காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!    இலங்கை அரசின்  இனப்படுகொலை, போர்க்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை  உசாவுவதற்கு, ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு  விடையளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்து  புறக்கணித்துவரும்  இலங்கை அரசுக்கு, இம்முறையும்  செனிவாவில் இன்னும் இரண்டு வருட கால  நீட்டிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில்   மாசி 28, 2048 / 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டு காணாமல்…

எல்லாம் கொடுக்கும் தமிழ் – பாவலர் கருமலைத்தமிழாழன்

எல்லாம் கொடுக்கும் தமிழ்!     என்னயில்லை   நம்தமிழில்   ஏன்கையை   ஏந்தவேண்டும் இன்னும்   உணரா   திருக்கின்றாய் — நன்முறையில் பொல்லாத   தாழ்வுமனம்   போக்கியுள்ளே   ஆய்ந்துபார் எல்லாம்   கொடுக்கும்   தமிழ் !   எள்ளல்   புரிகின்றாய்   ஏகடியம்   பேசுகின்றாய் உள்ள   துணரா   துளறுகின்றாய் — உள்நுழைந்து கல்லாமல்   தாழ்த்துகிறாய்   காண்கதொல்   காப்பியத்தை எல்லாம்   கொடுக்கும் தமிழ் !   எந்த   மொழியிலுமே   இல்லா   இலக்கணமாம் நந்தமிழில்   மட்டுமுள்ள   நற்பொருளாம் — செந்தமிழர் நல்லொழுக்க   வாழ்க்கைக்கு   நல்வழியைக்   காட்டியிங்கே எல்லாம்   கொடுக்கும்   தமிழ் !   ஐந்தாய்  …

சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்? – புகழேந்தி தங்கராசு

(மு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ –  தொடர்ச்சி) மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்! (2) சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்?   ‘பழையவற்றையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள்’ – எனச் சண்டைக்கு வருகிறார்கள், பழைய நண்பர்கள் சிலர். உள்ளூர் அழைப்புக்கும் 25 காசு, வெளியூர் அழைப்புக்கும் 25 காசு என்கிற கட்டணக் குறைப்புத் திட்டத்தில் (Rate cutter) இணைந்து விட்டார்கள் போலிருக்கிறது… என்னை ஒரு சொல் சொல்ல விடாமல் மூச்சு விடாது பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட இருந்தே குழி பறிப்பவர்களுக்கு மறப்போம் மன்னிப்போமெல்லாம் பொருந்தாது…

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2

(இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2 தொடர்ச்சி) இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2 ?  தமிழ் பேசும் வழக்கம் தமிழர்களின் வீடுகளில் குறைந்துவரும் இந்தக் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டுக்குரிய வேறு செயல்கள் தொடர்ந்து பழக்கத்தில் உள்ளனவா? கோயிலுக்குச் செல்லுதல், திருமணங்களில் சடங்குகள், குழந்தைகளுக்குப் பெயர் வைத்தல் போன்றவற்றில் இன்னும் பண்பாட்டு வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தாலும், மெதுவாக அவை மாறிவருகின்றன. தமிழ்ப்பெயர்கள் இப்போது குறைந்து வருகின்றன. ? இந்தோனேசியாவில் தமிழ்வழித்தோன்றல்கள் குறிப்பாக எந்தப் பகுதிகளில் மிகுந்து காணப்படுகிறார்கள்?…

சிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்

சிங்கள அரசின் ஏமாற்று வேலை   இலங்கையில் 2009-ஆம் ஆண்டுப் போரின் இறுதிக்கட்டத்தில்  ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும்  உசாவல் நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது.   அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையைப் பரிந்துரைத்தது.   2010 சனவரியில் தபிளின்(Dublin) மக்கள் தீர்ப்பாயம்…

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம்  சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2   இந்தோனேசியாவின் எதிர்க்கட்சியான  பார்தை கெரிண்டிரா  (PARTAI GERINDRA) அமைப்பில் அவைத்தலைவர்(chairman) பொறுப்பு வகிக்கும் தமிழர் திரு கோபாலன் அவர்களுடன் இலக்கியவேல் இதழாசிரியர் சந்தர் சுப்பிரமணியன்  நடத்தும் நேர்காணல். வணக்கம். இலக்கியவேல் வாசகர்களுக்காக உங்கள் நேரத்தைச் செலவிட முனைந்ததற்கு நன்றி. வணக்கம். ?   நீங்கள் இந்தோனிசியாவில் வாழ்கிறீர்கள். உங்கள் மூதாதையர் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அங்கு சென்றது குறித்த தகவலைப் பகிர்ந்து கொள்ள முடியுமா? என்னுடைய தாத்தா இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர். நான் மூன்றாவது…

அனைத்துலகப் பெண்கள் நாள் 2017 பேரணிக்கு அழைப்பு

  அனைத்துலகப் பெண்கள் நாள் 2017 இல் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் பெண்களுக்கு அழைப்பு! மாசி 27, 2048 / மார்ச்சு 11, 2017  முற்பகல் 11.30  

‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம்

 ‘தமிழ்த்தேரின்’ அடுத்தத் தலைப்பு: – வணக்கம் மாசி 29, 2048 / 13.03.2017க்குள் உங்கள் படைப்புகள் வந்து சேரட்டும்!   செந்தமிழர் சீர்மரபில் வந்தசொல் வணக்கம்! எந்தவொரு அறிமுகமும் தருமின்பச்சொல் வணக்கம்! அன்றுதொட்டு அகம்குளிர மலரும்சொல் வணக்கம்! மங்கலமாய் அமைந்தவொரு அன்புச்சொல் வணக்கம்! வேறுபாடுகள் சிறிதுமின்றி விளையும்சொல் வணக்கம்! வேற்றுமையிலும் ஒற்றுமையை ஊன்றும்சொல் வணக்கம்! தானென்ற அகந்தையை அகற்றும்சொல் வணக்கம்! தன்னைப்போல் பிறரையெண்ணும் சொல் வணக்கம்! வாழும் உயிர் அத்தனையும் வரவேற்கும் வணக்கம்! ஏழையென்றும் செல்வரென்றும் பார்க்காது வணக்கம்! படைத்தவனின் கருணையெண்ணி பணிவுடனே வணக்கம்!…

‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண்

‘தமிழ்த்தேர்’ நடத்தும் படைப்புப் போட்டியின் தலைப்பு: புதுமைப் பெண் உங்கள் படைப்புகள் வந்துசேர வேண்டிய நாள் மாசி 29, 2048 /  13.03.2017   புதிதாய்க் குதித்தவளா புதுமைப் பெண் அத்துனைப் பெண்ணின் ஆழ்மனதிலும் அங்கம் கொண்டதே புதுமை -அறிவாய் கல்வியில் ஓங்கவும் கவலைகள் நீங்கவும் கவிதையாய் வாழவும், காட்டாறாய் மாறவும் அவள் கைதேர்ந்த பதுமை- புரிவாய் எத்திசை நோக்கியும் எடுத்தடி வைப்பாள் முக்திக்கு மூர்க்கமாய் முனிவரைத் தேடாள் சக்தியாய் உலகாளும் பெண்ணினை அறிவாய் தெளிந்தே கற்பாள் தலை நிமிர்ந்தே நடப்பாள் தயை கொள்வாள்…