கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

கீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன் கீழடியைச் சிறப்பிப்பதாகக் கருதித் தமிழின் தொன்மையைக் குறைத்துக்காட்டக் கூடாது என்றும் தமிழின் தொன்மைச் சிறப்பை வெளியே கொணரத் ‘தமிழ் நில அகழாய்வு ஆணையம்’ அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கீழடி குறித்து ‘வணக்கம் தமிழன்’ என்னும் ‘தமிழன் தொலைக்காட்சி ‘நிகழ்ச்சியில் நெறியாளர் பாண்டியனுடன் உரையாடுகையில் இலக்குவனார் திருவள்ளுவன் தெரிவித்த கருத்துகளுக்கான காணுரை இணைப்பு

முன்னோர்கள்: இலக்குவனார், தமிழன் தொலைக்காட்சி

பேரா.சி.இலக்குவனார் குறித்த இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி  தமிழன் தொலைக்காட்சி முன்னோர்கள் வரிசையில் நாள்  கார்த்திகை 26, 2049 / 12.12.2018    

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன்

  ஆடி 06, 2049  ஞாயிறு – சூலை 22, 2018 –   மாலை 5.00   குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்:  திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன் சிறுகதைகள் – ஒரு காணொளி   அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்:  9442525191 கிருபா நந்தன்: 8939604745   இல்லம் அடைய

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா : இணையவழி உரையாடல் காணுரைகள்

உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா   இணையவழி உரையாடல் காணுரைகள்   மலேசியாவின் இரண்டாம் பெரிய நகராமான பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உலகத்தமிழிணையமாநாடு  ஆவணி 09-11, 2048 / ஆகத்து 25-27, 2017 ஆகிய மூன்றுநாள் நடைபெற உள்ளது. இது குறித்துச் சென்னையில் ஆடி 21, 2048 ஞாயிறு  ஆக.06, 2017  அன்று மாலை நடைபெற்ற இணைய வழிஉரையாடல் பதிவுகள்.   உரையாளர் மரு.மணவை மு.செம்மல் கருத்துரை https://www.facebook.com/DrSemmal/videos/1488288084570609/   Posted by Semmal Manavai Mustafa on Sunday, August…

கீழடி ஆய்வுக் கருத்தரங்கம், சென்னை: செய்தியும் காணுரையும்

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] திராவிட இயக்கத் தமிழர் பேரவை  சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது  இதனில் மேனாள் தொல்லியல்துறையாளர்  சாந்தலிங்கம், தொல்லியல் வரலாற்று ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர்  தம் கருத்துரைகள் வைத்தனர் சாந்தலிங்கம்  முன்பு நடந்த அகழாய்வுகள் கீழடியைவிடப் பெரும் அளவில் முதன்மை வாய்ந்தன. அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனினும் தமிழகம்தான்  வட இந்தியாவைவிட முந்தியது மட்டுமல்ல எழுத்தறிவுடன்கூடிய நாகரிகத்தில் மூத்தது   அசோகர் காலத்தைவிடச் சில நூற்றாண்டு முந்தைய கல்லெழுத்துகள் தமிழகத்தில்தான் கிட்டியுள்னள.  மூன்று அடுக்குகள் உள்ள கால வெளியில்…

கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் இளங்குமரனார்க்கு விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள்

வைகாசி 06, 2048 /  20/5/17 அன்று மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் இளங்குமரனார்க்குக் கனடா இலக்கியத்தோட்டம் சார்பில் பேராசிரியர் செல்வகுமார்   விருது வழங்கிய நிகழ்வுப் படங்கள் (பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக!)   முனைவர் மறைமலை இலக்குவனார் உரையின் ஒரு பகுதி: https://www.youtube.com/watch?v=chnuQZ40dpA&feature=youtu.be

ஈழ இளையோரே நெறி தவறாதீர்!

ஈழ இளையோரே நெறி தவறாதீர்!     2009 மே காலப்பகுதி வரை தமிழ் மக்களின் வாழ்விலும் வளத்திலும் கோலோச்சிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், தமிழ்ப் பண்பாட்டுக் குமுகம் ‘ தன்னொழுக்கம் –  தற்கட்டுப்பாட்டை’ இழந்து, தரம் தாழ்ந்துவரும் மோசமான நிலைமைகள் மிகுந்த கவலையையும் – பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.  ‘2009 மே’க்குப்பின்னர் கடந்த ஏழு வருடங்களாகத் தாராளமாகப் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதைப்பொருள்கள் – அருவருக்கத்தக்க(ஆபாசக்) காணுரைகள், மடைதிறந்து விடப்பட்டுள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறைகள்,…

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!   இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 /  18-11-2016 வெள்ளி அன்று  வெகு சிறப்பாகநடத்தியது. கோவை :  கோவை மத்திய சிறைச்சாலை…

கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! – ஈழத்து நிலவன்

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்! இன்னும் எத்தனைக் காலம்தான் கண்ணீர் விடப் போகின்றீர்கள் இழந்தவற்றை எண்ணி? இன்னும் எவ்வளவு நேரம்தான் கண்ணீர் சிந்தப் போகின்றீர்கள் உங்கள் தனியரின் கல்லறையின் முன்னால் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல கருத்தரிப்பதற்கே! ஓர் இருளின் உகத்தை எரிப்பதற்காகத் தான் அவன் சூரியனாகிப் போனான் போராளி நடந்த சுவடுகளைத் தொட்டுப் பாருங்கள் சுள்ளென்று சுடும் அவன் விடுதலையின் தாகங்கள் ! அவன் உயிரின் ஆன்மா எதை நினைத்து உறங்கிப் போயிருக்கும் தனது…

தமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே!

  ஈழப் புலிமகன் வீரத் தலைமகன் எறிகணை தொடுத்தான்! ஆழிப்பேரலை போலச் சினமுடன் அடியாய் அடியடித்தான்!   அடிமை இல்லாத தமிழீழம் படைக்க நினைத்தான்! அனைவரும் சமமாய் வாழ்ந்திட ஒன்றாய் இணைத்தான்! தரைப்படை கடற்படை வான்படை கட்டி அமைத்தான்! மில்லர் தற்கொடைப் படையால் எதிரிகள் முற்றுகை தகர்த்தான்!   அறநெறியோடு போர்முறை காத்து வென்றான் – வைய அரங்கில் இவனே தமிழருக்(கு) அரணாய் நின்றான்! தமிழாய் நெருப்பாய்த் தலைவன் பிறந்தே வந்தான் – புதுத் தமிழீழ அரசு ஒன்றைப் பொதுவாய்த் தந்தான்!   அடுப்பில் கிடந்த பெண்ணைப் புலியாய்ப் படைத்தான் – பெண் அடிமை…

தன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய தலைவா நீ வாழ்க!

  கங்கை கடாரம் காழகம் ஈழம் கண்டு வென்றவனே! எங்கள் மண்ணில் கரிகால்வளவனாய் இன்று பிறந்தவனே! தங்கத்தமிழர் விடுதலைக்காகத் தன்னைத் தந்தவனே! சிங்களப் படையைப் பொடிப் பொடியாக்கிய செம்மலே நீ வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! – நீ வாழ்க! வாழ்க! வாழ்க!   மண்ணும் மொழியும் இனமும் காக்கும் மறவன் நீ அன்றோ! விண்ணும் மழையைத் தூவி உன்னை வாழ்த்தும் நாள் இன்றோ! எண்ணும் செயலை முடிக்கும் அறிவின் ஏற்றம் நீயன்றோ! வண்ணத் தமிழர் வாழ்வின் சுடரே! வாழ்க நீ நன்றே! (கங்கை…

“தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” : பேராசிரியர் சு. பசுபதி

     ஐப்பசி 27, 2047 / நவம்பர் 12, 2016  உலகத்தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் மின்னியற்றுறைப் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் ”தொல்காப்பியமும் செய்யுளியலும் – ஒரு பார்வை” என்னும் தலைப்பில் மிகவும் விரிவாகவும் கருத்துச்செறிவாகவும் பேசினார்.   இந்நிகழ்ச்சி தொராண்டோ அருகே உள்ள இசுக்கார்பரோ (Scarborough) நகரில் நடைபெற்றது. அவர் பேச்சைக் கேட்க வாட்டர்லூவில் இருந்து சென்றிருந்தேன். சாலை நெரிசலின் காரணமாகக் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. எனவே எனக்குக் கேட்கக்கிடைத்த பகுதியில் ஏறத்தாழ ஒரு மணிநேரப் பொழிவை இங்கே பகிர்கின்றேன்.  அரிய நுணுக்கமான…