தாயுமானவர் – நா.இராசா இரகுநாதன்

தாயுமானவர் தமிழீழக் கரு சுமந்து தாயுமானவர் ! உயிர் மெய் ஆயுதம் -எனத் “தமிழுக்கு ” அனைத்துமானவர்! உலகத் தமிழர்களின் ஒற்றை முதுகெலும்பு ! தொல்காப்பியம் திருக்குறள் சிலப்பதிகாரம் -இவை தமிழின் பெருமிதங்கள் இனி தலைவரின் வரலாறும்!   –  நா.இராசா இரகுநாதன்

அவனே உயிர்ப்பண் – இராசா இரகுநாதன்

தாயகமே தளையறு ! வளையாது வளரும் பனையே ! யாரை வரவேற்க வானை வளைக்கிறாய்? கார்த்திகைப் பூவே யாரைத் தழுவ -உன் காந்தள் விரல்கள் காற்றில் அலைகின்றன? உப்புக்கடலே! யாரை எதிர்நோக்கி எட்டிஎட்டிக் குதிக்கிறாய்? வன்னிக்காடே யாருக்கு மாலைசூட்ட மலர்ந்து கிடக்கிறாய்? ஆதியாழே! யார் இசைக்க சுரம் கூட்டுகிறாய் ? அமுதத் தமிழே ! எவர் எழுத காத்திருக்கிறாய்? விடுதலைப் பண்ணை! தளையறு ! தாயகமே தளையறு ! அணுக்கள் தோறும் அவன்உயிர்ப்பான் அவனே உயிர்ப்பண் ! இராசா இரகுநாதன்

செயற்கரிய ஆற்றும் பிரபாகரன் – இராசுகுமார் பழனிச்சாமி

நாட்டு நலனுக்காகத் தமிழீழத்தில் அமைந்த துறைகள்! வள்ளுவர் நெறிக்கு ஏற்ப வாழ்ந்து காட்டிய ஈடு இணையற்ற தமிழனின் பிறந்த நாள் இன்று! செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். உரை : பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே. எல்லாராலும் இப்படி ஒரு செயலை செய்ய இயலாது. பல கோடித் தமிழர்கள் இம்மண்ணில் வாழ்ந்தாலும் மேதகு பிரபாகரன் அவர்கள் மட்டுமே தமிழினத்திற்கு அடையாளம் தந்தவர், தமிழர்களுக்கு என்று ஒரு நாட்டைக் கட்டி அமைத்தவர். அப்படியான ஒரு…

அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – பா சங்கிலியன்

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று அடிமைப்பட்ட தமிழனை அடங்கா தமிழனாக்கிய அண்ணலே நீர் நீடூழி வாழ்க! செந்தமிழர் புகழை பாரெங்கும் பரப்பிய வள்ளலே நீர் நீடூழி வாழ்க! சொல் வீரம் காட்டாத சொக்கத்தங்கமே செயல் தான் வீரமென செய்து காட்டிய செம்மலே நீர் பல்லாண்டு வாழ்க! – ‘சங்கிலியன் பாண்டியன்‎

வ.உ.சி என்ற பன்முக ஆளுமை! – இரவி இந்திரன்

  வ.உ.சி என்று அழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரப்பிள்ளை பிரித்தானிய இந்திய நீராவிக் கப்பற்பயண நிறுவனத்திற்கு (British India Steam Navigation Company) எதிராக 16.10.1906 இல் உள்நாட்டு(சுதேசிய) நாவாய்ச் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியதால் கப்பலோட்டிய தமிழன் என்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராகச் செயற்பட்டமைக்காகச் சிறைத்தண்டனை துய்க்கையில் செக்கிழுக்க வைக்கப்பட்டமையால் செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கப்படும் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.   இவர் விடுதலைப் போராட்ட வீரர் மட்டுமல்ல ஒரு சிறந்த வழக்கறிஞர், கவிநயம்மிக்க எழுத்தாளர், பதிப்பாசிரியர் எனப் பன்முக ஆளுமைகொண்டவர்….

மனத்தோடும் மணம் பேச வருவானே! – (உ)லோக நாதன்

மனத்தோடும் மணம் பேச வருவானே! மூவாறு வயது தொட்டு யாராரோ பெண் கேட்டார்கள் பெண்ணை மட்டுமல்ல…. பொன்னும் பொருளும் கூட ஊனமுள்ள பெண்ணென்று உயர்ந்து கொண்டே போகிறது வீடு வாசல் சொத்தென்றும் ஊர்திகூட வேண்டுமாம் கைக்கூலியாய்! அழகில் ஓர் குறையில்லை அறிவிலும் ஓர் குறையில்லை அன்பில் கூடக் குறையில்லை அப்புறம் என்ன குறையோ? ஊனம் கேட்டுப் பெற்ற வரமா? கடவுள் கொடுத்த சாபமா? பெற்றோரின் பாவமா?-அது துய்ப்போரின் பலனா? இயற்கை தந்த பரிசை இழித்துரைக்கும் இனமே இதயம் தொட்டுச் சொல்லுங்கள் உங்கள் பிள்ளை இப்படி இருந்தால்…..!!??…

ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்புகழ் வெல்க!

ஆட்சிமொழிக்காவலர் இராமலிங்கனார்புகழ் வெல்க!     தமிழகத் தலைமைச் செயலகம் முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரை இன்றைக்கு ஓரளவுக்காவது ஆட்சிமொழி நிருவாகம் தமிழ்மொழியில் நடைபெறுவதற்கு மூல காரணமாகத் தமிழறிஞர் ஒருவர் இருந்துள்ளார். அவரை இப்போது தெரிந்து கொள்வோம். அவர் பெயர் கீ.இராமலிங்கனார்.   1956ஆம் ஆண்டில் மொழிவழி மாகாணமாகத் தமிழ்நாடு உருவாக்கப்பட்ட போது ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் பிரித்தானியரின் ஆங்கிலமொழியே தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே ஆங்கில…

சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்! – கண்ணன் நாகராசு

சந்தனப்பேழைகளே! திருமுகம் காட்டுங்கள்!   தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்! ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!  கண்ணன் நாகராசு

குறளின்பம் : தம்மில் இருந்து தமது பாத்துண்டற்றால் – தமிழநம்பி

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. – குறள். 1107   இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித் தழுவல், தமக்குச் சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு, தம்முடைய சொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத், தாமும் விருந்தினருமாக, நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது என்பதாகும்….

கல்வெட்டிலேயே தொடங்கிய சமற்கிருதத் திணிப்பு – தமிழ நம்பி

  கல்வெட்டிலேயே தொடங்கியசமற்கிருதத் திணிப்பு!    கழக(சங்க)க் காலத்தில் தமிழ்நாட்டில் அரசர், போர்மறவர் முதலிய செல்வர் மனைகளில் மகன் பிறந்தால் அவனை முதன்முதலாகத் தந்தை சென்று காண்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சி! அதனைத் “தவமகன் முகம் காண்டல்” என்பர். தகடூரை ஆண்ட அதியமானுக்கு மகன் பிறந்த போது நடந்த இச்சிறப்பை ஒளவையார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம்.100) கூறுவதை அறியலாம்.   இந்த வழக்கம் கி.பி.14ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதைத் திருமயம் பகுதியிலுள்ள நெக்கோணம் பெருமாள் கோயில் கல்வெட்டு (பி.எசு.672) தெரிவிக்கிறது. இங்கிருந்து நாடுகாவல்…

பிறப்பால் வேறுபடுத்துபவன் செத்தவனாவான்! (குறள் கருத்து) – தமிழ நம்பி

ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். – குறள் 214.   இக்குறள் அறத்துப்பாலில் ‘ஒப்புரவறிதல்’ அதிகாரத்தில் நான்காவதாகும். இதன் பொருள் : மாந்தராய்ப் பிறந்தவர் அனைவரும் ஒப்பானவர், சமமானவர், ஒத்தவர் என்பதை அறிகின்றவனே உயிர்வாழ்கின்றவன் ஆவான். மற்றையான் செத்தாருள் ஒருவனாக – நடைப்பிணமாக – வைத்து எண்ணப்படும் என்பதாகும்.   ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ – என்று 972-ஆம் குறளிலும் வள்ளுவர் வலியுறுத்துகிறார். எல்லா உயிர்களும் சமமானவை என்று அறியாதவன் நடைப்பிணமாகக் கருதப்படுவதால், அஃறிணையைக் குறிப்பிடுவதைப் போல ‘செத்தாருள் வைக்கப்படும்!’…

எரிக்கப்பட்டது யாழ்நூலகம் மட்டுமா? – அருட்செல்வன் திரு

எரிக்கப்பட்டது யாழ்நூலகம் மட்டுமா?   தமிழ்த்தாத்தா உவேசா தமிழ்நூல்களைத் தேடி நெல்லைமாவட்டம் கரிவலம்வந்தநல்லூருக்கு வருகிறார். அந்தவூர், வரகுணராமபாண்டியன் என்ற மன்னரின் தலைநகர். அரிய பல தமிழ்நூல்கள், அவர்காலத்துக்குப் பின் அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்நூல்களைத்தேடி உவேசா வருகிறாரென கேள்விப்பட்டவுடன் அக்கோவிலில் பூசைசெய்த பிராமணர்கள் அவ்வளவு தமிழ்நூல்களையும் எரித்துச்சாம்பலாக்கிவிட்டனர். இச்செய்தியை உ.வே.சா. அவர்களே தனது “எனது சரித்திரம்”என்ற நூலில் குறிப்பிடுகிறார்.   மன்னர் வரகுணராமபாண்டியரின் தம்பி அதிவீரராமபாண்டியர் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். தமிழில் பெரும்புலமை பெற்றவர். வெற்றிவேற்கை, குட்டித்திருவாசகம் எனச் சொல்லப்படும் திருக்கருவைப்…