆதிக்க மொழியாக நான்கு நூற்றாண்டுகள் இடம் பெற்றிருந்த ஆங்கிலம் அகற்றப்படுவதும், அந்தச் சிறப்பான உரிமையை இந்தி மொழிக்கு வழங்குவதும் இமயம் முதல் குமரிமுனை இறுதியாக கடுமையான கண்டனத்துக்குரியதாக அமைந்துள்ளது. இந்திக்கு மகுடம் சூட்டினாலும் ஆங்கிலத்தின் தேவையைப் புறக்கணிப்பது இயலாத செயலாக இருக்கிறது. ‘அறிவுப் பெருக்கத்திற்கு ஆங்கிலம் தேவையாகும். அனைத்திந்தியத் தொடர்பு மொழியாக ஆங்கிலமே…