மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம்,குவைத்து
குவைத்து தமிழ் அமைப்புகள் & அரசியல் கட்சிகள் பங்கேங்கும் மோடி அரசின் முத்தலாக்கு தடைச் சட்டக் கண்டனப் பொதுக்கூட்டம் நாள் & நேரம் : மார்கழி 20, 2048 04.01.2018 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல்… இடம்: கு.த.ச.(K-TIC) தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்து இந்திய இறையாண்மையைக் காக்க, வேற்றுமையில் ஒற்றுமையைப் பேண, அநீதிக்கான எதிர்ப்பைப் பதிவு செய்ய குவைத்து வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இதையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அலைகடலெனத் திரண்டு வருக! தேசம் காப்போம்! நேசம் வளர்ப்போம்!!…
இரீயூனியன் நாட்டுத் தமிழர்களுடன் சந்திப்பும் கலந்துரையாடலும், சென்னை
பேரன்புடையீர், வணக்கம். வரும் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை சனவரி மாதம் 2-ஆம் நாள், சென்னை இரீயூனியன் நாட்டைச் சார்ந்த 10 தமிழர்கள் தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்து இரீயூனியன்-தமிழக நல்லுறவு குறித்து ஆசியவியல் நிறுவன வளாகத்தில் தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளனர். இச்சந்திப்பும் கலந்துரையாடலும் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும். இதில் பங்கேற்றுத் தமிழக-இரீயூனியன் நல்லுறவு வலுப்பெறவும், தமிழர் பண்பாடு இரீயூனியன் நாட்டில் வளம்பெறவும் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் மிக்க நன்றி….
வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு
வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு வலைவழி வாசிப்புப் போட்டி என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக மேற்கொள்ள வேண்டும். உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட ‘வாசிப்புப் போட்டி – 2017‘ இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டியில் நிறைவடையத்தக்க வகையில் விடை கிடைக்காத போதும் (அதாவது, நூல்களை வாசித்து நூலாசிரியர்களின்…
2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்னூல் வெளியீட்டுப் பணி ஊடாக “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற மின்னூல் வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம். ஏற்கெனவே, இம்மின்நூல் வெளியீடுபற்றிக் கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. https://www.facebook.com/yarlpavanan/posts/1780289532013328 https://yarlpavanan.wordpress.com/2017/12/02/உங்களுக்குக்-கவிதை-எழுத/ http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச்…
இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !
இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’ என்ற சொல்லாட்சியையும், முறையீடு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்து எழுநூற்று ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவிய முறையில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த திசம்பர் 8 ஆம் நாளன்று ஐ.நாவில் அளித்துள்ளனர். இது…
இலண்டன் கற்பகவிநாயகர் கோயில் விழா
மார்கழி 08-09,2048 சனி-ஞாயிறு திசம்பர் 23-24,2017 இலண்டன் கற்பகவிநாயகர் கோயில் விழா
‘தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு’
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உலக மனித உரிமை நாளில் நடாத்தப்பட்ட ‘தமிழர்களுக்கான மனித உரிமை மாநாடு’ இம் மாநாடு வெம்பிளியில்(Wembley International Hotel, Empire Way, Wembley, Middlesex, HA9 0NH)), கார்த்திகை 24,2048 / திசம்பர் 10, 2017, காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை நடை பெற்றது. தலை சிறந்த அறிவாளிகளை உள்ளடக்கி எம் இனத்துக்கு நடந்த இனப்படுகொலையை இவ்உலகுக்கு எடுத்துக்காட்டவும், காணி பறிப்பு, கமுக்கச் சித்திரைவதை முகாம், அரசியல் கைதிகள் விவகாரம் என்று பல செய்திகளை உள்ளடக்கிய…
பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா : கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம்
கார்த்திகை 26, 2048 செவ்வாய் 12.12.2017 மாலை 6.00 கி.இ.க. – ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை பாரதியாரின் 135 ஆம் பிறந்தநாள் பெருவிழா தலைவர்: முனைவர் ஆசைத்தம்பி இராமையா, மலேசியா சிறப்புரை: முனைவர் மறைமலை இலக்குவனார் திரு அன்பு செயா,ஆத்திரேலியா
இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு, இங்கிலாந்து
ஆனி 13-15, 2049 / 27 – 29.06. 2018 ஓப்பு (நம்பிக்கை) பல்கலைக்கழகம்(Liverpool Hope University) இங்கிலாந்து இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு SECOND INTERNATIONAL CONFERENCE ON THIRUKKURAL AS AN ETHICAL CORPUS OF UNIVERSAL APPEAL கருப்பொருள்: தமிழ் இந்தியாவின் எல்லை கடந்த திருக்குறள் ThirukkuRal beyond the frontiers of Tamil India கருத்தரங்கத் தலைப்புகள் (வரிசை எண் ங எழுத்திலிருந்து தொடங்கப்பெற்றுள்ளது) ங.திருக்குறளும் அறநெறி இலக்கியத்தின் தொடக்கத் தொகுப்பும் திருக்குறள் மீதான…
விட்ணுபுரம் விருது 2017
விட்ணுபுரம் விருது 2017 2017 ஆம் ஆண்டுக்கான விட்ணுபுரம் விருது மலேசிய எழுத்தாளரான சீ.முத்துசாமிக்கு வழங்கப்படுகிறது. கோவையில் மார்கழி 01, 02 / திசம்பர் 16,17 ஆம் நாள்களில் விட்ணுபுரம் விருது வழங்கும் விழாவும் வாசகர்கூடலும் நிகழவிருக்கிறது. 16 அன்று காலை ஒன்பது மணிக்குச் சந்திப்புகள் தொடங்கும். இரவு பதினொரு மணிவரை எழுத்தாளர்களுடன் உரையாடல்கள் நிகழும். 17 அன்று காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கி மாலை நான்குமணிக்கு முடிவடையும். மாலை ஆறுமணிக்குப் பொது நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும். சீ.முத்துசாமி மலேசியாவின் மூத்தப்படைப்பாளிகளில் தனித்துவமானவர். தொடர்ந்து தோட்டத்தைக் களமாக…
மாணாக்கர் நுழைவுத் தேர்விற்கான சிறப்புக்கருத்தரங்கம், துபாய்
கார்த்திகை 22, 2048 வெள்ளிக்கிழமை 08.12.2017 மாலை 5 மணி நோவோடெல் உறைவகம் துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்புக் கருத்தரங்கம் இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் 04 397 7777 / 058 8 488127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் cc.resonance@stree.ae என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். 5-ஆம் வகுப்பு முதல் படித்து வரும்…
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமை மாநாடு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சு நடாத்தும் மனித உரிமை மாநாடு பன்னாட்டு மனித உரிமை நாள் 2017 மிடில்செக்சு [World Human Rights Day 2017 Wembley International Hotel Empire WA, Wembley, Middlesex HA9 ONH] ஞாயிறு திசம்பர் 10, 2017 காலை 9.00 – மாலை 5.30 முன்பதிவுக் கட்டணம் £10 மட்டும் (கட்டாயம்) தொடர்பு : நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு மணிவண்ணன் நா.உ. மனித உரிமைஅமைச்சர், நா.க.த.அ. 07869133073 ஆறுமுகம் நா.உ. 07832 954281 நிர்மலர் நா.உ. 07877…
