குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா?
குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா? தமிழ்நெஞ்சங்களுக்கு, வணக்கம். தமிழ் அரிமா சி.இலக்குவனார் தோற்றுவித்துத் தம் வாழ்நாளெல்லாம் நடத்திவந்த “குறள்நெறி” இதழ் கடந்த 2021-ஆம் ஆண்டுத் திருவள்ளுவர் திருநாள் முதல் கடந்த மூன்றாண்டுகளாக இலவச இணையத் திங்களிருமுறையாகத் தொடர்ந்துவெளிவந்துகொண்டிருக்கிறது. எஞ்ஞான்றும் நன்கொடையோ ஆண்டுக்கட்டணமோ எவ்வகையான பொருளிதவியோ வேண்டா. தொடர்ந்து படியுங்கள்.மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கைப்பேசிப் புலன எண்களைத் தெரிவித்தால் உங்கள் நண்பர்களுக்கும் சுற்றத்தினர்க்கும் அனுப்புவோம். பின்வரும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறள்நெறி குறள் முழக்கம் குறள் விருந்து Thirukkural express அனைத்து மின்னிதழ் களுக்குமான…
செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம்! – பேரா சிரியர் சி. இலக்குவனார்
செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க.வைப் போற்றுவோம்! செந்தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ் வித்தகராய், தமிழ் உரை நடைத் தந்தையாய், சொற்பொழிவுக் கொண்டலாய், செய்தி இதழ் ஆசிரியராய், தொழிலாளர்களின் தோழராய், அரசியல் அறிஞராய், மார்க்சியம் போற்றுபவராய், பெண்மை போற்றும் பெருந்தகையாய், மாணவர் நண்பராய், சமரச சன்மார்க்க அருங்குணக்குன்றாய், அடக்கத்தின் எடுத்துக்காட்டாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் செப்டம்பர்த் திங்களில் (17.9.53) செந்தமிழ் நாட்டைவிட்டு மறைந்து விட்டார். தமிழை வளர்க்கும் தலையாய பணியில் ஈடுபட்டு அருந்தொண்டாற்றிய பெருமை அவர்க்கு நிறைய உண்டு. அவர்தம் தொண்டால்…
அமைச்சர் இராசேந்திர பாலாசியின்பதவி பறிக்கப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அமைச்சர் இராசேந்திர பாலாசியின் பதவி பறிக்கப்பட வேண்டும்! மத்திய அரசின் / மத்திய அரசு நிறுவனங்கள், வங்கிகளின் தமிழக வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காட்டினர் பிற மாநிலத்தவராகவே இருக்கின்றனர். இதனால் தமிழக இளைஞர்களின் நிகழ்காலமே இருண்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களிலும் தமிழர்கள் வேலை வாய்ப்புகள் வினாக்குறியாகி வருகிறது. எனவே, சித்திரை 20, 2050 – 2019 மே 3 – காலை 8 மணி முதல் சமூகவலைத்தளப் பரப்புரை இயக்கம் என்னும் அமைப்பு #தமிழக-வேலை-தமிழருக்கே என்னும் குறிச்சொற்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியது….
திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன்
திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 1.0.நுழைவாயில் மதிப்பு, மரியாதை, மேன்மை, மேம்பாடு, மிகுபுகழ், உயர்வு, உயரம், பெருமை, பெருமிதம், சீர்மை, சிறப்பு, செம்மை, செழிப்பு போன்ற மாண்புகளைப் பெற்று மாந்தன் மாந்தனாக வாழ்தல் வேண்டும். அதற்கு மாந்தன் சாலச்சிறந்த சமுதாய விழுமியங் களை [SOCIAL VALUES] பழுதில்லாமல் வழுவில்லாமல் இடைவிடாமல் இறுதிவரை கடைப்பிடியாகக் கொள்ளல் வேண்டும்,. இத்தகைய சாலச்சிறந்த சமுதாய விழுமியங்களைப் சங்க இலக்கியங்களிலும் பொங்குபுகழ் வாழ்வியல் பயன்பாட்டு நூலாக விளங்கும் திருக்குறளிலும் காணலாம். 2.0.விழுமியங்கள் — விளக்கம் …
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார் நகரங்கள் நாட்டுக்கு அணிகலன்கள் நகரங்களே. நகரங்கள் ஒரே நாளில் தோன்றிவிடா. விளைபொருள் மிகுதியாலும் கைத்தொழிற் சிறப்பாலும் கோயில்கள் அமைவதாலும் கப்பல் போக்குவரத்துக்குரிய வசதியாலும் வாணிபப் பெருக்காலும் தலைநகராகும் பேறு உண்டாவதனாலும் சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்று நகரங்கள் என அழைக்கப்பெறும். வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் ‘நகர்’ என்னும் சொல்லும் ‘நகரம்’ என்பதன் அடியாகும். ‘நகரம்’ என்பது எவ்வாறு இருக்கும் என்பதை…
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – “வாயுள நாவுள’’ – மறை. திருநாவுக்கரசு
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் “வாயுள நாவுள’’ தண்டலம் முதலியாரிடம் ‘கற்றுக் கொள்வன வாயுள நாவுள’’ விளக்கம் தண்டலம் முதலியார் என்றது தண்டலம் பாலசுந்தரம் முதலியாரை ஆம். அடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணி ஏற்றுத் தம் குடும்பத்தாருடன், சென்னையிற் குடியேறினார். அடிகளார்க்குச் சென்னை வாழ்க்கை. இனிது இயங்கியதற்குப் பேருதவி புரிந்தவர் இம்முதலியாரேயாவர். இவர் அரசாங்க மொழி பெயர்ப்பாளராய்ப் பணிபுரிந்தவர். சிறந்த குடியில் தோன்றியவர். புலமையறிந்து போற்றும் புலமையர். அடிகளைத் தன் மகனெனக் கொண்டு அவரையும் அவர் குடும்பத்தையும் தம்மில்லத்தே வைத்துச் சில காலம் பாதுகாத்தவர்…
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் – வித்துவான். மறை. திருநாவுக்கரசு
மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் 1-1-1899 என் தமிழாசிரியர் நாராயணசாமி(ப் பிள்ளை)யைத் திருவாரூர் சென்று கண்டேன். – மறைமலையடிகள் மறை. திருநாவுக்கரசு விளக்கம்: இவர் நாகப்பட்டினத்தில் புத்தகக்கடை வணிகம் நடத்திவந்தவர். கள்ளர் குலத்தோன்றலார்; வெ.நாராயண சாமி(ப்பிள்ளை), திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்(பிள்ளையின்) மாணவராவர். இவர் சிறந்த இயற்றமிழாசிரியர். அடிகள் தமது இளமைப்பருவத்தே இவரையடுத்து இவர்பால் செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைச் செவ்வையாகக் கற்றுத் தேர்ந்தார். வித்துவான். மறை. திருநாவுக்கரசு (மறைமலையடிகள் வரலாறு: பக்கம் 4). நன்றி: குறள்நெறி, 01.02.1964
“நாட்டுக்கோட்டைத் தியாகராச(ச் செட்டியா)ர் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ – மறைமலையடிகள்
தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை மறைமலையடிகளின் 25.10.1937 ஆம் நாள், குறிப்பு . : ‘‘நாட்டுக்கோட்டைத் தியாகராசச் செட்டியார் பழங்களுடன் என்னைக் காண வந்தார்’’ இதற்கு மறைமலையடிகளாரின் மகனார் மறை திருநாவுக்கரசு தரும் விளக்கம் : இவரைத் (தியாகராசச் செட்டியாரை) தமிழ்ப் புலவர் என்றே கூறிவிடலாம். புலவர்கள் பால் அன்பும் உதவியுமுடையவர். இன்று தமிழ்நாட்டின் தனிப் பெருஞ்செல்வர் அடிகள் நூல்களை இன்றும் நாடோறுங்கற்கின்றார். மதுரையில், தியாகராசர் கல்லூரியைத் தம் உரிமைப் பொருள் கொண்டு நடத்தி வருபவர். நூல் ஆலைகள் பலவற்றின் உரிமையாளர். சிவநெறியின் பற்றாளர். அறங்கள்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙொ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙோ) தம் உடல் நலனைக்கருதாமல் தமிழ் நலனைக் கருதி வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனாருக்குத் திடீர் நலக்குறைவு ஏற்பட்டது. செருப்புக் கடியால் காலில் ஏற்பட்ட புண் உடனே கவனிக்கப்படாமையால் முற்றி விட்டது; மருத்துவமனையில் சேர்ந்தார். பேராசிரியருக்கு நீரிழிவு நோய் உண்டு. அதனால் புண் புரையோடிப் போனதை மருத்துவர்களே கவனிக்கவில்லை. முருகன் தம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பேராசிரியர் நம்பிக்கை இழந்தார். தமிழுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் உள்ளனவே எனக் கருதினார்….
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙொ) தெ.பொ.மீ. மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானதும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்னும் பாடத்தை நீக்கி விட்டு ‘இக்கால இலக்கியம்’ என்பதைக் கொணர்ந்தார். இக்கால இலக்கியம் என்னும் போர்வையில் கொச்சைத் தமிழ்நடைகள் உடைய படைப்புகள் கோலோச்சுகின்றன. இதனால் தமிழுக்கு மேலும் கேடுகள்தாம் விளைகின்றன. எழுத்து மொழியை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனாரின் கருத்துகளில் ஒன்றைக் காண்போம். “இன்று நம்மில் சிலர், ‘ மொழியின் உயிர் வழக்கு மொழியில்தான் உள்ளது. வழக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் தொகுதிக்கான மேலவைத் தேர்தல் வந்தது. சட்ட மன்றத்தில் போட்டியிடுவதாக இருந்த பேராசிரியர் இலக்குவனாரிடம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதாகக் கூறியவர்கள் மேலவைக்காவது அனுப்பி இருக்கலாம். கழகத்தின் ஆதரவைப் பேராசிரியர் கேட்ட பொழுது நடுநிலை வகிப்பதாகக் கூறி மற்றொருவருக்கு ஆதரவான நிலையை எடுத்தனர். தமிழுக்காக அனைத்தையும் இழந்தவருடன் மற்றொருவரையும் இணையாக எண்ணி நடுநிலை வகிப்பதாகக் கூறியதை நாடகம் என்று சொல்வதல்லாமல் வேறு என்ன சொல்வது? இருப்பினும் பேராசிரியர் இலக்குவனார் முனைப்பாக…
கல்விப் பொறுப்பு யாருடையது? – சி.இலக்குவனார்
கல்விப் பொறுப்பு யாருடையது? பேராசிரியர் சி.இலக்குவனார்