எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : ஓரெழுத்தொரு மொழிகளுக்கு அடுத்தும் கிழமைகளுக்கு அடுத்தும் வல்லினம் மிகும் இக்கோப்பில், “கை குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்’ என உள்ளது. “கை’ என்பது ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். ஓரெழுத்துச் சொல்லிற்குப் பின்பும் வல்லினம் மிக வேண்டும். கைக்குழந்தை தீத்தடுப்புப் பயிற்சி தைத்திங்கள் ஈத்தொல்லை கேள்வி: ஓரெழுத்து ஒரு மொழி’ சிலவாகத்தானே இருக்கும். பதில் : இல்லவேயில்லை. ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாய் அமையும்…
சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1001-1005 1001. Authorised officer / Authorized officer அதிகாரம் பெற்ற அலுவலர் அதிகாரம் பெற்ற அலுவலர் என்பவர் தனியொருவர், ஓர் அமைப்பு அல்லது அரசு நிறுவனத்தின் சார்பாகச் செயற்பட, குறிப்பிட்ட கடமைகளைச் செய்ய, ஆவணங்களைச் செயற்படுத்த அல்லது சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்க அதிகாரம் அல்லது அதிகாரப்பூர்வமாக அதிகாரம் வழங்கப்பட்டவர். இந்த ஏற்பு/ அங்கீகாரம் இயக்குநர்கள் குழு அல்லது அரசுத் துறை அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் மூலம்…
வெருளி நோய்கள் 441-445 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 436-440 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 441-445 உருள்வளிக் கோள்(Uranus) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உருள்வளிக் கோள் வெருளி.ஆரிய மூடத்தனங்களுக்கு முன்னோடிக் கிரக்க உரோமானிய மூடத்தனங்கள் ஆகும். இயற்கைக் கோளான உரேனசை சனியின் தந்தை என்றும் வியாழனின் தாத்தா என்றும் கருதினர். இவரின் மனைவி பூமிக்கடவுளான கையா. இருவருக்கும் நூறு கைகள் கொண்ட நூற்றொரு கையர்(Hecatoncheires/எகாடோஞ்சிர்கள்), ஒற்றைக் கண் கொண்ட ஒற்றைக் கண்ணன், பேருருவன் என்னும் அரக்கர்கள் போன்ற வலிமை மிகுந்த பிள்ளைகள் பிறந்தனர். இவர்களுக்கு அஞ்சி இவர்களையே பாதாளச்சிறையில் உரேனசு…
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-2(2010): இலக்குவனார் திருவள்ளுவன்
(செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): தொடர்ச்சி) செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி – 2 ? யார் முதலில் இந்தவேண்டுதலை முன் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா? # 1918 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய சைவ சித்தாந்த மாநாட்டில்தான் தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வேண்டுதல் வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சார்பில் 1919 ஆம் ஆண்டிலும் 1920 ஆம் ஆண்டிலும் நடைபெற்ற ஆண்டு விழாக்களின் பொழுது இதற்கான தீர்மானம்…
வெருளி நோய்கள் 436-440 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 431-435 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 436-440 உருப்படம்(icon) குறித்த வரம்பற்ற பேரச்சம் உருப்படவெருளி.இவற்றுள் குறிப்பாக மதச் சின்னங்கள் மீதான ஒரு வலுவான வெறுப்பு அல்லது பேரச்சம் இருக்கும். உருவ வழிபாட்டாளர்களை, கடவுள் உருவ எதிர்ப்பாளர்களை எதிர்க்கும் உருவ எதிர்ப்பு நிலைக்கு மாறுபட்டது. எனினும் உருவப்பட வெருளி, உருவ எதிர்ப்பு நிலைக்குக் கொண்டு செல்லலாம்.மேலும் இஃது உருவ நேயர்களுக்கு எதிரானநிலைப்பாடாகும். உருப்பொருள்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் உருப்பொருள் வெருளி.அசைவூட்டப்படங்கள் அல்லது கேலிப்படங்களில் பயன்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கில் உருப்பொருள்கள் உள்ளன. இவற்றின்மீதான பேரச்சமே…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள்- இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! –6, தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: back என்றால் முன் என்றும் பொருள் எந்த ஒரு சொல்லும் தான் பயன்படும் இடத்திற்கேற்ப உள்ள பொருளைச் “”சுமந்து செல்லும் ஊர்தி”தான். எனவே, மூலச் சொல்லுக்கு நேரான பெயர்ப்புச் சொல்லை அமைக்காமல் மூலப் பொருளுக்கு ஏற்ற பெயர்ப்புச் சொல்லை ஆக்க வேண்டும். சொல் செறிவாயும் செவ்விதாயும் இருத்தல் வேண்டும். பயன்பாட்டுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு கலைச் சொற்களை உருவாக்க வேண்டும். ” “குன்றக் கூறல்” முதலான நூல்…
வெருளி நோய்கள் 431-435 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 426-430 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 431-435 உயிரிய மணிப்பொறி (biological clock) தொடர்பான அளவுகடந்த கவலையும் பேரச்சமும் உயிரிய மணிப்பொறி வெருளி00 432. உயிருடன் அடக்க வெருளி-Subterraneapremortephobia உயிருடன் அடக்கம் செய்யப்படுவோமோ என்ற பெருங்கவலையும் பேரச்சமும் உயிருடன் அடக்க வெருளி.இதை முதலில் உயிருடன் புதைதல் வெருளி எனக் குறித்திருந்தேன். ஆனால் புதைவு வெருளி எனத் தனியாகக் குறித்துள்ளதால் இவ்விரண்டிற்கும் குழப்பம் வரக்கூடாது என்றே உயிருடன் அடக்கம் வெருளி என இப்போது குறித்துள்ளேன்.Subterranea நிலத்தடி எனப் பொருள்; premorte என்றால் இறப்பிற்கு முன்…
வெருளி நோய்கள் 426-430 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 421-425 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 426-430 உயரம் அல்லது உயரமான இடங்களை அண்ணாந்து பார்ப்பதால் ஏற்படும் பேரச்சம் அண்ணாத்தல் வெருளி.உயரமான இடங்களை அண்ணாந்து பார்க்கும் பொழுது தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் வரலாம் எனப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். hyps என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம். இதனை முதல் பதிப்பில் உயர வெருளி(Hypsiphobia) எனத் தனியாகக் குறித்திருந்தேன். என்றாலும் உயரம் குறித்த பேரச்சம் உயர்வு வெருளி எனத் தனியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, மேல் நோக்கி அண்ணாந்து பார்ப்பது குறித்த…
வெருளி நோய்கள் 421-425 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 416-420 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 421-425 உதைபந்தாட்டம்(soccer) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உதைபந்தாட்ட வெருளி.இதனைக் காற்பந்து வெருளி(footballphobia) என்றும் சொல்வர்.ஆடுபவர்களில் சிலருக்கு அல்லது வேடிக்கை பார்ப்பவர்களில் ஒரு சாராருக்குப் பந்து தங்கள் மீது பட்டுக்காயம் ஏற்படலாம் என்ற பேரச்சம் வரலாம். இதனால் ஆட்டத்தின் மீதே வெருளி வரும்.00 உந்து ஒலிப்பான்(horn) குறித்த வரம்பற்ற பேரச்சம் உந்து ஒலிப்பான் வெருளி.Keras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கொம்பு. கொம்பு என்பது பின்னர் ஊது கொம்பையும் இசைக் கொம்பையும் குறித்தது. ஊர்திகள் பந்த பின்னர்…
தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – இலக்குவனார் திருவள்ளுவன்
(தொல்காப்பியமும் பாணினியமும் – 3 தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 4 முதனூல் தொல்காப்பியம் தமிழர்க்குக் கிடைத்த முதலாவது நூலே தவிர, அதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் அல்ல. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி , பக்கம்: 10) பின் வருமாறு உரைக்கிறார்: “தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும்…
நாலடி நல்கும் நன்னெறி 14: நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 13: நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 14 : நல்லோரும் தீயோர் பக்கம் சேர்ந்தால் தீயனவே விளைவிப்பர் நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம் எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக் கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக் கடுவினைய ராகியார்ச் சார்ந்து. (நாலடியார் பாடல் எண் 124) பதவுரை: அழல் – நெருப்பு, தீக்கொழுந்து, வெப்பம்; நெய்போல்வ தூஉம் – நெய்போன்ற தன்மை கொண்ட பொருளும்; உயர்வு சிறப்பும்மை நெய்யின் தன்மையையும், புண்களை யாற்றும்…
வெருளி நோய்கள் 416-420 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 411-415 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 416-420 உண்ணுகை குறித்த வரம்பற்ற பேரச்சம் உண்கை வெருளி.உண்ணும் பொழுது அருகில் அல்லது சுற்றுப்புறத்தில் யாரேனும் காற்றை வாய்வழியாகவோ பின்வழியாகவோ வெளியேற்றும் பொழுது உண்பதை வெறுத்துப் பேரச்சம் கொள்வதும் இவ்வகைதான். உண்ணும் பொழுது வாய்வழியாக மூச்சு விடுவதும் உண்கை வெருளிதான்.00 உண்டியகம்(cafeteria) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உண்டியக வெருளி.கஃபேட்டிரியா என்பது நமக்கு நாமே பரிமாறிக்கொள்ளும் தற்பரிமாற்றச் சிற்றுண்டியகம். சில இடங்களில் ஒரு பகுதித் தற்பரிமாற்றப் பகுதியாகவும் மறு பகுதி பரிமாறுபவர்கள் உள்ள உண்டியகமாகவும் இருக்கலாம். இதனாலும்…