‘அகரமுதல’ கணிப்பு சரியானது. இனியேனும் அரசியல் மேதைகளின்(!) ஊடக உளறல்களை நிறுத்தட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
‘அகரமுதல’ கணிப்பு சரியானது. இனியேனும் அரசியல் மேதைகளின்(!) ஊடக உளறல்களை நிறுத்தட்டும்! “இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்!” எனத் தெரிவித்திருந்தோம். அதன்படியே சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வாகை சூடியுள்ளது. “த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வலுவாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தோம். தேர்தல்முடிவுகள் இதன் வலுவை மெய்ப்பித்துள்ளது. “த.வெ.க. வெற்றி பெற்றாலும் உண்மையான வெற்றியாகக் குறிப்பிடாமல் அதிகார வலிமையால் பெற்ற வெற்றி என்றுதான் கூறுவர். கூறிவிட்டுப் போகட்டும்.” என்றோம். அதன்படிதான்…
ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆட்சி நிலைக்க இடைத்தேர்தல்களில் த.வெ.க.வாகை சூடட்டும்! வரும் அட்டோபர் 6 அன்று மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள்அடிப்படையில் கணக்கிட்டு யார் வெற்றி பெறுவார் எனக் கணிப்பது வழக்கம். ஆனால் பொதுத்தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் இடையில் கட்சி அணிகள் இடம் மாறியதால் அதற்கேற்பவே கணக்கிட வேண்டும். பொதுத்தேர்தலின்போது இருந்த கூட்டணிக் கட்சிகள் இன்றைக்குத் தி.மு.க. கூட்டணியிலும் அதிமுக கூட்டணியிலும் இல்லை. அதே நேரம் த.வெ.க. கூட்டணி புதிய கட்சிகளை இணைத்துள்ளது. இதனால் அமைந்த மதச்சார்பற்ற…
தோழர் தியாகு எழுதுகிறார் : தேரான் தெளிவு
(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!- தொடர்ச்சி) தேரான் தெளிவு ”தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்” திருக்குறள் 510 நடைபெறும் 2024 பொதுத் தேர்தல் குறித்துத் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்களிடையே பெருங்கவலையும் அக்கறையும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் ஊடகங்கள் இவ்வகையில் செய்தியும் கருத்தும் வெளியிட்டு வருகின்றன. சில காட்சி ஊடகங்ளுக்கு நான் செவ்வி கொடுத்துள்ளேன். சில இணைய இதழ்களுக்குக் கட்டுரையும் எழுதிக் கொடுத்துள்ளேன். உலகத்…
தேராச் செய்வினை தீராத இன்னல் தரும் ! – பழ.தமிழாளன்
தக்கவர்க்கு வாக்களிப்பீர் தேராச் செய்வினை தீராத இன்னல் தரும் ! 1 சீரார்க்கும் எண்ணமுடன் திகழ்கதிராம் எழுச்சிநிறை உணர்வே பெற்றுச் செந்தமிழை இனம்நாட்டை நெஞ்சகத்தே வைப்பவரைத் தேரல் வேண்டும் ! தேராதே கட்சியையும் தேர்தலிலே நிற்ப ரையுந் தேர்ந்தெ டுத்தால் தீராத இன்னலையே இருகையால் வணங்கியுமே அழைத்தல் ஒக்கும் ! கூரான வாளெடுத்துக் கூடியுள்ள தம்முயி ரைச் செகுத்தல் போல குடியாட்சி மாண்பழிக்கும் கட்சிக்கே வாக்கினையே அளிப்போ மாயின் ஏரார்த்த தமிழ்மரபும் …
புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும்- இலக்குவனார் திருவள்ளுவன்
புதுச்சேரியில் இந்தியைப் புகுத்தும் பா.ச.க.வும் நம் தேர்தல் கடமையும் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் புதுச்சேரியில் கல்விக்கொள்கையில் மாற்றம் செய்து மத்தியக்கல்வி வாரியக்கல்வி முறையைப் புகுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். பொம்மைப் பதவியான ஆளுநர் பதவியில் இருந்த தமிழிசையால் அரசின் கல்விக் கொள்கையில் குறுக்கிட்டுப் புகுத்தப்பட்டதே இக் கொள்கை. பா.ச.க. வின் வெளிப்படையான கொள்கையே நாட்டை இந்துமயமாகவும் இந்திய மயமாகவும் மாற்றுவதுதான். இதற்காகவே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி முறை, ஒரே மொழி என்பனவற்றை வலியுறுத்தி வருகிறது; வாய்ப்புள்ள நேர்வுகளில் எல்லாம் அதற்கேற்பவே செயற்பட்டு வருகிறது….
தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் ! தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபடும் வண்ணம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழ் நாட்டின் நலன், தமிழ் மக்கள் முன்னேற்றம், தமிழ்மொழி வளர்ச்சி முதலியவற்றில் கருத்து செலுத்தி வாகை சூட வாழ்த்துகிறோம். இவர் கட்சியைத் தொடங்குகிறார் எனச் செய்திகள் வந்த பொழுதே இவர் ‘விசய்’ என்று இல்லாமல் வெற்றி என்றோ வாகை என்றோ வரும் வகையில் பெயர் சூட்டினால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்…
ஈரோட்டில் மு.க.தாலினுக்குப் பாராட்டு! எ.ப.சாமிக்குப் பாடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈரோட்டில் மு.க.தாலினுக்குப் பாராட்டு! எ.ப.சாமிக்குப் பாடம்! ஈரோட்டுக் கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் முதல்வர் மு.க.தாலினுக்குப் பிறந்த நாள் பரிசாகப் பாராட்டி அளித்ததே கோவனின் வெற்றி. ஒருவேளை குறைவான வாக்கு வேறுபாட்டில் இவர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட, முதல்வர் மு.க.தாலினின் தோல்வியாகத், தி.முக. அரசின் தோல்வியாகப் பூதாகரமாகப் படம் பிடிக்கப்படும். ஆட்சியில் குறைகளில்லாமல் இல்லை. ஆனால், மக்கள் குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்.(திருவள்ளுவர், திருக்குறள் 504) என ஆராய்ந்து மு.க.தாலின் தலைமையிலான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பேராயக்கட்சி வேட்பாளர்…
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் மன்னிப்பு கேட்பாரா? வாகை சூடுவாரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் மன்னிப்பு கேட்பாரா? வாகை சூடுவாரா? ஈரோடு கிழக்குச் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27.02.2023 அன்று நடைபெற உள்ளது. தற்சார்பு வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும் தி.மு.க.வின் கூட்டணியில் பேராயக்கட்சி சார்பில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் போட்டியிடுகிறார். எதிர் நிலையில் அஇஅதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்து, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா முதலிய பலரும் நின்றாலும் இவர்களுள் போட்டி பேராயக்கட்சிக்கும் அதிமுகவிற்கும் தான். பாசகவின் சதியால் பன்னீர்செல்வம் அணி அதிமுக…
