மொழிப்போர் வரலாறு அறிவோம்!-9 : பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் – இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-8 : தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 9. பிராமணர்கள் ஆதரவும் சத்திய மூர்த்தியின் இரட்டை வேடமும் பிராமணர்களும் ஆதரவு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாகப் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். “போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, இலக்குவனார், முடியரசன் போன்றோர் ஆதரவளித்தனர்.” (விக்கிபீடியா) . போராட்டக்காரர்களிடம் பிராமணர் எதிர்ப்பு உணர்வு ஆழமாக ஊன்றி இருந்தது. 100க்கு 3 பேராக உள்ள பிராமணர்களுக்காக 100க்கு 97…
குறள் கடலில் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 9. யாரிடம் கேட்டாலும் மெய்ப்பொருள் காண்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 10. கேட்பதிலும் சொல்வதிலும் புரிதல் வேண்டும்! எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 424) அரிய பொருளையும் பிறர் புரிந்து கொள்ளுமாறு எளிதாக உணர்த்திப், பிறர் கூறும் நுண்ணிய பொருள்களையும் எளிதாக உணர்ந்து கொள்வதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர். எதையும் புரியுமாறு சொல்லலும் எதையும் புரிந்து கொள்ளுமாறு கேட்டலுமே அறிவு என்று…
குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 1. மிக்கதைக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 1. மிக்கதைக் கொள்க! சமூகச் சீர்திருத்தத் தந்தை, பகுத்தறிவுப் பகலவன், தென்னிந்தியாவின் சாக்கிரட்டீசு, பகுத்தறிவுச் சிற்பி, வைக்கம் வீரர், பெரியார் முதலான பல்வேறு பட்டங்களுக்கு உரியவர்தான் ஈ.வெ.இராமசாமி அவர்கள். அவர் மறைந்த பின்னும் அவரைச் சுற்றி அரசியல் வலை பின்னப்படுவதிலிருந்தே இவரது முதன்மைத்துவம் நன்கு புரிகிறது. நிறையும் குறையும் இல்லா மனிதர் யாருமில்லை என்பதே உலக வழக்காக உள்ளது. மிக உயர்வாகப் போற்றப்படும் எந்த ஒரு மனிதரிடமும் குறைகளும் காணப்படுகின்றன. மிகக் கீழாகப் பேசப்படுகின்ற எந்த ஒரு மனிதனிடமும்…
சட்டச் சொற்கள் விளக்கம் 926 – 930 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 926 – 930 926. assistance, seek; seek assistance உதவி நாடல் பொதுவாக தேவைப்படும் உதவியை நாடுவதைக் குறிக்கிறது. எனினும் புதியனவற்றைக் கற்றுக் கொள்வதில் அல்லது புரிந்து கொள்வதில் அறைகூவல்களைச் சந்தித்தல் அல்லது உறுதியற்ற தன்மைகளை எதிர்கொள்ளும் போது முன் முயற்சி உதவியை நாடுவது. உதவி நாடல் என்பது தேவைப்படும் உதவியை புரிந்து அறிந்து கொள்ளுதல், யாரிடம் உதவியை நாட வேண்டும் எனத்…
குறள் கடலில் சில துளிகள் 9. யாரிடம் கேட்டாலும் மெய்ப்பொருள் காண்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 8. மனத்தை நல்வழி செலுத்துவதே அறிவு – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 9. யாரிடம் கேட்டாலும் மெய்ப்பொருள் காண்க! எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 423) எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மையான இயல்பை காண்பதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர். அறிவுப்புலன் குறித்து ஆராயும் அறிவியலறிஞர்கள், அறிதலின் ஆழ்ந்தநிலையே (the deepest level of knowing) – அஃதாவது உண்மைத்தன்மையை…
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 : இலக்குவனார்திருவள்ளுவன்
(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 4 : தொடர்ச்சி) விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 5 மறுநாள்: உங்கள் கதைகளில் நீங்கள் விறுவிறுப்பிற்கு என்ன செய்வீர்கள் என்ற தெரிந்து கொள்ளலாமா? கண்டிப்பாகச் சொல்கிறேன். திடீரென்று ஒருவரைப் புகுத்துவோம். ஏன்? எதற்கு அவர் வந்தார் என்று பார்ப்பவர்கள் கருத மாட்டார்களா? அப்படியெல்லாம் இல்லை. மாறாக, அவர் குறித்த பரபரப்பு பார்ப்பவர்களிடம் தொற்றிக் கொள்ளும். முன்பே இறந்த போன ஒருவர் உயிரோடு இருப்பதாகக் காட்டுவோம். அடக்கம் செய்யப்பட்ட அல்லது எரியூட்டப்பட்ட ஒருவர் எப்படி மீண்டு வருவார் எனப் பார்ப்பவர்கள் சிந்திக்க…
குறள் கடலில் சில துளிகள் 8. மனத்தை நல்வழி செலுத்துவதே அறிவு – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 7 . பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக்கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 8. மனத்தை நல்வழி செலுத்துவதே அறிவு சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 422) மனத்தைச் சென்றவிடங்களில் எல்லாம் செல்லவிடாமல், தீமையிலிருந்து நீக்கி, நல்லன பக்கம் செல்ல விடுவதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர். “அறிவுவழியில் செல்வதே வலிமைக்கு வழி” என்கின்றனர் கல்வியியலர்கள். ஒரீஇ=நீக்கி; உய்ப்பது=செலுத்துவது; எனப் பொருள்கள். செலவிடாது…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-7 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : தொடர்ச்சி) தமிழினம் வாழ மொழிப்போர் வரலாறு அறிவோம்! 7 கட்சிக் கண்ணோட்டமின்றித் தமிழர் அனைவரும் பங்கேற்கும் வகையில் 1938 மொழிப் போரை நடத்த பெரியார் திட்டமிட்டார். அதனால் அரசியல் முகமாகப் பெரியாரும் பண்பாட்டு முகமாக மறைமலையடிகளாரும் நாவலரும் ச.சோமசுந்தர பாரதியாரும் மொழிப்போரில் முன் நிறுத்தப்பட்டனர். முதல் மொழிப்போர் வெடிக்கக் கருத்துநிலைத் தூண்டுதலாய் இருந்தோர் மூவர் ஈழத்து சிவானந்த அடிகள், புலவர் அருணகிரிநாதர், அறிஞர் அண்ணா. சென்னையில் இதற்கான பணிகளைத் திட்டமிட்டுக் களம் அமைத்த மூவர் செ.தெ.நாயகம், காஞ்சி மணிமொழியார், சண்முகாநந்த…
குறள் கடலில் சில துளிகள் 7 . பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக்கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
(குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? ….தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 7. பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக் கொள்க! அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 421) அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி. அதுவே பகைவராலும் அழிக்கமுடியாத அரணுமாம் என்கிறார் திருவள்ளுவர். அறிவு யாரிடம் இருக்கின்றதோ அதுவே அவர்களைக் காக்கும் கருவி என மேனாட்டுக் கல்வி அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கல்வி…
மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மொழிப்போர் வரலாறு அறிவோம்!-5 : தொடர்ச்சி) மொழிப்போர் வரலாறு அறிவோம்!-6 இவ்வாறு கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் 28.08.1937 இல் கண்டனக் கூட்டம் நடைபெற்றுக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணமான முந்தைய சில சூழலையும் பார்ப்போம். 1937இல் சென்னை மாகாணத்தில் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதிவ் இந்தியத் தேசியப் ்பேராயக் கட்சி(காங்கிரசு) 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 14.07.1937இல் இராசகோபாலாச்சாரி சென்னை மாகாண முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னதாக இந்திப் பரப்புரை அவையத்தில்(இந்தி பிரச்சார சபாவில்)பேசிய இராசாசி வணிகத்திற்கும் அரசியல் தொடர்பிற்கும் தென்னிந்தியர்க்கு…
தமிழ்க்காப்புக் கழகம் /ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம்/ஞாயிறு 09.02.2025
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௮ – 418) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக் கழகம் ஆளுமையர் உரை 120 & 121; என்னூலரங்கம் தை 27, 2056 ஞாயிறு 09.02.2025 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” உரையாளர்கள் தஞ்சைப் பாவலர் சோலை ஆ.மதிவாணன் திருக்குறள் ஆய்வுச்…
சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 916 – 920 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 921 – 925 921. assistance, receive; receive assistance ஏற்கை உதவி பெறுகை உதவி கைக்கொள் உதவி உதவி பெறல் உதவி ஏற்றல் சட்ட அடிப்படையில், உதவி பெறுவது என்பது வழக்கில் வழக்கறிஞரை அமர்த்த முடியாத பொழுது இலவயச் சட்ட உதவியை ஏற்பதாகும். வழக்கு நுட்பம் சாந்த சட்ட அறிவுரைகளைப் பெறலையும் குறிக்கும். 922. assistance, render…
