1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா?   2. கவசஊர்திகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்… இரத்தம் உறைந்த உதடுகளின் நெளிவில் ஏளனம்   3. சிட்னியில் சிறுவர் பள்ளியில் ‘இலங்கையின் தலை நகரம் எது?’ வினாவுக்கு விடை எழுதியது புலம் பெயர் தமிழ்க்குழந்தை ‘கொழுப்பு’   4. முகம் சிவந்தார் இட்லர் மகிந்த இராசபட்சேவைப் பார்த்து “ஆசுட்விட்சு புக்கன்…