இந்திய அரசு உதவாது! – சி.இலக்குவனார்
இந்திய அரசு உதவாது ! பேராசிரியர் சி.இலக்குவனார்
வினைத்தூய்மை – சி.இலக்குவனார்
வினைத்தூய்மை – சி.இலக்குவனார் – தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙௌ) இவை மட்டுமல்ல, அனைத்து இதழ்களும் ஊடகங்களும் நல்ல தமிழே மக்களுக்கானது என்பதை உணர்ந்து தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளைத் தமிழ் அமைப்புகள் மேலும் முனைப்பாக ஆற்றி வெற்றி பெற வேண்டும். அன்று பேராசிரியர் இலக்குவனார் விதைத்த தமிழ்உணர்வு இன்றும் மங்காமல் தமிழ் ஆர்வலர்களிடம் உள்ளது. அவர்கள் இப்பணியில் வெற்றி பெறுவதே நாம் பேராசிரியருக்குப் படைக்கும் காணிக்கையாகும் என்பதை உணரவேண்டும். குறள்நெறி ஆங்கில இதழுக்கு இருந்த வரவேற்பாலும்…
சாதிச் சங்கங்களுக்குத் தடை – சி.இலக்குவனார்
சாதிச் சங்கங்களுக்குத் தடை தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்
தமிழர்களே எண்ணிப்பாருங்கள்! – சி.இலக்குவனார்
தமிழர்களே எண்ணிப்பாருங்கள்! தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்
இந்தியால் தமிழ் அழியாதாம்…! – சி.இலக்குவனார்
இந்தியால் தமிழ் அழியாதாம்…! தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் “வார இதழாக மாற்றக்கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா” என்றெல்லாம் வேண்டினர். வார இதழாக மாற்றுவதை விட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் இலக்குவனார் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இது குறித்த நாளிதழ்…
மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது! – தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார்
மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது! உரைக்கும் மொழியும் உண்ணும் உணவும் “மக்களிடையே சமநிலைக் கொள்கையைப் பரப்பும் செயலில்தான் இப்பொழுது கருத்து செலுத்துதல் வேண்டும். இந்தியைத் தடுத்தலோ தமிழைப் புகுத்தலோ பிறகு பார்த்துக் கொள்ளலாம்”; என்று சிலர் கருதுகின்றனர். ஒரு நாட்டின் வாழ்வியல் முறையும் பொருளியல் கொள்கையும் அவ்வப்போது தோன்றும் தலைவர்களுக்கு ஏற்ப மாறி அமையலாம். இன்று தனி உடைமைக் கொள்கையைப் பின்பற்றும் நாடு நாளை, பொது உடைமைக் கொள்கையைப் பின்பற்றலாம். இன்று முடியாட்சியில் உள்ள நாடு நாளை, குடியாட்சியை…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) சமய விடுமுறைகளும் பிராமணியச் செல்வாக்கின் அடையாளமே எனக்கூறி, ஒரே சமயம்,ஒரே மொழி, ஒரே இனம் முதலான ஒற்றை யாட்சிக்கு எதிர்ப்பை மக்களிடையே உருவாக்கினார். “பரதகண்ட முழுவதும் ஒரே ஆட்சி, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் எனக் கொள்ளவைத்துப் பலமொழிகளையும், இனங்களையும், இந்து ஆட்சி எனப் பாகிசுதானுக்குப் போட்டியாக ஒன்றை உருவாக்க எண்ணுகின்றனரோ என ஐயுற வேண்டியுள்ளது. இந்து மதம் என்பது பிராமணீயம் என்பதும் அதனைக்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து, இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள் என்றார் முத்தமிழ்க்காலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி பெரியார் அவர்கள், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டுப் பிரிவினையை வேண்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தேர்தலில் காங்கிரசுக்கட்சி வெற்றி பெற உழைத்துவிட்டுப் பின்னர்ப் பிரிவினை கேட்கப் போகிறேன் என்பது அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை. மொழிவழி மாநிலங்கள் உரிமையுடன் வாழ வேண்டுமானால் காங்கிரசுக்கட்சி மறையவேண்டும். காங்கிரசுக்கட்சியால்தான் மாநிலங்கள் உரிமையற்றுக் கிடக்கின்றன. ஒரே இந்தியா என்ற கொள்கையை உறுதியாகப்பற்றி நிற்கும் காங்கிரசை அகற்றினாலன்றிப் பிரிவினைக் கொள்கை வெற்றி…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 7/7 “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்;…