திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வேண்டா! தமிழகத்தில் காலி யாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய நான்கு  நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மே 19 அன்று  இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உரிய தேர்தல் பணிகளும் தொடங்கி விட்டன. இவற்றுள் திருப்பரங்குன்றம் தொகுதிக்குத் தேர்தல் தேவையில்லை. முந்தைய இடைத்தேர்தலில் இரண்டாமிடம் பெற்ற மரு.சரவணனையே வென்றவராக அறிவிக்க வேண்டும். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத்  தொகுதியில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எசு. எம். சீனிவேல் தேர்தல்…

காணாமல் போவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

காணாமல் போவர்!     நேற்றுவரை வந்தவர்கள் நாளை காணாமல் போவர்   விரல் மை காயும் முன்னர் மாயமாய் மறைவர்   மறந்து போய் நன்றி சொல்ல வரலாம் சிலர்   தவறாமல் பலர் தொகுதிப் பக்கம் காணாமல் போவர்   நம் நாட்டுத் தேர்தலின் சிறப்பு இதுதான்   இருந்தாலும் நாம் தவறாமல் வாக்களிப்போம்!   இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாக்களிக்கும் கடமை யாற்றுங்கள்! சித்திரை 05, 2050 வியாழன் 18.04.2019 வாக்குப்பதிவு நாளன்று நாம் அனைவரும் தவறாமல் ஆற்ற வேண்டிய கடமை மறவாமல் வாக்களிப்பதே! வேறு என்ன பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாம் வாக்களிக்க வேண்டும். நாம் வாக்களித்து நாட்டின் போக்கு மாறப்போகிறதா? என அலட்சியமாக இல்லாமல் ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.  வன்னியர் வாக்கு அன்னியர்க் கில்லை  அன்னியர் வாக்கு வன்னியர்க் கில்லை நாடார் வாக்கு போடார் பிறர்க்கு செட்டியார் வாக்கு கிட்டிடா பிறர்க்கு  தேவர்…

இராகுல் வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இராகுல் வெற்றி பெறட்டும்!  தமிழ்நாட்டில் காங்.தோற்கட்டும்! கட்சி முறையில் இன்றித் தனிப்பட்ட முறையில் பார்த்தால் இராகுலிடம் தற்சார்புச் சிந்தனையும் மனத்தில் சரி என்று பட்டதை ஆற்றும் துணிவும் உள்ளமை புரிகிறது. கலைஞர் கருணாநிதியிடம் ஒத்துப்போகாத அவர், தாலினுடன் இணைந்து செயலாற்றுவதும் அவரது தற்சார்பின் விளைவே ஆகும். பேராயக்(காங்.)கட்சியும் அடிப்படையில்   பா.ச.க.போன்றதே. எனவேதான் இராகுல் தன்னை வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிட்டும் மதத்தைக் குறிப்பிட்டும் அடையாளம் காட்டிக் கொள்கிறார். பசுக்கள் காப்பகம் குறித்த அவர் கருத்தும் அத்தகையதே. கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்கிறவர் உயர்…

அவர்கள் வருகிறார்கள்! – தமிழ்சிவா

அவர்கள் வருகிறார்கள்!    வினையை விதைத்துத் திணையை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்   குறிஞ்சியைக் குப்பையாக்கினார்கள் முல்லையை ஆதியோகி ஆக்கினார்கள் மருதத்தை உந்துகளில் ஏற்றினார்கள் நெய்தலைக் கூவமாக்கினார்கள் பாலையைப் பாழாக்கினார்கள்   நாளெல்லாம் பொழுதெல்லாம் வினைகளை விதைத்துத் திணைகளை அறுத்தவர்கள் வருகிறார்கள் வருகிறார்கள்   கானுறு வேங்கையைக் ‘காசு’ க்குப் பிடித்தார்கள் கழிவுப் பொந்துகளில் எலிகளென வளர்த்தார்கள் வெண்குருதியைக் குடத்தினில் வாங்க நம்குருதியையே சிந்த வைத்தார்கள்   ஊன்துவை அடிசில் உண்டு தேள்கடுப்பன்ன ஊறல் மாந்தி தெளியாச் சிந்தனை கொண்டு திரண்டு வருகிறது கூட்டம்…

தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்

தன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல்  தேர்தல் என்பது கூட்டணி உலகமாக மாறிவிட்டது. எனினும் துணிந்து கூட்டணி இன்றிப் போட்டியிடுவோர் இருக்கின்றனர். அவர்களுள் நாம்தமிழர் கட்சி சீமான், அமமுக தினகரன், மக்கள்நீதி மையத்தின் கமல் பாராட்டிற்குரியவர்கள். தன்னம்பிக்கையுடன் கூட்டணி வைத்துள்ளனர் இவர்கள். நாம் தமிழர் கட்சி வளர்ந்து வரும் அமைப்பு. இதனைக்கண்டு ஆளுங்கட்சி அஞ்சுவதே இதன் வளர்ச்சிக்குச் சான்று. அந்த அச்சத்தின் காரணமாகத்தான் கடந்த தேர்தல் சின்னமான இரட்டை மெழுகினைக் கிடைக்கச் செய்யாமல் கரும்பு உழவர் சின்னம் அளித்துள்ளனர். அப்படியும் அச்சம் போகவில்லை. வாக்குப்…

தேர்தல் கணக்குகள் சரியே! விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் கணக்குகள் சரியே!  விடைகள் தவறாகும்.  கட்சிகள் எண்ணிக்கை குறைய வேண்டும். அவற்றின் முதற் கட்டமாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று பேரா.சி.இலக்குவனார் கூறியுள்ளார். அவர் சொன்னது, ஓரளவேனும் ஒத்துப்போகும் கொள்கைகளின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது. ஆனால், செல்வ வளத்தைப் பெருக்க அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலேயே கூட்டணி அமைவதால் நாட்டு நலனுக்கு எதிராக அமைகிறது. தனித்துப் போட்டியிடுவதை விடக் கூட்டணி அமைப்பதால் சில வெற்றிகளையாவது சந்திக்கலாம்; தோல்வி யடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்று கருதுவதாலேயே  கட்சிகள் கூட்டணி…

வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? – இலக்குவனார் திருவள்ளுவன்

வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? 2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்காகவும் உடன் நடத்தப்படுகின்ற இடைத் தேர்தல்களுக்காகவும் வழக்கம்போல் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி வைத்துள்ளன. வழக்கம்போல் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துச் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் பாசகவுடனும் பாசகவுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் வைத்துள்ள கூட்டணி மக்கள் யாவரும் அறிந்ததே.  ஆனால் இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்றால் எதிர் விளைவுகளால் வெற்றி மாலை நழுவிப்போகும் என்பதே உண்மை. வாக்காளர்களை விலைக்கு வாங்கி வாக்கு…

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்! வாகை மாலை அணிவிப்பீர்!

புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 8 பேர் போட்டி இடுகின்றனர். அவர்களுள் கால்பந்து சின்னத்தில் தனியராக முனைவர் க.தமிழமல்லன் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் அறிக்கை வருமாறு: அனைவரும் வாழ்க! அனைவரும் உயர்க!       முனைவர் க.தமிழமல்லன் சிறந்த வேட்பாளர்! முனைவர் க.தமிழமல்லன் தமிழ்ஆசிரியர் (ஓ) , பாவலர், இதழ்ஆசிரியர், தனித்தமிழ்இயக்கத் தலைவர். அவர் ஒழுக்கம் உடையவர். நேர்மையானவர். துாய்மையானவர். முனைவர் க.தமிழமல்லன்! சிறந்த அறிஞர், உயர்கல்வி கற்றவர், பல நுால்களை இயற்றியவர். வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை 26 ஆண்டுகளாக…

தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை!- இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை! தேர்தல் ஆணையத்தின் அறமுறையற்ற செயல்பாடுகளைக் கொடுங்கோலாட்சியின் செயல்பாடுகளுடன்தான் ஒப்பிட முடியும். மக்களாட்சியின் அடையாளமாகத் திகழ்வது தேர்தல். தேர்தலில் போட்டியிடுவோருக்குரிய மக்களாட்சிக் கடமைகளை ஆற்ற உதவ வேண்டியது தேர்தல் ஆணையத்தின் அடிப்படைப் பணி. ஆனால் கட்சிகளுக்கேற்றவாறு மாறுபட்ட அளவுகோல்களைக் கொண்டு சூழ்நிலைகளை ஆராய்ந்து தனக்குரிய கடமையிலிருந்து தவறுவதே தேர்தல் ஆணையத்தின் பணியாக உள்ளது. நடுநிலையாளர் என்ன சொல்லுவார்கள் என்ற அச்சம் இன்றித் துணிந்து தவறுகளைச் செய்கிறார்கள் என்றால் இதனை எங்ஙனம் செங்கோன்மையாகக் கூற முடியும்? ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு ஓர்…

ஊழல் ஒழிய கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஊழல் ஒழிய 5 ஆண்டுகளேனும் கட்சிசார் தேர்தல் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தலுக்கான செலவுப் பெருக்கமும் தேர்தலில் வழங்கப்படும் முறையற்ற அன்பளிப்புகளும் ஊழல் மிகுதிக்கு முதன்மைக் காரணங்களாகும். தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கூறிப் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க முன் வரும் சிறிய கட்சிகள், பெரியகட்சிகளுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறதோ அதே தொகுதிகளைத்தான் கேட்கின்றனர். அது மட்டுமல்ல. தேர்தல் செலவுகளையும் பெரிய கட்சியிடமே கேட்டுப் பெறுகின்றனர். தொகுதி உடன்பாட்டையே முறையற்ற வழியில் பணத்தை அளித்தும் கொடுத்தும் மேற்கொள்ளும் இக்கட்சிகள் வெற்றிக்குப் பின் அல்லது…

பாவம் வைகோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

பாவம் வைகோ! கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ம.தி.மு.க.வை வைகோவே ஆக்குகிறார். பிற கட்சித் தலைவர்களாலும் பாராட்டப் பெறுபவர் வைகோ. மக்கள் நலன்களுக்காகத் துணிந்து போராடுபவர் புரட்சிப்புயல் என அழைக்கப்பெறும் வைகோ. நாடாளுமன்றத் தேர்தல்களில் 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் முறையே 3,4, 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. 2006இல் சட்டமன்றத்தேர்தல்களில் போட்டியிட்டு 6 இடங்களை வென்றது. ஆனால், 2016 இல்  ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. என்றாலும் உலக அளவிலான அவர் மீதான மதிப்பு குறையவில்லை. இருப்பினும் அவர் கட்சிக்கு ஒற்றைத்…