2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன்
2015 ஆம்ஆண்டின் இயல்விருதாளர் இ.மயூரநாதன் இவ்வருடத்திற்கான இயல் விருது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தை உருவாக்கி ஒருங்கிணைக்கும் மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயல் அமைப்பின் செய்தி: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆண்டுதோறும் வழங்கும் வாழ்நாள் அருவினையாளர்(சாதனையாளர்) விருது (இயல் விருது) இம்முறை ‘தமிழ் விக்கிப்பீடியா’ என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சியக் கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17 ஆவது இயல் விருது ஆகும். அறிவு என்பதே உலகளாவிய…
இனிய நந்தவனம் – மலேசியா சிறப்பிதழ்: அறிவிப்பு
சந்திரசேகர்<nandavanam10@gmail.com> முதுவை இதயத்து (MUDUVAI HIDAYATH) துபாய் 00971 50 51 96 433
பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடரியில் புதிய ஏற்பாடு!
விரும்பிய இடத்தில் மாறிக் கொள்ளும் வசதி! தனியாகப் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்வண்டியில் புதிய ஏற்பாடு! தொடர்வண்டிப் பயணத்தின்பொழுது சுற்றிலும் ஆண் பயணிகள் இருந்தால், பெண் பயணிகள் வேறு இடத்துக்கு மாறிக் கொள்ளும் வசதியைத் தெற்கு இருப்பூர்தித்துறை (Southern Railway Department) அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தெற்கு இருப்பூர்தித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர்வண்டிப் பயணங்களின்பொழுது சில நேரங்களில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு, சுற்றிலும் ஆண் பயணிகளே இருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெண்கள் வசதிக்குறைவாகவும், பாதுகாப்பு இன்றியும் உணர்கின்றனர்….
ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்
ஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்து மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்களை ‘கியூ’ பிரிவு காவலர்களும், வருவாய் அதிகாரிகளும் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஐயத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்துவது, பைப்பறி(பிக் பாக்கெட்டு), வழிப்பறி செய்தார்கள் போன்ற இல்லாத, சொத்தையான காரணங்களைக் கூறியும், காரணங்கள் ஏதுமில்லையெனும் நிலையில் அயல் நாட்டவர்…
ஈழ ஏதிலியர் இரவீந்திரன் தற்கொலையால் தமிழகத்திற்குக் கெட்ட பெயர்! – வைகோ வேதனை!
[பொதுக்குறிப்பு : செய்தியைமுந்தித்தரும் ஆவலில் வெவ்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இறந்தவர் பெயர் இரவிச்சந்திரன், இரவீந்திரன் என்ற முரண்பாடு; இறந்தவர் தன் மகன் பிரவன் இல்லாமைக்கான காணரத்தை விளக்கியதாகவும், அவரே காலத்தாழ்ச்சியாக வந்ததாகவும இருவேறு தகவல்; முகாம் உள்ள ஊரின் பெயரிலும் முரண்பாடு; வருவாய்ஆய்வர் பெயர் இராசேந்திரன், துரைப்பாண்டி என்ற முரண்பாடு; நேரடியான செய்தி எதுவும் வராததால்,ஊடகங்கள் செய்திகளை நன்றியுடன் பகிர்கிறோம். – ஆசிரியர்] ஈழ ஏதிலியர் இரவிச்சந்திரன் தற்கொலையால் உலக அளவில் தமிழகத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக ம.தி.மு.க…
உலகளாவிய இரு போட்டிகளுக்கு ஒவ்வோர் இலட்சம் உரூபாய்ப் பரிசு
ஒவ்வோர் இலட்சம் உரூபாய் இரு போட்டிகளுக்குப் பரிசு புதினம் 20 ஆவது ஆண்டில் நடத்தும் சிறுகதை, கட்டுரைப் போட்டிகள் இலங்கை மக்களிள் வாழ்வியல் பற்றிய உலகச் சிறுகதைப்போட்டி – பரிசுத்தொகை உரூபா நூறாயிரம் அமரர் சின்னத்தங்கம் இரத்தினம் நினைவாக, நெஞ்சைத்தொட்ட தாயின் நிலைையை எழுதுவோருக்கும் மொத்தப் பரிசு உரூபா நூறாயிரம். இரு போட்டிகளும் உலகளாவியது. படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர், புதினம், 38, மொபட்டு சாலை, இலண்டன் [ Editor, PUTHINAM 38, Moffat Road, London, SW 17 7EZ UK…
தெய்வத்தரிசனம் இணையத் தளமாக வெளிவர உள்ளது
அன்பான வாசகர்களே! உங்களின் தெய்வத்தரிசனம் விரைவில் இணையத் தளமாக வெளிவர உள்ளது. இது முழுவதும் இறைநெறியையே – ஆன்மிகத்தையே – கொண்டதாக இருக்கும். இது ஒரு தனி மனிதனின் தொகுப்பாக இல்லாமல் வாசகர்களின் குரலாகவே இயங்க உள்ளது. இந்த இணையத்தளத்தில் செய்திகளாக இருந்தாலும் சரி, விளம்பரங்களாக இருந்தாலும் சரி வாசகர்களின் பங்களிப்பையே விரும்புகிறது. உங்கள் குலத்தெய்வக் கோயில்கள்பற்றிய தகவல்களையும், உங்களுக்குத் தெரிந்த இறைநெறித் தகவல்கள், கதைகள், கழுவாய்கள்(பரிகாரங்கள்), அற்புதங்கள்பற்றிய விளக்கமான செய்திகளையும் எழுத்து மூலமாகவோ, தட்டச்சு செய்தோ அனுப்பலாம். ஏதோ தகவல்களை…
எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை – வைகோ
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை (Budget) ! – வைகோ “நடுவண் அரசின் பொது நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடுவண் நிதி அமைச்சர் அருண் செத்லி அளித்துள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதாம் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளியல் (economical) வளர்ச்சி 8.6 விழுக்காடு(%) இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது…
ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு
ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு “இராசீவுகாந்திக் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் எழுவர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு” என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராசீவுகாந்திக் கொலை வழக்கில், செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு நடுவண் உள்துறைச்…
ஏழு பேர் விடுதலையில் கலைஞர் – செயலலிதா நாடகங்களை மக்கள் மறந்துவிடவில்லை! – வை.கோ
ஏழு பேர் விடுதலையில் கலைஞர் – செயலலிதா நாடகங்களை மக்கள் மறந்துவிடவில்லை! – வைகோ ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை: கடந்த பிப்பிரவரி 23ஆம் நாள், வேலூர்ச் சிறையிலிருந்து காப்பு விடுப்பில்(parole) வந்த நளினி, மறைந்த தன் தந்தையின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார். “பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபொழுது என்ன பேசினார்” என்ற சூனியர் விகடன் செய்தியாளரின் கேள்விக்கு, “அதை இப்பொழுது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து கிளம்பும்பொழுது எனக்கு எந்த வசதியும்…
42 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகள் தடை
தேர்தல் செலவுக் கணக்கை அளிக்காத 42 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகள் தடை நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான முப்பது நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவுக் கணக்கை அளிக்க வேண்டும். அப்படிஅளிக்காதவேட்பாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடாதவாறு தடை போடத் தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டு. 1951-ஆம் ஆண்டின் மக்கள் சார்பாளுகை(பிரதிநிதித்துவ)ச் சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவுகளின்படி, தமிழகத்தில் தேர்தல் செலவுக் கணக்கை அளிக்காதவேட்பாளர்கள் 42 பேருக்கு…
அண்ணாமலைப்பல்கலையில் திருக்குறள் கருத்தரங்கம்
வணக்கம். பிப்பிரவரி மாதம் 3, 4 ஆகிய நாள்களில் நடைபெற இருந்த திருக்குறள் கருத்தங்கம் தவிர்க்க இயலா காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டது. அக்கருத்தரங்கம் வரும் மாசி 27, 28 / மார்ச்சு 10,11 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது. நன்றி முனைவர் சா.இராசா அண்ணாமலைப் பல்கலைக்கழகம் [படத்தை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.]
