தொந்திக் கரைசல் கண்டேன்! நொந்தேன்! – அரங்க கனகராசன் கனகு

தொலைக் காட்சியில் கண்டேன் … நொந்தேன்… கரைத்தாயிற்று கடலில்… வேதிக் கலவைகளும் கலக்கின கடல்தனை! தொந்தி உருண்டையை – ஏதோ வெல்லக்கட்டியென நினைத்து சுள்ளெனக் கடித்துத் தின்னவே வந்தனவே மீன்கள்! வேதிக் கலவையது – மீனின் பேதியானது! நோயின் வலையில் சிக்கி -பின்னர் மீனவன் விரித்த வலையில் மாண்டனவே! நோயுற்ற மீனை விலைக் கொடுத்துண்ட மாந்தரும் சிக்கினரே நோய்தனில்! அலைநீரில் வாழும் மீனவர் வாழ்வதும் பாழாகாதோ! பாழும் வேதிக் கலவை – விநாயகன் உருவில் ஆழ் கடல்தனில் கலந்திட்டால்? சிந்திப்பாருண்டோ – சந்தி சிரிக்காதோ…

சண்டாளக் காடையர் குடி யழிப்போம்!

சாக்காடு நாள்வரை யாம் மறவோம் ! கூடி எம் நாட்டில் களித் திருந்தோம் குடும்பமாய் நன்றாய் மகிழ்ந் திருந்தோம் முற்றத்தில் ஆடிக் கதைத் திருந்தோம் முழுநிலவு கண்டே வாழ்ந் திருந்தோம் அக்கையும் அன்னையும் சார்ந்திருந்தோம் அழகுத் தமிழை யாம் கற்றிருந்தோம் அம்மம்மா சொல்லும் கதை கேட்டோம் அம்மப்பா ஊட்டும் நெறி கண்டோம் ஒற்றுமை யோடே வாழ்ந் திருந்தோம் ஓர்நிலம் ஈழம் நினைந் திருந்தோம் மாவீர ரீகம் வணங்கி நின்றோம் மாயீழ விடுதலை பெற்றி ருந்தோம் தேசியத்தலைவரை வாழ்த்தி வந்தோம் தேசமே உயிரென்றே களி கூர்ந்தோம்…

“களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்

புரட்டாசி 10, 2046/ செப்.27, 2015  மாலை 5.30 மேற்குத் தாம்பரம் “களவு போகும் நம் மண்ணும் மனிதமும் ” – சூழலியல் கருத்தரங்கம்   இன்று தொடர்ச்சியாகச் சுரண்டப்பட்டு வரும் இயற்கை வளங்கள் குறித்து நாம் அறிந்தும் கவனம் செலுத்தாமலே இருக்கின்றோம். நாம், நமது அருகில் அன்றாடம் மணல் கொள்ளையால் சுரண்டப்பட்டும், வன்கவர்வுகளால்,   கொட்டப்படும் கழிவுகளால் மாசுபட்டும் வருகின்ற நீர் நிலைகளைப்பற்றிக் கவனத்தில் கொள்ள மறுக்கின்றோம். பணம் இருந்தால்தான் தண்ணீர்!, அதுவும் தூய்மையான நீரைப் பெற இயலாத நிலை! தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டு வரும்…

களம்நின்று போராடும் காலம்வரை கண்ணுறங்கு ! – பாவலர் வையவன்

  தகப்பன் தாலாட்டு கண்ணுறங்கு கண்ணுறங்கு காவியமே கண்ணுறங்கு! களம்நின்று போராடும் காலம்வரை கண்ணுறங்கு ! முன்னிருந்த தமிழர்நலம் மூத்தகுடி மொழியின்வளம் மண்ணுரிமை யாகஇங்கு மாறும்வரை கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) முப்பாட்டன் கடல்தாண்டி ஒர்குடையில் உலகாண்டான் இப்போது நமக்கென்று ஒர்நாடு இல்லையடி திக்கெட்டும் ஆண்டமொழி திக்கற்றுப் போனதடி இக்கட்டைப் போக்கணும்நீ இப்போது கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) தன்னலத்தில் தனையிழந்து தாய்மொழியின் புகழ்மறந்து பொன்னான தாய்நாட்டைப் போற்றிடவும் மறந்துவிட்டு இங்கிருக்கும் தமிழரெல்லாம் மையிருட்டில் வாழுகின்றார் ஈழமண்ணின் புதுவெளிச்சம் இங்குவரும் கண்ணுறங்கு ! (கண்ணுறங்கு) ஆண்பிள்ளை வேண்டுமென்று…

85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள்

பெரும்பாலும் பெரும்பான்மைப் பதிவுகள் சரியில்லை.  இத்தகவலைப் பகிர்ந்த கரிசிற்காக(-பாவத்திற்காக)ப் பலரும் தளத்தினருடன் தொடர்பு  கொள்ளாமல் நம்மையே துன்புறுத்துகின்றனர். எனவே இணைப்பு முகவரிகளை எடுத்து விட்டோம். பட்டியல் தகவலுக்காகத் தரப்பட்டுள்ளது. எங்கும் கிடைத்தால் காணலாம். சித்தர் நூல்கள் தொடர்பாக் சில தளங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடிக்காண்க! –  அகரமுதல 85 சித்தர் நூல்கள்: இப்போது பதிவிறக்கம் செய்யலாம். உறவுகளே கீழே உள்ள நிறைய சித்தர் நூல்கள் மிகவும் அரிதான நூல்கள். …………….             …………..      ………….. …

சீறிப் பாய்வேன் தமிழாலே! – இராம.குருநாதன்

கவிதைக்கு அழிவில்லை காற்றும் மழையும் அழித்தாலும்- என் கவிதைக் கனலுக் கழிவில்லை ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை- இனி உறைக்குள் போட மனமில்லை மண்ணும் மலையும் சரிந்தாலும்- என் மானிடப் பார்வைக் கழிவில்லை விண்ணும் கடலும் திரண்டாலும்- என்னுள் விரியும் கவிதைக் கழிவில்லை வெட்டிப் பொழுது போக்குவதை- நான் வீணில் என்றும் கழித்ததில்லை கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி- களத்தில் கூர்மை வாளாய்க் களமிறங்கும் சொல்லும் பொருளும் உள்ளவரை- என்னுள் தொடரும் சமூகச் சிந்தனைகள் வெல்லும் என்கவி எனச்சொல்லி வித்தகம் பேச அறியேன்நான் அல்லும் பகலும் கண்டவற்றை-என்…

தொப்புள்கொடி உறவுதனை விடுதல் நன்றா? – குருநாதன்

அழிந்துவரும் மொழியா? ‘அழிந்துவரும் மொழிகளிலே தமிழும் ஒன்றாம்’ ஐ.நா. வின் இக்கூற்றைச் செவிம டுப்பீர்; கழிந்துவரும் வாழ்க்கையிலே தமிழைக் காக்க கட்டாயம் போர்த்தொடுப்பீர்; உலகில் மற்ற மொழியறிவு பெறுவதற்குத் தடையா சொன்னோம் மூத்தமொழி தாய்மொழியைப் போற்றச் செய்வோம்; விழிப்புணர்ச்சி இல்லையெனில் கெடுப்ப தற்கு விரைவாக வந்திடுமே வீணர்க் கூட்டம்! ஐந்திணையின் அழகுதனை எடுத்து ரைத்த அழியாத இலக்கியத்தை இழக்கப் போமோ? செந்தமிழைப் பேரறிஞர் பலரும் காத்த செழிப்பான வரலாறு அழிதல் நன்றா? பைந்தமிழில் பேசுதற்கு நாணு கின்றோம்; படித்தறிந்து போற்றுதற்குத் தமிழைப் போல எந்தமொழி…

கிழக்குத் தமிழீழத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் அரிய கிணறு கண்டுபிடிப்பு.

வந்தாறுமூலை பிள்ளையார் கோவிலில் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கிணறு, நாகக்கல் கண்டுபிடிப்பு   மட்டக்களப்பு, வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு, நாகக்கல் ஆகியன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.   வரலாற்றுதுறைப் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன், தொல்லியல் ஆய்வுக்குழுவினர் ஆகியோர் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயக் காணியினுள் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் அமைக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கபட்டன.   இதுபற்றிப் பேராசிரியர் சி.பத்மநாதன்…

இளம்பெண்களைச் சிதைக்கும் ‘சுமங்கலித் திட்டம்’

  பேராசைப் பசிக்கு இரையாகும் இளம்பெண்கள்   தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் அறிக்கைப்படி 38,000 இளம் பெண்கள், தொழிற்சங்கச் சார்பாளர்கள், தொண்டு நிறுவனங்களின் கணக்குப்படி 4 நூறாயிரம் இளம் பெண்கள், ‘சுமங்கலித் திட்டம்’ என்கின்ற பெயரில் அதிக வேலைக்குக் குறைவான சம்பளம், கூடுதல் நேர வேலைக்குக் கூடுதல் சம்பளமின்மை, கட்டயாப்படுத்தி வேலை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, குறைவான தூக்கம், உடல் சோர்வு, பாலியல் தொந்தரவு போன்ற வன்கொடுமைகளில் வதைக்கப்படுகின்றனர்.  இன்றைய சூழலில் வேளாண் கூலிகளை விடவும் பஞ்சாலைக் கூலிகள்தான் அதிகளவில் உள்ளனர் என்பது…

இரண்டகர்களை அடையாளம் காட்டுங்கள்! – வெளிப்படையான மடல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குத் தமிழ் இனத்தின் சார்பில் திறந்த மடலாக வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம்:   தோல்வி என்பது வெற்றிக்கான முதற்படியே. அதுவே முடிவல்ல. தமிழீழ மக்கள் சந்திக்காதவையல்ல, நீங்கள் சந்தித்திருப்பது. ஆகவே தொடர்ந்தும் தமிழீழ மக்களுடன் தமிழீழத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் உறுதியாக செயல்படுங்கள். இவ்வளவுகாலமும் சம்பந்தனும், சுமத்திரனும் மாவை சேனாதிராசா உட்பட கூட்டமைப்பில் உள்ளவர்கள் செய்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இனி வரும்காலங்களிலும் தமிழ்த் தேசியத்தை உதட்டளவில் பேசிக்கொண்டு கூட்டமைப்பு தமிழீழ மக்களிற்கு வஞ்சகங்கள் செய்யும்போது கூட்டமைப்பின் உண்மை முகத்தை…

நடிப்பை நம்பி ஏமாறாதே வீணாகாதே! – பட்டாபு பத்மநாபன்

நடிப்புவேறு நாடுகின்ற வாழ்க்கை வேறு! (எண்சீர் விருத்தம்) விளக்கொளியைத் தேடிவரும் விட்டில் பூச்சி விழியிருந்தும் விளக்கொளியில் வீழ்ந்து மாயும் பளபளக்கும் விளக்கொளியில் படத்திற் காக பலவாறு நடிக்கின்ற நடிகர் பண்பை விளக்கிநின்றால் வேதனையே மிஞ்சும் தம்பி விவரமாகச் சொல்வதென்றால் வேடம்! தம்பி அளந்திடுவார் வாய்கிழிய அன்பர் என்பார் அடுக்கிடுவார் பணந்தன்னை அறியா வண்ணம் கொடுக்கின்ற கதைமாந்தர் தன்மைக் கேற்ப கும்மாளம் அடித்திடுவார் கொஞ்சிப் பேசி நடிக்கின்றார் நாமெல்லாம் வியந்து பார்ப்போம் நடிப்புவேறு நாடுகின்ற வாழ்க்கை வேறு குடித்திடுவார் கூத்தடிப்பார் வாய்ப்பு வந்தால் கூடவரும் நடிகையையும்…

தமிழன்னை கண்ணீரை வடிக்கின்றாள்! – குருநாதன்

அன்னைமொழி மறந்தார்! அன்னைமொழி அமுதமென அற்றைநாள் சொன்னார்கள் இற்றை நாளில் முன்னைமொழி மூத்தமொழி முடங்கியதை மறந்துவிட்டு மூங்கை யானார்; பின்னைவந்த மொழிகளிலே பேசுகின்றார்; எழுதுகின்றார் பேதை யாகித் தன்மொழியைத் தாம்மறந்து தருக்குகிறார் தமிழ்நாட்டில் வெட்கக் கேடே! இருந்தமிழே உன்னால்தான் நானிருந்தேன்; அன்று சொன்னார்; இற்றை நாளில் இருந்தமிழே உனக்காய்நான் இருப்பதாகச் சொல்வதற்கே இதயம் இல்லை! அரியணையில் ஏற்றிவைத்த அருந்தமிழைப் போற்றுவதற்கு மறந்து போனோம் திருத்தமுற எடுத்துரைக்கத் திசையெங்கும் தமிழ்வளர்க்கும் கொள்கை ஏற்போம். புலம்பெயர்ந்து போனவர்கள் புதுமைகளைக் கண்டங்கே மொழிவ ளர்த்து நலமுடனே வாழ்கின்றார்; நாமோ…