இங்கிலாந்தில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு
திருக்குறளுக்குப் பன்னாட்டு ஏற்பு இங்கிலாந்து நாட்டில் அனைத்துலகத் திருக்குறள் மாநாடு இங்கிலாந்து நாட்டின் (இ)லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டுப் புகழ் பெற்ற ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகத்தில்(Liverpool Hope University) அடுத்த ஆண்டு (2018) ஆனி 13, 14, & 15 , 2049 / 27,28,29-06.2018 ஆகிய நாட்களில் இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது. நாகர்கோவிலில் கடந்த மே-மாதத்தில் நடைபெற்ற முதல் அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு (இ)லிவர்பூலில் நடை பெறுகின்றது. தமிழக எல்லைகளுக்கு…
கனடா இணைய மாநாட்டிற்கான தமிழக இணைய வழி உரையரங்கம்
ஐப்பசி 11, 2048 / 28.10.2017 வைகறை 5.00 மணி முதல் முற்பகல் 11.00மணி வரை உலகத்தமிழ் இணைய மாநாடு 2017, கனடா இணைய வழி உரையரங்கம், தமிழ்நாடு நிருவாக மையக் கருத்தரங்க அறை, மூன்றாவது தளம் ஈபெர் பாதிரியார் (Bishop Heber) கல்லூரி, திருச்சிராப்பள்ளி உரையாளர்கள்: முனைவர் காமாட்சி முனைவர் பத்துமநாபன் முனைவர் இராசேந்திரன் முனைவர் உமாராசு முனைவர் கருப்பத்தேவன் முனைவர் தெ.வெற்றிச்செல்வன் முனைவர் பிரகதி முனைவர் இந்திரகுமாரி முனைவர் இலக்குமி இதழாளர் சதீசுகுமார் முனைவர் குணசீலன் மரு.சிவசுப்பிரமணியன்…
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால், வீட்டுக்கான கூரைத் தகடுகள் அன்பளிப்பு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அராலி மத்தியை முகவரியாகக் கொண்ட சசிதரன் இராசலோசனா அவர்களுக்கு உரூபா 20000 பெறுமதியான 10 கூரைத் தகடுகளும் அதற்கான பொருட்களும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்துக் கையளிக்கபட்டுள்ளன. மேற்படி விண்ணப்பத்தில் தானும் கணவரும் 3 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாகவும் ஓலையால் அமைந்துள்ள தங்களது வீட்டு கூரை தற்போது கூரை பழுதடைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பருவ மழை தொடங்குவதால் தாங்கள் வீட்டில் இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது; தனது…
‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்!
‘தமிழ் இலக்கிய வழி’ மின் இதழுக்கு உங்கள் பதிவுகளை அனுப்பலாம்! வலையுலகத் தமிழ் வாசகர்களே! படைப்பாளிகளே! எமது அன்றாடக் கருத்துப் பரிமாறலாக முகநூல் (Facebook) இருந்தாலும் உங்கள் பதிவுகளைத் தொகுத்துப் பரிமாற வலைப்பூ(Blog), வலைப்பக்கம்(Web), கருத்துக்களம்(Forum) ஆகியன அமைந்தாலும் மின்நூல்களும்(eBooks) மின்இதழ்களும்(eZines) இன்னொரு சூழலில் முதன்மை பெறுகிறது. அஃதாவது, மின்ஆவணமாகக் (eDocument) கணிணியில் சேமித்து வைத்து விரும்பிய வேளை படிக்க முடிகிறது. இவற்றை மின்நூலகங்களில்(eLibrary) பேணிப் பகிருவதால் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய வாய்ப்பும் உண்டும். இதனடிப்படையிலேயே நாம் ‘தமிழ் இலக்கிய வழி’…
வாசிப்புப் போட்டி 2017
வாசிப்புப் போட்டி – 2017 வாசிப்புப் போட்டி 2017 யாழ்பாவாணன் வெளியீட்டகம் (http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர். எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடைகளை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) விடைகளைத்…
புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு
கார்த்திகை 20 & 21 . 2048 / புதன் & வியாழன் 6 & 7 .12.2017 ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, புலம்பெயர்ந்தோர் எழுத்துலக ஆய்வு மாநாடு, ஈரோடு மாநாட்டின் ஒரு பகுதியாகச் சீவகுமாரனின் 10 நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் அளிக்கப்பெற்று அவற்றின் அதன் மீது கலந்துரையாடலும் நிகழும். ஈரோடு கலை- அறிவியல் கல்லூரியினர் தங்குமிட வசதியையும் செய்து தருகின்றார்கள். கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்ளவும், பார்வையாளர்கள் ஆகவும் – பங்களிப்புச் செய்பவர்களாகவும். அன்புடன் வி. சீவகுமாரன்,…
துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்
துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம் துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் புரட்டாசி 19, 2048 / 05.10.2017 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு மக்குதூம் பாலம் அருகில் உள்ள அரேபியா ஓல்டிங்குசு தலைமையகத்தில் (சலாமியா கோபுரம்) நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர் குணா கலந்து கொண்டு பயிற்சியை வழங்க இருக்கிறார். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 / 052 777 8341 ஆகிய…
இலக்கியப்பதிவுகளும் சமகாலப் போக்குகளும் – பன்னாட்டுக் கருத்தரங்கம், பொள்ளாச்சி
கார்த்திகை 25, 2048 / திசம்பர் 11, 2017 சரசுவதி தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் முனைவர் ச.இராசலதா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சிரீ சரசுவதி தியாகராசர் கல்லூரி பொள்ளாச்சி 642107 பேசி 9486787230 மின்வரி : hodtamil@stc.ac.in
வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினர் மாணவர்களுக்கு மிதி வண்டிகள் அன்பளிப்பு
வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்தினர் மாணவர்களுக்கு மிதி வண்டிகள் அன்பளிப்பு வட்டுக்கோட்டை இந்து இளைஞர் (வாலிபர்) சங்கத்தினால் வட்டு மத்திய கல்லூரி நவாலி அமெரிக்கன் அறக்கட்டளைப்(மிசன்) பாடசாலை மற்றும் யாழ்ப்பாணக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகளுக்குச் சங்கத் தலைமைச்செயலகத்தில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்படி விண்ணப்பம் கடந்த காலப் போரின் போது தந்தை காணாமல் ஆக்கப்பட்ட தாய் தந்தை இருவரையும் இழந்த, தந்தையினால் கைவிடப்பட்ட மூன்று மாணவிகளுக்குப் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் சமூகநல அலுவலர் மூலமும் எமது சங்கத்திடம் கடிதம் மூலம் தெரிவிக்கபட்டதைத் தொடர்ந்து…
காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 2/2: முத்துக்குமார், காயத்திரி, தமிழரசி
(காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: தொடர்ச்சி) காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு (பாடல்கள்). 2/2 பாடல் 3 : நோக்கம் ஒவ்வொரு நாளும் வகுப்பில் பாடம் தொடங்கும் முன் பாடப்பட்டப் பாடல்கள்: கலைமகள் மலரடி பணிந்திடுவோம் கருத்துடன் கல்வியைப் பயின்றிடுவோம் அமிழ்தினும் இனியது தமிழ்மொழியே அது தான் என்றும் நம் விழியே இமை போல் நாம் அதைக் காத்திடுவோம் இயல் இசை நாடகம் வளர்த்திடுவோம் – கலைமகள் மலைகளில் சிறந்தது நம் நாடு சரித்திரப் புகழ்ப்பெற்ற திருநாடு தாய் என நாம்…
கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு ‘-உலகத் தமிழ்க் குறும்புதினப் போட்டி 2018’ – வள்ளுவராண்டு 2049
காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு ‘-உலகத் தமிழ்க் குறும் புதினப் போட்டி 2018’ – வள்ளுவராண்டு 2049 காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி அமைகிறது. பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!” என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது. இதற்கமைய இம்முறை ‘உலகத் தமிழ்க் குறும்…
வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள் – சுசிலா
வேண்டாமே … நமக்கு நவோதயா பள்ளிகள் பொதுத் தேர்வாகிய ‘நீட்’ எனும் அரக்கனைத் தொடர்ந்து, நம்மை நோக்கி குறி வைக்கப்படும் அடுத்த அம்பு நவோதயா பள்ளிகள். இது நம் தமிழ்மொழிக்கும், குமுகநீதிக்கும் பெருங்கண்டத்தை – பேராபத்தை விளைவிக்கக் கூடியது. இதனை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், நம் தமிழ்ச்சமூகத்தை மிகவும் கல்வி மறுக்கப்பட்ட பின்தங்கிய நிலைக்குக் கொண்டு சென்று விடும். மத்திய பா.ச.க அரசு தொடர்ந்து நம்மை போராட்டக்களத்திலேயே வைத்திருக்க முடிவு செய்திருக்கிறது போலும்.! இந்த நவோதயா பள்ளிகளைப்பற்றி சற்று விரிவாக பார்ப்போமா….
