தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.2 – புலவர் கா.கோவிந்தன்- தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 3 2.தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை தமிழர், தென்னிந்திய மண்ணுக்குரியவர் ஓரின மக்களின் நாகரீகம், அவர் வாழும் மண்ணுக்கு உரியதாயின். அந்நாகரீகம், அம்மக்கள், பிற இனமக்களோடு தொடர்பு கொள்வதற்கு முன்பே வளர்ந்து முழுமை பெற்ற ஒன்றாகக் காணப்படுமாயின், அந்நிலைக்கு, அம்மக்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலை, அம்மக்கள் மீது செலுத்திய ஆட்சியின் விளைவே முழுமுதல் காரணமாம். ஓரின மக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழ்நிலையோடு தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு வந்ததன்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.2 – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.1 – புலவர் கா.கோவிந்தன் – தொடர்ச்சி) தமிழர் பண்பாடு(தொடக்க காலம் முதல் கி.பி. 600 வரை) 1.முன்னுரை – தொடர்ச்சி சென்னைப் பல்கலைக்கழகத்தின், இந்திய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறைகளின் பேராசிரியராகிய முதுபெரும் அறிஞர் திருவாளர் எசு.கிருட்டிணசாமி ஐயங்கார் அவர்கள், பழந்தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த பண்டைத்தமிழ் அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் பற்றிய செய்திகள் அவ்வளவையும் துருவித் துருவி ஆய்ந்து வெளிப்படுத்தித் தம்முடைய பல்வேறு நூல்களில் திறன் ஆய்வு செய்துள்ளார், ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைக்காலத்து மக்களின் வாழ்க்கைமுறை பற்றிய…
ஊர்ச்சந்தை, சென்னை
தை 24, 2047 / பிப்.07, 2016 காலை 09.00 சென்னை மல்லர் கம்பம் எனும் மரபு வீர விளையாட்டு காண வாரீர்! சென்னையில் ஊர்ச் சந்தை – 2! செம்மையின் ஊர்ச் சந்தை மீண்டும் சென்னையில் நிகழவுள்ளது. முதல் சந்தை கடந்த சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சந்தை பிப்பிரவரி 7 ஆம் நாள் கூடுகிறது. இந்த நிகழ்வு ‘செம்மைச் சமூகம்’ எனும் அமைப்பினால் நடத்தப்படுகிறது. மரபுக்குத் திரும்பும் விருப்பம் கொண்டோரின் கூடல்தான் செம்மைச் சமூகம் ஆகும். ஊர்ச் சந்தை…
உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே!
உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே! நடுநிலக் கடலைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களினம் இந்திய தீவக்குறையில் தோன்றியது என்றே தீர்மானிக்கலாம்… இத்தீவக்குறை, தென்னிந்தியாவை ஆப்பிரிக்காவோடு இணைந்திருந்ததும், சிந்துகங்கை ஆறுகளின் பள்ளத்தாக்கு அமையாத காலத்தில் கடலில் மூழ்கியதுமான குமரிக் கண்டத்தில் இருந்ததாகும். இம்மாநிலமே திராவிடரின் மூலத் தாயகமாகும். ….. ….. ….. எனவே, திராவிடப் பண்புகள் இந்திய நாகரிகத்தில் மட்டும் காணப்படவில்லை; சிறந்த நாகரிகச் சிறப்பினை அடைந்திருந்த கிரீக்கு, சுமேரியா, பாபிலோனியா, பாலினீசியா போன்ற நாடுகளிலும் மற்றும் பண்டை உலகின் நாகரீக நாடுகள் பலவற்றிலும்…
திருமலை மன்னரின் அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு
மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார். “தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக, தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல்-தொல்லியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.செயக்குமார் கள ஆய்வுமேற்கொண்டார். அப்பொழுது மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில், திருமலை(நாயக்க) மன்னரின் (கி.பி.1623- 1659) அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டன எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை…
கரூரில் தமிழக அரசு சார்பில் ஓவியக்காட்சி
தமிழக அரசின் கலை-பண்பாட்டுத்துறை சார்பில், நலிந்த கலைகளை வளர்க்கும் வகையிலும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், மாவட்டந்தோறும் கலைக் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒருபகுதியாக ஓவியக்கலை குறித்த கண்காட்சி கரூர் குமரன் நகராட்சி பள்ளியில் மாசி 15, தி.பி.2045/ பிப்.27, 2014 அன்று திறந்துவைக்கப்பெற்றது. வரும் 2 ஆம் நாள் வரை கண்காட்சி நடைபெறுகிறது. ஓவியக்காட்சி திறப்பு விழாவிற்குப் பள்ளித் தலைமையாசிரியர் கண்ணகி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் ஆதிமோகன் வரவேற்றார். நகராட்சித் தலைவர் செல்வராசு ஓவியக்காட்சியைத்…