தமிழக நலனைக் கருத்தில் கொண்டு அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: செயலலிதா வேண்டுகோள்

  திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளரான கே.ஆர்.பி பிரபாகரனை ஆதரித்து முதலமைச்சர் செயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-  அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவைற்றை முன்வைத்து, தேர்தலைச் சந்திக்கும் அதிமுகவுக்கு மக்களாகிய நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழக நலனை கருத்தில் கொண்டு நன்றாகச் சிந்தித்து அதிமுகவுக்கு வாக்களியுங்கள். தன் நலமாகச் செயல்படும் திமுக,  2-த(2ஜி)ஊழலில் தமிழகத்தைத் தலைகுனியச் செய்துவிட்டது. அக்கட்சிக்கு வருகின்ற தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். 2006 இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் வரை மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம்,…

காங்கிரசு, பாசக அல்லாத ஆட்சியே இலட்சியம்: செயலலிதா பேச்சு

ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல்  பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர்  செயலலிதா பேசியதாவது: பாச கவின் “ஆ” அணிதான் அதிமுக என்றும், பாசகவை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. . எங்களைப் பொருத்தவரை நாங்கள் யாருக்கும் “ஆ” அணி இல்லை. எங்கள் அணிதான் முதன்மையான அணி. காங்கிரசு, பாசக அல்லாத மத்திய ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் இலட்சியம். இதை 2012-இல் நடந்த அதிமுக பொதுக் குழுவிலேயே நான் அறிவித்தேன். இந்த இலட்சியம் நிறைவேற 40 மக்களவைத்…

தேர்தலுக்காக செயலலிதா சமயச்சார்பற்ற வேடம் அணிந்துள்ளார்: கனிமொழி பேச்சு

நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தேவதாச சுந்தரத்தை ஆதரித்து களக்காடு, வள்ளியூர், நெல்லை நகரம், மேலப்பாளையம் ஆகிய இடங்களில்  மாநிலங்களவை உறுப்பினர்  கனிமொழி  பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:– அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. நெல்லை மாவட்டத்திற்கு, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது. தாமிரபரணி, கருமேனி, நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து 1, 2– ஆம் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அ.தி.மு.க. அரசு நிதி…

மோடியால் தமிழ் மக்களைக் காக்க முடியுமா? கருணாநிதி கேள்வி

  காஞ்சிபுரம்: ”தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை; தி.மு.க., அலைதான் வீசுகிறது. வடக்கிலிருந்து வருவதாக கூறப்படும் மோடி அலை தமிழக மக்களைக் காக்குமா?,” என, தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். காஞ்சிபுரத்தில் தி.மு.க., வேட்பாளர், செல்வத்தை ஆதரித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: “இன்றைக்கு ஏதோ அலை வீசுவதாகச் சொல்கிறார்கள். அந்த அலையெல்லாம் நம் இயக்கத்தின் அலை. மோடி அலை என்கிறார்கள்; அது வடக்கிலிருந்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். அந்த அலை தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்குமா? நேற்றைக்கு வந்த மோடி…

மோடி அரசு பற்றி மாயத் தோற்றம் குசராத்தை விட தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம்

 புள்ளி விவரங்களை அள்ளிவீசிய முதல்வர்   குசராத்துதான் முதன்மையான மாநிலம் என்பது ஒரு மாய த் தோற்றம் என்றும் பல துறைகளில் குசராத்தை விட தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளது என்றும் முதல்வர் செயலலிதா புள்ளிவிவரங்களுடன் பேசினார். கிருட்டிணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூசாரிப்பட்டி கூட்டுச்சாலை என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல்  பரப்புரைக்கூட்டத்தில் முதல்வர் செயலலிதா பேசியதாவது; சென்னை, மீனம்பாக்கத்தில் நடந்த, தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், பா.ச.,  தலைமயர் வேட்பாளரும், குசராத்து முதல்வருமான நரேந்திர மோடி, அ.தி.மு.க.,வை, தி.மு.க., உடன் இணைத்து,…