திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 36, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 36 கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 402) கல்லாதவன் சொல்ல விரும்புதல் கொங்கை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்புவதுபோன்றது என்கிறார் திருவள்ளுவர். கற்றவர்கள் தங்கள் பேச்சால் பிறரைக் கவர்ந்து சிறப்பு எய்துகின்றனர். தங்கள் உரைகளால் புகழுறுகின்றனர். இதனைப் பார்த்துக்…
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன் : தினச்செய்தி
சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே! 1/3 தமிழில் தமிழர்களால் படைக்கப்பட்ட தமிழ் மறை நூல்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டே இருந்துள்ளன. அதுபோல் தமிழர்களால் தமிழில் படைக்கப்பட்ட தமிழ் வேதங்களும் ஆரிய வேதங்களுக்கு முன்னரே தமிழில் இருந்துள்ளன. சங்க இலக்கியங்கள் இவற்றைக் குறிப்பிட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு வந்த ஆரியர் தமிழில் சிறப்பாக உள்ள மாந்தரையும் நூல்களையும் பிறவற்றையும் குறிக்கும் தமிழ்ச்சொற்களைத் தாங்கள் உள்வாங்கிக் கொண்டு தமதுபோல் பயன்படுத்தினர். தமிழின் முந்தைய வரலாற்று நூல்கள் கடல்கோள்பட்டும் பிற வகைகளிலும் அழிந்தமையால் தமிழ்…
பேராசிரியர் இலக்குவனார் நினைவுரை – ஆசிரியர் வீரமணி
இலக்குவனார் நினைவுரை – கி.வீரமணி
தமிழ்க்காப்பு உணர்வின் வித்து – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்காப்பு உணர்வின் வித்து இலக்குவனார் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் வழியில் தனித்தமிழ் உணர்வை ஊட்டிப் பரப்பிய அறிஞர்கள் பலர் உள்ளனர். ஆசிரியப் பணி மூலமும் இயக்கங்கள் மூலமும் பரப்புரை மூலமும் படைப்புகள் மூலமும் இதழ்கள் மூலமும் விழாக்கள் மூலமும் போராட்டங்கள் மூலமும் எனப் பலவகைகளில் தனித்தமிழ் பரப்பித் தூய தமிழ்க் காவலராகத் திகழ்ந்தவர் பேராசிரியர் இலக்குவனார்[தோற்றம்: கார்த்திகை 01, தி.பி.1940(17.11.1909); மறைவு: ஆவணி 18, தி.பி.2004 (03.09.1973)] மட்டுமே! அவருக்கு வழங்கிய பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் நூற்றுக்கு மேற்பட்டன. அவற்றுள், இலக்கணச் செம்மல், சங்கத்தமிழ்…
நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே! அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. பொருள்: அறுசுவை உணவை மனைவி அன்புடன் உண்பிக்க, ஒவ்வொரு வகை உணவிலும் மீண்டும் கைப்பிடி அளவேனும் உணவு வேண்டா என்னும் அளவில்சுவையாக நிறைவாக உண்ணும் செல்வரும் வறுமையுற்று ஒரு காலத்தில் இரந்து உண்ண நேரும். எனவே, செல்வத்தை நிலையானதாகக் கருதற்க. சொல் விளக்கம்: அறு சுவை=அறுவகை சுவையாகிய; உண்டி=உணவை; அமர்ந்து=விரும்பி; இல்லாள்=மனைவி; ஊட்ட=ஊட்டிவிட; மறு=மறுக்கப்பட்ட;சிகை=வன்மையான உணவு…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 35, – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 35 அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 401) நிறைந்த நூல்களைக் கற்காமல் அவையில் பேசுதல், வட்டாட்டத்திற்குரிய கட்டம் இன்றி வட்டாடுதலைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர். மக்களாட்சி நல்லது. ஆனால் படிக்காத மன்பதைக்கு அது நல்லதல்ல. ஏனெனில் அதற்கு எவ்வாறு புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாது என்கிறார் தெபாசிசு மிருதா(Debasish Mridha). கல்லாதவர்களை ஆட்சி செய்வது வல்லாண்மையர்க்கு(சர்வாதிகாரிக்கு) எளிது என்கிறார் ஆல்பெர்ட்டோ மங்குவெல்(Alberto Manguel). எனவே எல்லாத்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 34 கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:400) ஒருவருக்குக் கேடற்ற சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியல்லாத பிற செல்வமல்ல என்கிறார் திருவள்ளுவர். கல்வியே மிகு உயர் செல்வம்(highest wealth) என்கிறார் இங்கிலாந்து அரசியலறிஞர் ஒருவர். கல்விக்குப் பகைவராலோ, கொள்ளைக்காரர்களாலோ, வெள்ளத்தாலோ இயற்கைப் பேரிடர்களாலோ பகைகொண்ட உறவினராலோ ஆட்சியாளராலோ தீங்கு நேராது. எனவேதான் திருவள்ளுவர் கேடில் விழுச்செல்வம் என்கிறார். பிற பொருள்கள், இவற்றில் ஏதேனும் ஒன்றாலோ பலவாலோ…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 33 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 33 தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார் (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:399) கல்வியின் பயனால் தாமும் உலகும் இன்புறுவது கண்டு கல்வியாளர்கள் கற்பதை விரும்புவர் என்கிறார் திருவள்ளுவர். ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் இன்பம் தரக்கூடியவற்றைச் செய்ய வேண்டும் என அரசிலறிவியலாளர்கள் கூறுகின்றனர். கற்பதால் தமக்கும் பிறருக்கும் வரும் இன்பம் கண்டு மேலும் மேலும் அந்த இன்பத்தை விரும்பிக் கற்பர் என்று விளக்குவோர் உள்ளனர். இன்பத்திற்குக் காரணமான கல்வியை விரும்பி மேலும்…
நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம்– 1 வானவில் அறிவியல்! சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘எம்உள்ளத்து முன்னியவை முடிக!’ என்று. பொருள்: வான்முகிலால் தோன்றும்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 32 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப்பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 32 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:398) ஒருமை உணர்வுடன் கற்கும் கல்வி எப்பொழுதும் பாதுகாப்பு தரும் எனத் திருவள்ளுவர் கூறுகிறார். கல்வியின் பயன் ஒருமுறையின்றித் தொடர்ந்து பயன் தரும்; ஆதலின் ஆட்சியாளர்கள் கல்வியில் சிறந்திருக்க வேண்டும் என்பது அரசறிவியல் கருத்து. குறள்நெறிச் செம்மல் பேரா.சி இலக்குவனார், எழுமை=மிகுதி எனப் பொருளைக் கையாண்டு சிறப்பாகவும் சரியாகவும் உரை எழுதியுள்ளார். உரையாசிரியர்கள் சிலர் ஒருமை என்பதற்கு ஒரு பிறப்பு என்றும் எழுமை…
விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா? – மறைமலை இலக்குவனார்
விருது வழங்கப்படுவதா? வாங்கப்படுவதா? அண்மையில் தமிழ்த் திரைப்படங்களுக்குத் தேசிய விருதுகள் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. திரையுலகில் இது பெரிய கவலையை ஏற்படுத்தியது. “தேசிய விருதுகளை விடப் படங்களைப் பார்த்தவரெல்லாம் பாராட்டிப் பேசிய சொற்களே விருதுகள்” எனக் கவிஞர் வைரமுத்து ஆறுதல் வழங்கியுள்ளார். விருது என்பது கலைஞர்களுக்குப் பெரிய ஊக்கத்தையும் மனவெழுச்சியையும் வழங்கும் மாமருந்து எனலாம். அந்த விருதுவுடன் வழங்கும் பதக்கமோ, பணமோ, சான்றிதழோ முதன்மையானதாகக் கருதப்படுவதில்லை. அந்த விருது வழங்கும் பாராட்டும் அங்கீகாரமுமே கலைஞர்களையும், கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் பெரிதும் ஊக்கப்படுத்தும் உந்து சக்தியாகும்….
நாலடியார் காட்டும் நல்வழித் தொடர்! – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடியார் காட்டும் நல்வழித் தொடர்! – முன்னுரை ‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவான் அதுதான் வாழ்க்கை’ என்று எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் பேசுகிறார்கள். தமிழர்களின் வாழ்வில் நான்கு என்பதற்கு அப்படிப்பட்ட முதன்மையாக இடம் உண்டு. வாழ்க்கையை நகர்த்தும்போதும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை முடித்த பின்னும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை நகர்த்த உதவும் நான்காய், நமக்கு வாய்த்திருக்கிறது நாலடியார். சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நான்கு அடி வெண்பாக்களால் ஆன 400 பாடல்களின் தொகுப்பு நாலடியார் எனப் பெறுகிறது. நாலடி…
