திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 21 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

  திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  21   முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்:388)  அறமுறை ஆட்சியால் மக்களைக் காப்பாற்றும் நாட்டின் தலைவன் மக்களால் உயர்ந்தோனாக மதிக்கப்பட்டுப் போற்றப்படுவான்  என்கிறார் திருவள்ளுவர். அரசறிவியல்,  நீதிமுறைசெய்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது நாட்டை ஆள்வோர் கடமை என்கிறது….

கருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்! 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!]

கருத்துக் கதிர்கள் 21 & 22 [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்!  22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா!] 21 வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம்! வேலூர் தேர்தல் முடிவு, வேலூர் தொகுதியில் தோற்கப்போவது யார்?(03 ஆகத்து 2019) என முன்னர்த் தெரிவித்தவாறுதான் அமைந்துள்ளது.  “சண்முகத்தின் தனிப்பட்ட செல்வாக்கும் அ.தி.மு.க.வின் செல்வாக்கும் இவரை வெற்றியின் பக்கம் தள்ளும். ஆனால், பா.ச.க. வின் செயல்பாடுகள் இவரைப் பிடித்துப் பின்னுக்கு இழுக்கும்” எனக் குறிப்பிட்டு இருந்தோம். “பா.ச.க.வை விட்டு விலகி நின்றால் வெற்றி வாய்ப்பு…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 20 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்   20 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண்டு அனைத்துஇவ் வுலகு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 387) இன்சொல் கூறி ஈதலைச் செய்யும் வல்லமையாளர் சொற்படி உலகம் நடக்கும் என்கிறார் திருவள்ளுவர். உதவுவதை விட முதன்மையானது அதனை இன்முகத்துடன் செய்ய வேண்டும் என்பதுதான். வேண்டா விருப்பாகக் கோடி…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 19 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 19 காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 386) அணுகுவதற்கு எளியவனாகவும் கடுஞ்சொல்லற்றவனாகவும் உள்ளவனை உலகம் உயர்த்திப் போற்றும் என்கிறார் திருவள்ளுவர். மீக்கூறுதல் என்பதற்குப் பரிமேலழகர், “ ‘இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும்…

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஒப்பிலக்கியத்தில் கால ஆராய்ச்சியும் கட்டாயம் தேவை! ஒப்பிலக்கியம் அல்லது ஒப்பியல் இலக்கியம் என்பது இலக்கிய ஆராய்ச்சிகளில் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அமெரிக்க இந்தியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் எச்.எச்.இரீமாக்கு ((H.H.Remack), “ஒப்பிலக்கியம் என்பது ஒரு நாட்டின் இலக்கியத்தை இன்னொரு     நாட்டு இலக்கியத்தோடு     ஒப்பிடுவது; இலக்கியங்களுக் கிடையேயான உறவுகளை ஒரு பக்கமும், குமுகாயவியல் தத்துவம் போன்ற துறைகளை இன்னொரு பக்கமுமாக ஒப்பிட்டுக் கூறுவது ;  இலக்கியத்திற்கும், இசை, ஓவியம், கூத்து போன்ற கலை வடிவங்களுக்குமிடையேயான உறவுகளைக் கூறுவது”  என்கிறார்.  பொதுவாக ஒரு நாட்டு…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 18 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 18 இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: இறைமாட்சி, குறள் எண்: 385) செல்வம் திரட்டுதவற்கான வழிவகைகளை உருவாக்கியும் தொகுத்தும் காத்தும் பகுத்து வழங்கலும் வல்லது அரசு என்கிறார் திருவள்ளுவர். இன்றைய நிதியியல் கூறும் கருத்தினை அன்றே திருவள்ளுவர் சொல்லி உள்ளார். இயற்றலும் ஈட்டலும் என்பதற்குப் பேரா.சி.இலக்குவனார், “ஒரு நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு உடையதாக இருக்க முடியாது.ஆதலின் என்னென்ன நம் நாட்டில் இல்லை? உண்டுபண்ண முடியாது என்பதை நன்கு ஆராய்ந்து அறிந்து, இல்லாதவற்றை எந்தெந்த…

தானமும் தவமும் தமிழே! -இலக்குவனா் திருவள்ளுவன், மின்னம்பலம்

தானமும் தவமும் தமிழே! சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா என்பது பற்றி பார்த்தோம். அதேபோல் இந்த வாரம் தானம், தவம் என்ற சொற்களின் முகவரியைத் தேடும் ஆய்வில் மூழ்குவோம். தானம், தவம் ஆகிய சொற்களை அயற்சொற்கள் என மயங்கி நாம் தவிர்க்கிறோம். இவை நல்ல தமிழ்ச்சொற்களே! அயற்சொல் அகராதி (ப.253) தானம் என்பது ஃச்தான(sthaana) என்னும் சமசுக்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் தவறாகக் கூறுகிறது. இதற்குப் பொருள் இடம், உறைவிடம், பதவி, கோயில், துறக்கம், இருக்கை, எழுத்துப் பிறப்பிடம், எண்ணின்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 231-240  தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 241-250 (குறள்நெறி) உலகம் போற்றப்  புகழ்ப்பணி புரி! புகழோ இகழோ காரணம் நாமே என உணர்! புகழ் வரும் வகையில் செயல்புரிக! புகழ் பெறா வாழ்க்கை வாழாதே! நிலப்பயன் குன்றுமாறு, புகழில்லாமல் வாழாதே! வாழ்வதாயின் இகழ்ச்சியின்றி வாழ்! வாழ விரும்பவில்லை யெனில் புகழ் நீங்கி வாழ்! உண்மைச் செல்வமாகிய அருட்செல்வத்தையே கொள்! அனைத்து வழிக்கும் துணையான அருளாட்சியை அடை! துன்பம் அடையாதிருக்க, அருளுடன் வாழ்!  (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் [காண்க : வாழ்வியல்…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 17 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 17 அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா மானம் உடையது அரசு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)   அறநெறியில் தவறாமல், அறம் அல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாமல், மானம் உடையவனே சிறந்த அரசன் என்கிறார் திருவள்ளுவர். ஆட்சியாளர்கள், அதிகாரம் குவிந்துள்ளதால் அறநெறியில் இருந்து விலகி வாழக்கூடாது என்கிறார். தமிழ்நெறி என்பது அரசும் அறநெறியில் நடக்க வேண்டும் என்பதே. சங்கப்புலவர்களும் இதையே வலியுறுத்துகின்றனர். அறம் நனி சிறக்க; அல்லது கெடுக! எனப் புலவர் ஓரம்போகியார் (ஐங்குறுநூறு 7) கூறுகிறார்….

சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க! ‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தை உருவாக்கி வரும் படக்குழுவினரைக் கைது செய்ய வேண்டும். கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம். என்பது கேப்மாரியின் சுருக்கெழுத்துகளாம். அப்படியானால் கே.எம். என்றுதான் குறிப்பிட வேண்டும். பெயர்க்காரணம் என்னவாக இருந்தாலும் சி.எம். என்பது…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 16 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்  16  தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 383)  ஆளும் தலைவருக்குக் காலந்தாழ்த்தாத தன்மையும் கல்வியுடைமையும் துணிவுடைமையும் நீங்காமல் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். தூங்காமை என்றால் உறங்காமை என்னும் பொருள் பின்னர் ஏற்பட்டது. காலந்தாழ்த்தாமை என்றுதான் பொருள். “தூங்காதே…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 15 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்   15 அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 382)   அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறைவின்றி ஆள்வோரிடம் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நாட்டில் இயற்கைப் பேரிடர், உட்பகையால் எதிர்ப்பு, அயல்நாட்டுப்பகையால் எதிர்ப்பு முதலான நேர்வுகளில்…