கம்பன் கழகம், காரைக்குடி போட்டி முடிவு விவரம்
கம்பன் கழகம், காரைக்குடி தை 17, 2047 / 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின்அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றன. 28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்றுக், கீழ்க் குறிப்பிடுவோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு.சாசகான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (உரூ 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (உரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி…
மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! – செந்தமிழன் மணியரசன்
மாசி 02, 2047 / பிப்.14, 2016 காலை 10.00 சென்னை மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! வேளாண்மை, வீடு கட்டுதல், மருத்துவம் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளை மரபுவழியில் மேற்கொள்ளத் தேவையான பயிற்சிகளைத் தொடங்குகிறோம். இம்மூன்று துறைகளுக்குமான பாடத் திட்டம் இதுதான். மரபு வேளாண்மை: பாடம் 1 • இயற்கையியல் எனும் அடித்தளத்தை அறிந்துகொள்ளுதல்: புவியின் உயிர் வகைகள் – தாவரங்களின் இயல்புகள் – மனிதர்களும் தாவரங்களும் – காடுகளும் மனித வாழ்வும் – தாவரங்களும் கூட்டு உயிரிகளின் இயல்புகளும் பாடம் 2 • ஐம்பூதக்…
உலகத் தமிழர்களுக்கான விலைமதிப்பில்லாச் சிறப்பு நாள்காட்டி – விலையில்லை!
அன்பு உறவுகளே ! வணக்கம். நீங்கள் இதுவரை கண்டிராத, நீங்கள் சற்றும் எதிர்பாராத ஓர் அழகிய நாள்காட்டி, உலகத் தமிழர் நாள்காட்டி. *பரப்புங்௧ள்!! *வாங்கிப்பயன் அடையுங்கள்!!! * எண்ணுக்குள் எண் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. (இப்படி வருவது உலகில் முதன் முறை.) * தனிக் கவனத்துடன் உருவாக்கப்பட்ட தனித்தமிழ் நாள்காட்டி. * நம் மொழி காக்க, இனம் காக்க, மண் காக்கப் போராடியவர்களின் செய்திகளுடன், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ அறிஞர்கள், நினைவெழுச்சி நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்து விவரங்களும் உள்ளடங்கிய நாள்காட்டி . * உலக நாள்காட்டி வரலாற்றில்…
திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் ?
உலகத் தமிழர்களுக்கு அடையாளமாக விளங்கும் திருவள்ளுவருக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்த போதிலும் இந்த நாளை உலகத் தமிழர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியைத் தமிழர்களிடைய அரசு கொண்டு செல்லவில்லை. தமிழ் அமைப்புகள் மட்டும் தங்களால் முடிந்தவரை சிறிய அளவில் இந்நாளில் நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்நாளில் அறியப்பட வேண்டிய திருவள்ளுவரின் புகழை இன்று தமிழர்களே அறியாத நிலை தான் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையை நாம்தான் மாற்ற வேண்டும்….
நூலறிமுகம் – நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்)
நான் முன்னுரைத்த முன்னுரைகள் (2 தொகுதிகள்) ஆசிரியர்: ப.அருளி வேரியம் பதிப்பகம் ஒரு தொகுதி: உருவா 300 இரண்டு தொகுதிகள் : உருவா 500 பல்வேறு நூல்களிலும் இதழ்களிலுமாக அருளி அவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள முன்னுரைகளின் தொகை. உரை எழுதுவது முடிவெய்திய பிறகு, -அவ் உரை நூலைப் படிக்கப் புகுவதற்கும் முன்னர்… எதற்காக? என்ன பொருளில்? யாரால் இது ஆக்கம் பெற்றுள்ளது?… என்பவற்றுக்கான தொடக்கவாயில் ஒன்று, அடிப்படைத் தேவையாயுள்ளமை – அறிவுலகத்தின்கண் பரவலாக எழவே, நூலின் முகப்பாகிய வாயிலில் இவ்விளக்கப்பதிவினை முற்படுத்தும் வழக்கம் தோன்றித்…
அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு
அயலகத் தமிழ்ப் படைப்பாளிகள் கவனத்திற்கு தமிழ் நாடு பெரம்பலூாில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான புத்தகத்திருவிழா சனவரி 29 ஆம் நாள் தொடங்கி பிப்பிரவாி 7 ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் வெளிநாட்டுவாழ் தமிழா்களின் புத்தகங்களை விற்பதற்கான தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கில். வெளிநாட்டில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களை அனுப்பி வைத்தால், அவை தனி அரங்கில் வைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும். வெளிநாட்டு வாழ் தமிழ் படைப்பாளிகள் குறித்து வாசகா்கள்…
சார்சாவில் பல் மருத்துவ இலவச முகாம்
சார்சா (உ)ரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்துறை மருத்துவக்கூடத்தில் இலவச பல் மருத்துவ முகாம் சனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்குத் தேவையான அனைத்து விதமான மருத்துவம் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர் 06 – 5685 022 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – முதுவை இதாயத்து
ஓம்தமிழ் கலைச்சொல் செயலி
புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே அதிகமுள்ளதால் தமிழின் பயன்பாடு அருகி வருகின்றது. இந்நிலையை மாற்ற கலைச் சொல்லாக்கம் இன்றியமையாததாகின்றது. இச்செயலியின் நோக்கம் கலைச்சொற்களை தொகுத்துத் தமிழின் பயன்பாடை அதிகரிப்பதுதான். புதிய கலைச்சொற்களை ஒன்றிணைத்து அடுத்த பிறங்கடையினரின் தமிழ் வழிக் கல்விக்கு உதவும் வகையில் இச்செயலியை உருவாக்கியுள்ளோம். முதற்கட்டமாக இணையத்தில் காணப்படும் கலைச் சொற்களை தொகுத்து இச்சேவைக்கு வித்திட்டுள்ளோம். ஆண்டிராய்டு திறன்பேசியில் நிறுவ https://play.google.com/store/apps/details… ஓம்தமிழ் தரவு: முகிலன் முருகன்
மின்னூலில் வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள்
வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள் தமிழ்த்தேனீ மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com உரிமை – பொதுப்படைப்பு கிரியேட்டிவ் காமன்சு (Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0). எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – தமிழ்த்தேனீ rkc1947@gmail.com பதிவிறக்க* http://freetamilebooks.com/ebooks/vetri-chakkaram-short-stories/
மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்! – ஞா.கிருட்டிணப்பிள்ளை
மட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்! “மட்டக்களப்புக்கு விடிவு காண வாருங்கள்” என்னும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டக் கிழக்கு மாகாண அவை உறுப்பினர் ஞா.கிருட்டிணப்பிள்ளை துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் விவரங்கள், கைப்பற்றப்பட்ட எமது மக்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றச் சிக்கல் ஆகியவற்றுக்கு நாம் முதன்மையாக முகம் கொடுக்கும் வேளையில், நிலையான அரசியல் தீர்வுக்கான நகர்வையும், எமது அரசியல் பயணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற வகையில் தெரிவிக்காமல் செய்து வருகின்றோம் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற…
தமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” – திருமூலர் தமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி மொத்தப்பரிசு உரூ.10,000 /- இறையன்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும் வணக்கம். தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில் “நமக்குத் தேவை தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும்” என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிக்கான பரிசுகளாக முதல் பரிசு உரூ. ஐந்தாயிரம் (5,000/-) இரண்டாம் பரிசு உரூ. மூவாயிரம் (3,000/-) மூன்றாம் பரிசு உரூ. இரண்டாயிரம் (2,000/-) வழங்கப்பெறும். பரிசுத்தொகைகளை இலக்குவனார் இலக்கிய…
காஞ்சி மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்
<utpkaanchi@gmail.com> அன்புடையீர் வணக்கம் வாழிய நலத்துடன் உலகத் திருக்குறள் பேரவை •காஞ்சிபுரம் மாவட்டம்• 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள் பொது: 1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல் 2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான் கல்லூரி மாணவர்க்கு: 1) கட்டுரைத் தலைப்பு – இருளறுக்கும் மங்கல விளக்கு 2) மரபுக் கவிதைத் தலைப்பு – எல்லாப் பொருளும் இதன்பால் உள 3) புதுக்கவிதைத் தலைப்பு –…
