கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய இழப்பு, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழகத்திற்கும் நேர்ந்த ஒரு பேரிழப்பு. அதுவும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அடுத்தடுத்து நல்லறிஞர்கள் பலரை தமிழகம் இழந்து வருவது பெரிதும் வருந்தத்தக்க ஒன்று.   பாரதிதாசன் அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞன். அவர் இளமையிலேயே தமது ஆசிரியர் தொழிலையும் கைவிட்டு நானறிய நாற்பது ஆண்டுகளாக நற்றமிழுக்கு நற்றொண்டு புரிந்து வந்த நல்லறிஞன். அது மட்டுமல்ல. கவிதை உலகில் ஒரு புதிய திருப்பத்தையே உண்டாக்கிவிட்ட அரும்பெருங் கவிஞன்.  …