வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி   கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான வனசுதர் அன்னலட்சுமிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பில் ஏற்கெனவே வேல்லிசன் நிறுவனத்தினால் மாடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாட்டுக் கொட்டகை அமைத்துதருமாறு கோரியிருந்தர். இதற்கிணங்க எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த திரு. சு. இரவிராசன் 20,000 உரூபா நிதி உதவியினை வழங்கியிருந்தர். நல்லுள்ளம் கொண்ட இரவிராசனின் உதவியினால் வனசுதர் அன்னலட்சுமி தனது வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளர்.   எமது சங்கத்தின் ஊடாக…

மனித நேயர் ஊடகப்போராளி மேத்தியூ இலீயை ஐ.நா. வெளியேற்றியது!

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீயை ஐ.நா.வலுக்கட்டாயமாக வெளியேற்றியது!   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புகளும் ‘ஐக்கிய நாடுகள் அவையை நம்பினோர் கைவிடப்படார்’ என மக்களை ஏமாற்றி வருகின்றன. ௨௦௦௯ (2009)-ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடங்கிய நாளிலிருந்தே இந்த ஏமாற்று வேலை மிகு வேகத்தில் தொடங்கி விட்டது. புலிகளையும் அதன் தலைவர்களையும் மக்களோடு சேர்ந்து வன்னியில் குந்தியிருக்குமாறு இத்தலைமைகள் அறிவுரை வழங்கின. அங்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் திடீரெனத் தோன்றிக் காப்பாற்றிவிடும் என்று ஏமாற்றினர்….

சான்சன் & சான்சன் உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!

சான்சன் & சான்சன் (Johnson & Johnson) நிறுவனப் பொருளால் புற்றுநோய் தாக்கிப் பெண் உயிரிழப்பு! உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!   அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வாழ்ந்த சாக்குலின் பாக்சு (Jacqueline Fox) என்ற பெண் 35 ஆண்டுக் காலமாக சான்சன் சான்சன் நிறுவனத்தின் முகமாவு (Talcum powder) முதலான பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.   அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் தனது 62ஆவது அகவையில்…

செருமனியில் உலகப்பெண்கள் திருநாள் 2016

  செருமனியில் தமிழ்ப் பெண்கள் கொண்டாடும் ‘உலகப் பெண்கள் திருநாள்’ – 2016 விழா   வரும் மாசி 29, 2047 /  மார்ச்சு மாதம் 12ஆம் நாள் அன்று ‘உலகப் பெண்கள் திருநா’ளை ஒட்டி செருமனியில் பாவரங்கம், நாட்டியம், நாடகம் முதலான கலைநிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற உள்ளது . தமிழ்ப்பெண்கள் அமைப்பு தரவு:

நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு

நாம் தமிழர்,  பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு   இணையம் வாயிலாக வாழ்த்துரை – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்) நாள்: 06-03-2016 [இடம்: Gandhi 15 rue de la longueral 91270 vigneux sur seine] நேரம்: பிற்பகல் 15 மணி முதல் 19 மணி வரை (போக்குவரத்து:  தொடர்வண்டித் RER-D இறங்கும் இடம் VILLENEUV-SAINTGEORGES) தொடர்புக்கு: 0781753203, 0758559417  

முழுமையாக முடங்கியது வட மாகாணம்

இலங்கை முழு அடைப்புப் போராட்டம் – முழுமையாக முடங்கியது வடக்கு மாகாணம்   வவுனியாவில் மாணவி அரிசுணவி படுகொலையைக் கண்டித்தும், இந்தக் கொடிய நிகழ்வுக்கு நீதி வழங்கக் கோரியும், ஏற்பாடு செய்யப்பட்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணம் பிப்ரவரி 24, 2016 அன்று முழுமையாக முடங்கியது.  பல்வேறு பொது அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், யாழ் வணிகர் கழகம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் இன்றைய பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.  இந்தப் போராட்டத்தினால், வடக்கு மாகாணத்தில் உள்ள…

இலங்கைச் சிறையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் ஐவரின் உடல்நிலை கவலைக்கிடம்

  இலங்கையில், தங்கள் விடுதலையை வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சிறைவாசிகளில் ஐவருடைய நிலைமை பாதிப்புக்குள்ளாகி யிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, போராட்டம் நடத்தியவர்களில் மூவர் சிறைப்பிரிவு மருத்துவமனையில் பிப்பிரவரி 25 அன்று சேர்க்கப்பட்டனர். உடல்நிலை பாதிக்கப்பட்டாலும் இசைவான மறுமொழி அரசிடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்ச் சிறைவாசிகளில் தெரிவித்துள்ளனர்.   கொழும்பு மகசின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல்  சிறைவாசிகள் பதினைந்து பேரும், அநுராதபுரச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் சிறைவாசிகள் இரண்டு பேரும் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்திச்…

மாமனிதர் இரா.நாகலிங்கம் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

    மாமனிதர் இரா.நாகலிங்கம் அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவேந்தல் செருமனியில் வரும் பங்குனி 14, 2047 – 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நான்கு மணிக்கு  நடைபெற உள்ளது. தரவு:  

படை நீக்கமே நல்லிணக்கம் – ஒப்புக்கொண்ட சிங்கள அமைச்சர்

படைகளைத் திரும்பப் பெறுவது நல்லிணக்கத்துக்கு இன்றியமையாதது – ஒப்புக் கொண்டார் இலங்கை வெளியுறவு அமைச்சர்   படைகளைத் திரும்பப் பெறுவது என்பது நல்லிணக்கத்தின் முதன்மையான ஒரு பகுதி என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக் கொண்டுள்ளார்.   இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்குப் பின்னும் தமிழர் பகுதிகளில் இலங்கைப் படைகள் குவிக்கப்பட்டிருந்தது பன்னாட்டு அளவில் தொடர்ந்து கண்டனத்துக்கு உள்ளாகி வந்தது.   இந்நிலையில், வாசிங்டனில் உள்ள அமைதிக்கான அமெரிக்க நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளித்த இலங்கை…

த.நந்திவர்மனின் எழில்பூக்கள்: நூல், குறுந்தகடு வெளியீடு

மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.30 சென்னை 6 ஔவை நடராசன் திருப்பூர் கிருட்டிணன் இசையமைப்பாளர் உதயன் காந்தளகம்