குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

( குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 25. உன்னையே வியந்து கொள்ளாதே! வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.  ( திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்: ௪௱௩௰௯ – 439) பொழிப்பு: எப்பொழுதும் தன்னை வியந்து கொண்டாடாதே; நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாது ஒழிக! (சி.இலக்குவனார்) பதவுரை: வியவற்க-வியந்து கொள்ளற்க, பெருமிதம் கொள்ளற்க, புகழ்ந்து கொள்ளற்க; எஞ்ஞான்றும்-எப்பொழுதும்; தன்னை-தன்னை; நயவற்க-விரும்பாதீர்; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்….

சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 : இலக்குவனார் திருவள்ளுவன்) சட்டச் சொற்கள் விளக்கம் 956-960 956. At large கட்டுப்பாடின்றி கட்டுப்பாடற்று   பொதுவாக   பேரளவில்   பொதுவாக நாம் large என்றால் பேரளவு அல்லது  பெரிதான என்னும் பொருள்களில்தான் எண்ணுகிறோம்.   தடையற்ற நிலை, தற்சார்பு(சுதந்திர) நிலை, அகல்விரிவு, அகல்விரிவான, முழு நிறை நுணுக்கவிவர விளக்க இயல்பு, பரவல் நிலை, தனிக்குறிப்பீடற்ற பொதுநிலை, குறிப்பிட்ட தனிஅலுவலற்ற பொதுத்தன்மை, முற்கால இரு நெடிலளவொத்த இசைமானம், பரந்தகன்ற, ஏராளமான, வளமான, பலவற்றை, உள்கொள்ளவல்ல, எல்லாம்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 – தொடர்ச்சி) Jan 5, 2011   எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! -2   ** இந்தக் கோப்பிலுள்ள மடல்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் அரசு மடல்கள், ஆணைகளில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் தனியார் அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிப்பிட வேண்டும் என்ற உணர்வு இயல்பாய் அமைதல் வேண்டும். தமிழராய் இருந்தாலும் இல்;லாவிட்டாலும் அரசு, அரசு சார் பணிகளில் உள்ள ஒவ்வொருவரும் அரசாணைக்கு இணங்கத் திருவள்ளுவர் ஆண்டு குறிக்க வேண்டும். எழுத்துப் பணியினர் குறிக்க மறந்தாலும்…

நாலடி நல்கும் நன்னெறி 7 : பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் – இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 7 பயனின்றிச் சேர்ப்போர் இழப்பர் உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட ! உய்த்தீட்டும் தேனீக் கரி. -நாலடியார், செல்வம் நிலையாமை, 10 பொருள்:  நல்ல ஆடைகளை உடுத்தாமலும் சுவையான உணவுகளை உண்ணாமலும் வறுமையாளர்களுக்குக் கொடுக்காமலும் அழியாக நல்லறச் செயல்கள் செய்யாமலும் உடலை வருத்திச் செல்வத்தை வெறுமனே சேர்த்து வைப்பவர் அதனை…

 வலசை – migration : இலக்குவனார் திருவள்ளுவன்

வலசை – migration   இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லும் பறவைகள் புலம் பெயர் பறவைகள்/transit birds எனப்படும். இவற்றை அயல் புலத்திலிருந்து வருவன, அயற்புலத்திற்குச் செல்வன என இருவகையாகப் பிரிப்பர். இடம் பெயராமல் தாய்மண்ணிலேயே தங்கும் பறவைகளும் உள்ளன.    மைகிரேசன் (migration) எனில் குடிப்பெயர்ச்சி எனத் தொல்லியல், வங்கியியல், பொருளியல் ஆகியவற்றிலும் புலப்பெயர்ச்சி என வேதியியல், தகவல் நுட்பவியல் ஆகியவற்றிலும் வலசைபோதல் என மீனியல், உயிரியல், காலநடைஅறிவியல் ஆகியவற்றிலும் புலம்பெயர்தல் என மனையியலிலும் சட்டவியலிலும் இடம்பெயர்தல் என அரசியலிலும் குடிபெயர்வு எனச்…

தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 128 & 129; நூலாய்வு

கற்றிலனாயினும் கேட்க அஃதுஒருவற்கு ஒற்கத்தின் ஊ்ற்றாந் துணை.   (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௩ – 643) தமிழே விழி!                                                    தமிழா விழி! தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்: ஆளுமையர் உரை 128 & 129; நூலாய்வு கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345 சித்திரை 07 , 2056  ஞாயிறு 20.04.2025  காலை 10.00 மணி தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன் “தமிழும் நானும்”  – ஆளுமையர்கள்…

சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 946-950 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 951. At an early date முன்னதான நாளில்   விரைவிலேயே; கூடியவிரைவில் என இப்போது குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குறிப்பது பொதுவான விரைவைக் குறிக்கும். அஃதாவது  எந்த நாளும் குறிப்பிடாத பொழுது விரைவில் முடித்துத் தர வேண்டுவது. ஆனால், At an early date என்றால் முன்னதான நாளில்.   ஒரு நாள் குறிக்கப்பெற்ற பின்னர் அதற்கு முன்னர் வேண்டுவது. சான்றாக வழக்கு நாள் குறித்த பின்னர் அதற்கும்…

குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே!- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்:௪௱௩௰௮  – 438)  பொழிப்பு: பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத இவறன்மை எந்த நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல. பதவுரை: பற்று-பிடித்தல்; உள்ளம்-நெஞ்சம்; என்னும்-என்கின்ற; இவறன்மை-கஞ்சத்தனம்; இவறல்+தன்மை; செலவிடப்படத் தக்கனவற்றிற்குச் செலவு செய்யாத பொய்யான சிக்கனத் தன்மை. இது திருவள்ளுவரால் புதிதாக ஆளப்பட்ட…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

சன. 4, 2011 எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1  பேரன்புசால்அவையோருக்கு,  வணக்கம்.  பல்வகைப்பட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் இங்கே கூடியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இங்கே நாம் வெறும் பொழுது போக்கிற்காகக் கூடவில்லை; பயன் ஆக்கத்திற்காகக் கூடியுள்ளோம்.  ‘உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றி யாவும் நம் வெற்றி’ என்ற எண்ணத்தில் கூடியுள்ளோம்; இன்றைய கலந்துரையாடல் மூலம் நம்மிடையே எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் கூடியுள்ளோம். தமிழ் தனக்குரிய நிலையை மீளப் பெறுவதற்கு நம் சந்திப்பு ஓர் உந்துதலாய் அமையும்; இலக்கை அடைவதற்குரிய பாதையில் முன்னேறிச் செல்ல உதவும்….

காலிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

காலிகள்     புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநே Tuesday, September 18, 2012 12:03 IST மூன்று கால்கள் கொண்ட இருக்கையை முக்காலி என்றும் நான்கு கால்கள் கொண்ட இருக்கையை நாற்காலி என்றும் நாம் சொல்கிறோம். அதைப்போல் உயிரினங்களையும் கால்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெயரிட்டு வகைப்படுத்துவது அறிவியல். மிகுதியான எண்ணிக்கையில் கால்கள் கொண்ட பூச்சியை ஆயிரங்கால் பூச்சி என்று சொல்வதுபோல்  பின்வரும்  பெயர்களின் அடிப்படையில்  அவற்றிற்கான விளக்கங்களை நாம் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாகச் சொல்வாதானால்…

நோக்கிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

நோக்கிகள் புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST தொலைவில் உள்ள ஒன்றை அண்மையில் உள்ளது போல் காண்பதற்கும் நுண்ணிய ஒன்றைப் பெரிதாக்கிக் காண்பதற்கும் ஆராய்வதற்கும் உற்றறிவதற்கும் உணர்வதற்கும் பயன்படுவன நோக்கிகள். அறிவியலில் பயன்படுத்தப் பெறும் நோக்கிகள் வருமாறு: – http://www.newscience.in/articles/nokkikal

சட்டச் சொற்கள் விளக்கம் 946-950 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 941 – 945 -தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 946-950 946 Astute நுண்புலம் வாய்ந்த   கூர்மதியுடைய;   சூழ்ச்சித்திறமுடைய;    தந்திர நுட்பமுடைய வலக்காரம் நுண்சூழ்ச்சித்திறம்      கரவடம் (தந்திரம்) சட்டத் துறையில், “நுண்புலம் வாய்ந்து” இருப்பது என்பது சட்டக் கோட்பாடுகள், ஒழுங்குமுறைகள்,  அவற்றின் நடைமுறை தாக்கங்கள் பற்றிய கூர்மையான நுண்ணறிவையும் புரிதலையும் கொண்டிருப்ப தாகும்.  இது முன்கூட்டியே சிக்கல் தீர்க்கும், பயனுள்ள முடிவெடுப்பதை அனுமதிக்கிறது.   சூழ்ச்சித் திறம் என்பது நல்லவகையிலான கலந்தாய்வையே குறிப்பிடடது….