கருத்துக் கதிர்கள் 06-08 – இலக்குவனார் திருவள்ளுவன் [06. திருமாவளவன் அவை நடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]

கருத்துக் கதிர்கள் 06-08 : [06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும். 07. அ.ம.மு.க., ம.தி.மு.க. போல் சிறுத்துப் போக வேண்டுமா? 08. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டவர் இடம்பெற வேண்டும்!]  06. திருமாவளவன் அவைநடத்துநர் பட்டிப்பில் இடம் பெற வேண்டும்.  நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரும் துணைத் தலைவரும் இல்லாத நேரங்களில் அவையை நடத்துவதற்காக அவை நடத்துநர் பட்டிப்பு (Panel of Chairpersons) உருவாக்குவர். பதின்மருக்குக் குறையாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவர். அவைத்தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி ஒழிவிடமானால், இவர்கள் அந்த இடத்திற்கு…

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

அ.ம.மு.க.வினர் தளர வேண்டா!   பதவி பறிக்கப்பட்டவர்களில் சிலராவது வெற்றி காண்பர். கணிசமான வாக்குகளைப் பெற்று  கருதத்தக்க இடத்தைப் பெறலாம் என எண்ணிய தினகரனின் அ.ம.மு.க. பாதாளத்தில் விழுந்துள்ளது. ஒரு தொகுதியில்கூடப் பிணைத்தொகையைத் திரும்பப் பெறும் வகையில் வாக்குகளைப் பெறவில்லை. சில இடங்களில் நான்காவது இடமும் ஐந்தாவது இடமும் பெற்றுள்ளது. இந்தத் தோல்வி அடுத்தடுத்த சூழ்ச்சி வலைகளால் உருவானது. என்றாலும் சூழ்ச்சியையும் வெல்வதுதானே திறமை. இனி, சூழ்ச்சிகளை வெல்லும் வகையில் திறமாகச் செயல்பட்டால் கட்சி வளரும். “வீழ்வது இயற்கை. எழுவதே வாழ்க்கை” என்று தன்னம்பிக்கை…

கருத்துக் கதிர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்[1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி. 2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3. மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும். 4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.]

கருத்துக் கதிர்கள் : 1. தமிழிசைக்கு அமைச்சர் பதவி.  2. நாங்குநேரி ம.தி.மு.க.விற்கு. 3.  மாநிலங்களவைக்குச் சுப.வீ.யும் வேல்முருகனும்.  4. கட்சி வேறுபாடு பார்த்தால் பா.ச.க.விற்கு இழிவு. 5. காங்கிரசிற்குக் கூட்டுத் தலைமை.   தமிழிசைக்கு அமைச்சர் பதவி : தேர்தலில் தோற்றால் அமைச்சர் அல்லது ஆளுநர் ஆக்குவது ஆளும் கட்சிகளின் மரபுதான். அந்த வகையில் பா.ச.க.வின் தமிழ்நாட்டுத் தலைவி மரு. தமிழிசை செளந்தரராசனை அமைச்சராக்குவது பா.ச.க.விற்கு நல்லது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பா.ச.க.வின் தலைவராகத் தமிழிசை அமர்த்தப்படவேண்டும் என எழுதியிருந்தோம். அப்பொழுது எச்சு.இராசா…

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பொழுது நான் புறநகர் ஒன்றில் இருந்தேன். என் அலைபேசியில் இணைய இணைப்பு சரியாகக் கிடைக்கவில்லை. எனவே, முடிவுகளைப் பார்க்க இயலவில்லை. ஆனால், அன்பர்கள் சிலர் அடுத்தடுத்து ஒரே மாதிரி பேசினர். நான் அவர்களுக்கு ஒரே மாதிரிதான் மறுமொழி உரைத்தேன். அவர்கள், “நீங்கள் தேர்தல்பற்றியும் “பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது!” என்றும் எழுதியவை மிகச் சரி. ஆனால், பா.ச.க. அல்லவா பெரும்பான்மை பெற்று வருகிறது” என்றனர். நான் அதற்குப் “பா.ச.க. கட்சி அளவில் பெரும்பான்மை…

மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்!   மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! தமிழ்நாடு-புதுவையில் ஓரு தொகுதி நீங்கலாக அனைத்திலும் தி.மு.க. கூட்டணியை வாகை சூட வைத்துள்ளார் மு.க.தாலின்.  அவரது தனித்தன்மையை ஏற்க வேண்டுமே தவிர, அவரின் தந்தை கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். எனினும் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசுநருக்கும் விடையிறுக்கும் முகமாக வெற்றிக் கனிகளைப் பறித்துள்ளார். சிறப்பான வெற்றிக்கு அடிததளமாகவும் அரணாகவும் இருந்த மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்.  தலைமைய(மைச்ச)ர் பதவி ஆசையில் கூட்டணிக்கு உடன்படாத மே.வங்க, உ.பி.  முதலான வட மாநிலத் தலைவர்கள் மு.க.தாலின் வழியைப்…

நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி காண வாழ்த்த வேண்டும். இலக்கை அடைந்து விட்டார் என்றால்  – வெற்றி கண்டுவிட்டார் என்றால்  – பாராட்ட வேண்டும். அந்த வகையில் இரண்டாம் முறையாகத் தலைமை யமைச்சர் பொறுப்பேற்கும் வகையில் வெற்றி கண்டுள்ள நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்! இலக்கு மட்டுமல்ல, இலக்கை அடையும் வழியும் நேர்மையானதாக – அறவழிப்பட்டதாக – இருக்க வேண்டும் என்பது தமிழர் நெறி. “எந்த வழியில் சென்றேனும் இலக்கை அடை” என்பது ஆரிய நெறி. இன்றைய தேர்தல் நெறி என்பது இரண்டாம் வகையைச்…

பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது! – இலக்குவனார் திருவள்ளுவன்

பாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது! நடந்து முடிந்த  நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது. பா.ச.க வாக்கு எண்ணிக்கையின் பொழுது குறுக்கு வழியில் வெற்றி பெற்றால் அதற்குச் சார்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தீட்டப்பட்ட நாடகம் என இதனைப் பொதுமக்களே கூறுகின்றனர். வாக்கிற்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு குறித்து நாம் பின்வருவனவற்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். எந்தெந்த வாக்குச்சாவடிகளில் எவ்வப்பொழுது எத்தனை பேரிடம் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது என்ற விவரம் இல்லை. இதுவரை ஒருவர்கூட…

கமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்!  குற்றவாளி ஒருவரை அவரது மதம், சாதி, கட்சி, நாடு, ஊர், இனம், அமைப்பு சார்ந்து குற்றவாளியாகத் திரிப்பது தவறு. ஆனால், பல நேரங்களில் அவ்வாறுதான் செய்திகள் வருகின்றன. இந்த ஊர்க்காரர் கைது, அல்லது இந்தச் சாதிக்காரர் செய்த கொலை இந்த மதத்துக்காரர் செய்த குண்டு வெடிப்பு என்பன போன்ற செய்திகளைப் பார்க்கிறோம். தனி மனிதத் தவறுகளைப் பொதுமை ஆக்குவது தவறாகும். ஆனால், அதே நேரம், ஒரு மதம் சார்ந்த அல்லது கோட்பாடு சார்ந்த குழு அல்லது அமைப்பு தங்களின்…

இலக்குவனார் ஆராய்ச்சி நூலகம் – நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லம் – தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் படிப்பகம் ஆக உருவாக்க நடவடிக்கை எடுப்போம்!- நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதித் தேர்தல் அறிக்கை 

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக!   தேர்தலை நடத்துவதற்கு ஒரு நடுநிலை அமைப்பு தேவை என்பதால்தான் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது.  மக்களின் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது தம்மை ஆளும் மக்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவது. அதற்கான வாய்ப்பைக்கூடத் தராத செயல்பாட்டுக் குறைவான தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்?  தேர்தலின் பொழுது வாக்காளர் விழிப்புணர்வுப் பரப்புரைகள் நடத்துகின்றனர். உண்மையில் விழிப்புணர்வு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத் தேவை. நமக்கு 100விழுக்காடு வாக்குப்பதிவிற்காகப் பரப்புரை தேவையில்லை. 100 விழுக்காடு வாக்காளர் பதிவு விழிப்புணர்வுதான்…

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க! எல்லா அமைப்பையும்போல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் நிறைகளும் உண்டு; குறைகளும் உண்டு. ஆனால், குறைகளற்றுச் செயல்பட்டால்தான் தேர்தல்கள் சிறப்பாக நடைபெறும். எனவே, இதன் குறைகளைப்பற்றிச் சில கூற விரும்புகிறேன். சான்றுக்குச் சில:   புழுதிவாக்கம் வாக்குப்பதிவு மையத்தில் கடந்த தேர்தலில் சில வாக்குப்பதிவு அறைகளின் முன்னர்ப் பந்தல் போடாமல் வெயிலில் வாட விட்டிருந்தனர். இது குறித்து முறையிட்டதும் இங்கெல்லாம் வெயில் வராது என எண்ணிப் போடவில்லை என்ற அதிகாரிகள் சில மணி நேரத்தில் பந்தல்…

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக!  வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன்? வேலூரில்  தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர்….