சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125 – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 126-130 126. Abode உறைவிடம்இல்லம், இருப்பிடம், பணியிடம், தொழிலிடம்   பிணையில் விடுவிப்பதற்கு நீதி மன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அல்லது பிணையாளருக்கு நிலையான அல்லது இடைக்காலமாக வசிப்பிடம் அல்லது பணியிடம் /தொழிலிடம் இருந்தால் மட்டும் கருதிப் பார்க்கும் 127. Abolish   நீக்குஒதுக்கு, ஒழி ஒழித்துக்கட்டு; நீக்கு   நடைமுறையில் உள்ள ஒன்றை இல்லாதாக்குதல்.   நிறுவனங்கள்/அமைப்புகள் பழக்க வழக்கங்களை நிறுத்தி விடுதல். எ.கா.:  தீண்டாமையை ஒழித்தல்,…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 121-125

(சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்) சட்டச்சொற்கள் விளக்கம் 121-125 121. Abnegation மறுதலிப்பு   பொதுநலன் கருதித் தன் நலனைக் கைவிடல். 122. Abnormal இயல்நெறி பிறழ்ந்த, இயல்பிழந்த, இயல்புமீறிய   அமைப்பு முறைகளுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய வகைமையில்லாத அல்லது இயல்பற்ற நிலைமைகள். 123. Abnormality பிறழ்மை   பிறழ்வு   இயல்பு அல்லாத நிலைமையை  அல்லது இயல்பு கடந்த நிலைமையக் குறிப்பது. 124. Abnormality of mind      இயல்புகடந்த மனநிலை   இயல்பு திரிந்த மனநிலை…

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 2/7 Alimony-துணைமைப்படி/துணைமைத் தொகை ஊட்ட உணவு, ஊட்டச்சத்து, ஊட்டமளித்தல் என்னும் பொருள் கொண்ட alimōnia  என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து alimony சொல் வந்தது. வாழ்க்கைப்படி, பேணற்படி, ஊட்டம், வாழ்க்கைப் படி, பிரிமனைப் படி, வாழ்க்கைப்படி, வாழ்க்கைப் பொருளுதவி, வாழ்க்கைப் படி. சீவனாம்சம் எனப்…

சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 116. Able வல்லமையுள்ள   ஒரு செயலைச் செய்வதற்குரிய அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆற்றல் அல்லது திறன் அல்லது போதுமான வளங்களைக் கொண்டிருத்தல்.   ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய போதுமான வளங்களையும் அதிகாரங்களையும் கொண்டிருத்தல். 117. Able bodied வல்லமையர்   உடல் திறனாளர் என நேர் பொருளாக இருந்தாலும் உடலாலும் உள்ளத்தாலும் வலிமையானவரையே குறிக்கும்.   உடல், உள்ள வலிமை என்பது, ஒரு வேலையைச் செய்து அல்லது…

மொழிப்போராளிகள் புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 22) மார்கழி 07,2055 *** 21.01.2024 காலை 10.00 தமிழ்க்காப்புக் கழகம் இணைய அரங்கம் மொழிப்போராளிகள்  புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர்,  தமிழ்க்காப்புக் கழகம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் மொழிப் போராளிகளை வணங்குநர் : கவிச்சிங்கம் கண்மதியன் உரைச்சடர் செல்வி ந.காருண்யா செல்வன் மயிலை இளவரசன் நூற்றிறன் அரங்கம் தமிழ்க்களப்போராளி பொழிலன்:…

சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 111. Abjection இழிநிலை   இழிதகவு   இழிதகையான நிலைமையக் குறிப்பது   இலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டில் புறக்கணிப்பு என்னும் கருத்தாக்கத்தையும் இது குறிக்கும். 112. Abjure   கைவிடு   விட்டொழி   முற்றோக ஒழித்தல் ஆணையிட்டொழி; (சத்தியஞ்செய்து விட்டொழி) ஏற்கெனவே மேற்கொண்ட சூளுரை அல்லது உறுதிமொழியைக் கைவிடுதல். கொள்கைக் கடப்பாட்டினைக் கைவிடுவதையும் குறிக்கும்.   ஆணையிட்டொழி (சத்தியத்தை விட்டொழி) என்னும் பொருளடைய abiūrō என்னும் இலத்தீன்…

தமிழுடன் வாழப் பொங்கல் நாளில் வாழ்த்துகிறோம்!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தமிழர் திருநாள் வாழ்த்து திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து உழவர் திருநாள் வாழ்த்து                                        வணக்கத்துடன் அகரமுதல தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம்

இலக்குவனார் திருவள்ளுவனுக்கு இரு விருதுகள்

இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத் திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருதும் தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பில் தமிழ்த்தென்றல் திருவிக விருதும்வழங்கப்பட்டன. திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு மேனாள் அமைச்சர் நல்லுசாமி சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருதினை வழங்குகிறார். உடன் முனைவர் செ.அசோகன், தமிழ்த்திரு மு.சிதம்பரபாரதி, அரங்க திருமாவளவன் உடனுள்ளனர். தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத் தமிழ்தென்றல திருவிக விருதினைப் பேரா.சே.கு.சாந்தமூர்த்தி வழங்குகிறார். பாவலர் மு.இராமச்சந்திரன், தமிழா தமிழா பாண்டியன், அரு.கோபாலன்,தமிழ்ச்செம்மல் நடராசன்…

சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் 106. Abiding கீழ்ப்படிகின்ற கடைப்பிடிக்கின்ற   நெறிமுறைக்கு அல்லது விதிமுறைக்குக் கீழ்ப்படிகின்ற அல்லது அதனைக் கடைப்பிடிக்கின்ற செயல். 107. Abiding interest நிலை நலன்   நிலையான அக்கறை அல்லது நிலையான ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கிறது.   ஒரிசா குத்தகைச் சட்டம், சொத்தில் நிலையான ஆர்வம் கொண்டவர், உறுதியாக .. . . .  எப்போதும் நிலத்தில் நிலையான ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்…

சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 101. abide by arbitration பொதுவர்  தீர்ப்புக்கு இணங்கு   Abide – அமைந்தொழுகு, மதித்து நடத்தல்; எனினும் இணங்கு என்னும் சுருக்கச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.   arbitration என்றால் நடுத்தீர்ப்பு என்கின்றனர். தீர்ப்பு என்றாலே நடுநிலையில்தான் இருக்க வேண்டும். நடுவர் தீர்ப்பு என்றும் சொல்கின்றனர். magistrate என்பவரை நடுவர் என்பதால் வேறுபாடு காட்ட வேண்டி உள்ளது. இரு தரப்பிற்கும் ஒத்திசைவு காண்பதற்குரிய பொதுவானவர் என்ற பெயரில் பொதுவர் எனலாம்….

கனடா, தொல்காப்பிய மன்ற இணையக்  கருத்தரங்கு – 06/07.2024

அன்புடையீர்! கனடா, தொல்காப்பிய மன்றத்தின் சனவரி மாத “மாதாந்தக் கருத்தரங்கு”  சனவரி மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை மார்கழி 21, 2054  / 06. 01. 2024), மாலை 6 மணிக்கு , தமிழ் நாட்டு நேரம்  மார்கழி 22, 2054  ஞாயிறு 07.01.2024 காலை 4.30 மணிக்கு  மெய்நிகர் வழியாக நடைபெற இருக்கின்றது என்பதை அன்புடன் அறியத் தருகின்றேன். சிறப்புரை:   முனைவர் செல்வநாயகி சிரீதாசு நெறியாளர் : மருத்துவர் மேரி கியூரி போல் உரையாளர்களும் தலைப்புகளும்  திரு இலக்குவனார் திருவள்ளுவன் – தமிழ்க்காப்புத் தலைவர்…