தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 : ஓய்வுக் காலப் பணி

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 3/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ்  1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 4/4 பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தமிழ் நூற்பதிப்பிலேயே தம் காலத்தை ஐயரவர்கள் கழித்து வந்தார். தம் வாழ்நாள் அனுபவங்களை விரிவான உரை நடையில் எழுதத் தொடங்கினார். பல பத்திரிகைகளின் மலருக்குக் கட்டுரைகள் வழங்கினார். கலைமகளில் மாதந் தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தார். அவர் கட்டுரைகளில் தமிழ் மக்களின் பழம் பெருமையையும் புலவர் பெருமக்களின் வரலாறுகளையும் பண்புகளையும் விளக்கி…

என் சரித்திரம்-உ. வே. சா. : அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 1/4

(உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை தொடர்ச்சி) என் சரித்திரம்மகாமகோபாத்தியாய முனைவர் உ. வே. சாமிநாதர்அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 1/4 சற்றேறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர் சமசுதானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்தும், தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில், தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து கல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போசனம்…

. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. : 3/4

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 2/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ்  1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – 3/4 சேலம் இராமசாமி முதலியார் தூண்டுதலினால் சமண நூலாகிய சிந்தாமணி நூலை ஆராய்ந்தார். சைன சமய உண்மைகளைச் சமணப் புலவர்களிடம் உரையாடித் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவக-சிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குத் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமதிப்பைத் தேடித் தந்தது. சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டும், சிலப்பதிகாரமும், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களும் வெளிவந்தன. புறநானுாறு…

உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை

என் சரித்திரம் சிவமயம்முகவுரை திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்“திருவேயென் செல்வமே தேனே வானோர்        செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்கஉருவேயென் னுறவேயென் னூனே ஊனி        னுள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்றகருவேயென் கற்பகமேகண்ணே கண்ணிற்        கருமணியே மணியாடுபாவாய் காவாய்அருவாய வல்வினை நோயடையா வண்ணம்        ஆவடுதண் டுறையுறையு மமரரேறே.”திருச்சிற்றம்பலம் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு தமிழன்பர் பலர் பாராட்டி வரும்போது எந்தையாரவர்கள் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் திரு மீனாட்சிசுந்தரம் (பிள்ளை)யவர்களை…

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.1/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4 ‘நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனால் அப்படியே நின்றுவிடவில்லை; எல்லாருடைய வற்புறுத்தலுக்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது.’(என் சரித்திரம் ; பக்கம் : 221-222)என்று சாமிநாத( ஐய)ரே…

உ.வே.சா.வின் என் சரித்திரம், பதிப்புரை

உ.சா.வின் என் சரித்திரம் பதிப்புரை ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை        எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனைபாடு பட்ட பதத்தெளி வெத்தனை        பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனைநாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு        நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனைகூட நோக்கினர்க் காற்றின வெத்தனை        கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!        – இரா.இராகவையங்கார்தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது. இந்நூலைக்…

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.1/4

சான்றோர் தமிழ் 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 1/4 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறுவது தஞ்சை மாவட்டம் ஆகும். ‘கலை மலிந்த தஞ்சை’ என்றும் தஞ்சை மாவட்டம் போற்றப் பெறும். ஆடல், பாடல்களும், அழகுக் கலைகளும் நிறைந்த மாவட்டமும் தமிழ் நாட்டில் அதுவேயாகும். ‘பெரிய கோயில்’ என்று சிறப்பாகப் பேசப்பெறும் முதலாம் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் அமைந்திருப்பதும் தஞ்சை மாவட்டத்திலேயேயாகும். வற்றாத வளம் கொழித்துக் காவிரிப் பேராறு பாய்ந்து வளம் சிறக்கும் நாடு தஞ்சை மண்ணேயாகும். இத்தகு பெருமை…

இலக்குவனார் பரப்பிய உள்ளேன் ஐயா. . .! – கே.பி.அம்பிகாபதி, தினமணி கதிர்

பள்ளிகள், கல்லூரிகளில் “எஸ் சார்’ என்று மாணவர்கள் வருகைப் பதிவைத் தெரிவித்த நிலையை மாற்றிய புகழுக்குச் சொந்தக்காரர் சி.இலக்குவனார். இவர் தமிழாசிரியர்,  பேராசிரியர்,  தமிழ் ஆய்வாளர்,   மொழிப் போர் தியாகி என்று பல்வேறு பன்முகங்களைக் கொண்டவர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில் 1909-ஆம் ஆண்டு நவ. 17-இல் பிறந்த இவர்,  1973-ஆம் ஆண்டு செப். 3-இல் மறைவுற்றார்.  முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆசிரியர்.  கவிஞர் இன்குலாப்,  முனைவர் கே. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன்…

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 – வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 13.0.0.0. நலம் நடைநலம்: ஒரு நூலை / ஆய்வு நூலை மிகக் கடினப்பட்டு, நூலாசிரியர் நெய்கிறார். அந்நூல் ஆய்ஞர், அறிஞர், கற்றார், கல்லார், சுவைஞர் என அனைவரிடமும் சென்று அகத்துள் பதிய வேண்டும். அவ்வாறு செலச்செல்வதற்கு நூலின் நடை நலம் மிக இன்றியமையாதது. அப்போதுதான், நூலாசிரியரின் ஆய்வுக்கும் அரிய உழைப்புக்கும் ஆன்ற பயன் ஊன்று நிலை தோன்றும்.              …

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி : நூலாய்வுக் கட்டுரை – 3/4 – வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 2/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4             இம்முப்பொருள்களும் கீழ்க்காணும் 2 வகைப்பாடுகளில் வழங்கப்பட்டுள்ளன.            முதல் பொருளும் கருப்பொருளும் 13 வகைகளில் வழங்கப் பட்டுள்ளன. அவை 1 முதல் 13 தலைப்புகளில் அமைந்துள்ளன. அவை: 1.அறிமுகம்                     2. காமம் 3.பாடல் வடிவம்               4.திணைப் பகுப்பு 5.நாடக வழக்கு               6.அகப்பொருள் தலைமக்கள் 7.பெயர்  வரும் முறைமை  8.கூற்று முறைமை 9.நிலம்                          10.பொழுது             11.பிரிவு [பொது]              12.களவு   …

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி:நூலாய்வுக் கட்டுரை – 2/4 – வெ.அரங்கராசன்

(திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 1/4 தொடர்ச்சி) முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 2/4 மூன்றாம் பக்கம் முதல் எட்டாவது பக்கம்வரை நூலாசிரியரின் விரிவான — விளக்கமான முன்னுரை  பக்கம் 3 முதல் 8 வரை 6 பக்கங்களில் விளங்குகின்றது. அதில் கீழ்க் காணும் கருத்தாக்கங்கள் கூறப்பட்டுள்ளன. 1. அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்கள்   மாந்தர்க்கு  உயர்நெறி வழங்கத் திருவள்ளுவர்  எண்ணியமை 2. தலைவன், தலைவி பெறத்தக்க இன்பத்தை  மூன்றாம் பாலாக ஆக்கியமை…

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி: நூலாய்வுக் கட்டுரை – 1/4 – வெ.அரங்கராசன்

முனைவர் கு.மோகனராசின் திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 1/4 நுழைவாயில்:             1-8-1973 ஆண்டு முதல் 4-2004 வரை சென்னைப் பல்கலைக் கழக இலக்கியத் துறையில் திருக்குறள் ஆய்வுப் பகுதியில் தகுதிமிகு பேராசிரியராகப் பணியாற்றிய 31 ஆண்டுகளில் திருக்குறள் ஆய்வில் உலகச் சாதனைகள் பற்பல புரிந்த  உயர்சாதனையர் நூலாசிரியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள். இந்நூல் வெளியிட்டப்பட்ட 4.2004 வரை நூலாசிரியரது சாதனைகள் 17. அவற்றின் பட்டியல் நூலின் பின்னட்டையில் பதிவு பெற்றுள்ளது. அவற்றை இங்குக் காண்போம். திருக்குறள் நான்காவது எழுச்சிக்…