மொழிப்போர் வீரவணக்கநாள், வள்ளலார்நகர்
இந்த ஆண்டு மொழிப்போர் ஈகியர் நாள் நிகழ்வுகள் பல ஊர்களில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது . சிறப்பு: தை 11, 2047 / 25 01 2016 திங்கள் காலை 9 மணிக்கு மூலக் கொத்தலத்தில் உள்ள மொழிப்போர் முதல் ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடம் நோக்கிப் பேரணி! ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடத்தில் மொழிப்போர் வரலாற்று நினைவிடம் அமைத்திடு! தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கிடு!- தமிழ் உரிமைக் கூட்டமைப்பு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அனைவரும் வாரீர் வாரீர் .
கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில் நூல் வெளியிட்டு விழா
வணக்கம். எதிர்வரும் தை 07, 2047 / 21-1-2016 மாலை, 6.30 மணிக்கு, கிள்ளான் புன்னகை(சுமைல்சு) உணவகத்தில், அறிஞர் மா.சோ.விக்டர் அவர்களின் “பண்டைய தமிழரின் நில மேலாண்மை” என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது.. அனைவரும் அன்புடன் வருக! தொடர்புக்கு.: செயகோபி 019-3307252., மரு. ஆனந்தஇராசன் 019-2256402. நன்றி ஆனந்தஇராசன்
கொடுவாளெடுக்கத் தயக்கமேன்? – வாணிதாசன்
தமிழ்மறை போற்று கின்றீர்: சங்கநூல் விளக்கு கின்றீர்; தமிழ்மொழி எங்கள் ஈசன் தந்ததொன் மொழியென் கின்றீர்; தமிழ்மொழி தொலைக்க வந்த இந்தியை வெட்டிச் சாய்க்கத் தமிழ்ப்புல வீர்காள்! ஏனோ தயங்குகிறீர்! மனமே இல்லை! தமிழரே திராவி டத்தில் தனியர சாண்டி ருக்கத் தமிழர்கள் வடவ ருக்குத் தலைசாய்த்து வாழ்வதற்குத் தமிழரில் ஒருசி லர்கள் சரிசரி போடக் கண்டும் தமிழ்க்கொடு வாளெ டுக்கத் தயக்கமேன்? மனமே இல்லை! வாணிதாசன்
சப்பானில் சல்லிக்கட்டை வலியுறுத்தி மாபெரும் ஓவியப்போட்டி!
சல்லிக்கட்டை வலியுறுத்தி சப்பானில் மாபெரும் ஓவியப்போட்டி. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்துகள்!! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு மாசி 01, 2047 / பிப்பிரவரி 13ஆம் நாள் நடைபெறவிருக்கும் நமது பொங்கல்விழாவை முன்னிட்டுச் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு ஓவியப்போட்டி நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த வருடம் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்குமாகச் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் நடத்தப்படவுள்ளது. நடைபெறும் இடங்கள்: 1.கொஅனா இன்டர்நேசுனல்,கவாசாகி [Kohana International school,Kawasaki] 2.சேய்சின்சோ சமூக கூடம், நிசிகசாய் [Seishinchou community…
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் விழா 2047 / 2016
அனைவருக்கும் அன்புகலந்த இனிய வணக்கங்கள்! மார்கழிக்குளிரை வென்று தத்தம் மனைகளின் முற்றத்தில் மாக்கோலமதனைத் தீட்டி பசுஞ்சாணப் பிடியதனில் பரங்கிப்பூச் சொருகி வைத்து ஆதவன்தன் வடதிசை பயணத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த களைப்பு நீங்க காளைகளை அடக்கி ஆளும் தமிழ்க் காளைகளின் வீரம் பொங்க சீர்கொண்டு வந்திறங்கும் சுறவமகளை வரவேற்று வயற்தாயின் வயிற்றில் விளைந்த நெல்மணி முத்துகள் திரட்டி புத்தரிசிப் பொங்கலிட்டுப் பொங்கலோ!பொங்கல்!! எனத் தீந்தமிழ் மாதரும் தோள்கள் தினவெடுத்த தமிழரும் குதூகலமாய்க் குடும்பத்துடன் தொன்றுதொட்டு தரணிதனில் திகட்டாமல் கொண்டாடி மகிழ வாய்த்ததொரு நன்னாளாம்!-நம்…
தமிழர் எழுச்சி இயக்கத்தின் புத்தாண்டுக் கொண்டாட்டம், தி.பி.2047
மார்கழி 26, 2046 – தை 01, 2047 சென்னை
பொங்கல்விழா, திருவள்ளுவர் புத்தாண்டு, கலை நிகழ்வுகள், பழைய வண்ணாரப்பேட்டை
தமிழ்நாடு மக்கள் விடுதலை முன்னணி தேசிய மாணவர் இளைஞர் இயக்கம்
தமிழர் கலை இலக்கியப் பொங்கல் விழா, தஞ்சாவூர்
தஞ்சைத் தமிழ்ச் சங்கம், மருதப்பா அறக் கட்டளை
இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் தைப்பொங்கல் விழா – 2047 / 2016, அமெரிக்கா
தை 03, 2047 / சனவரி 17, 2016 காலை 10.00 முதல் பிற்பகல் 01.00 வரை
பொங்கல் விழா 2047 / 2016, கனடா
தை 03, 2047 / சனவரி 17, 2016 காலை 10.00 முதல் பிற்பகல் 02.00 வரை கனடிய மண்ணில் உள்ள தமிழ்த் தேசிய அமைப்புகளுள் சிலவான கனடியத் தமிழர் தேசிய அவை, அறிவகம், ஆகிய அமைப்புகளோடு இணைந்து கனடியத் தமிழ் வானொலியும் சேர்ந்து தமிழர் மரபுரிமைத் திருவிழாவாம் தைப் பொங்கல் விழாவை இளம் தமிழர் மனத்தில், தமிழர்நாள் நினைவுகள் தித்திக்கும் வண்ணங்களாகப் பதியும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்த்த உள்ளார்கள். அனைவரும் இந்நிகழ்வுக்கு வருக என அன்போடு அழைக்கின்றார்கள்,…
தமிழ்க்கூடல், தனிப்பாடல்
மார்கழி 27, 2046 / சனவரி 12, 2015 சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இந்த ஆண்டின் முதல் நிகழ்வுக்கு, சென்னைக் கம்பன் கழகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். 9841181345.
133 பறையிசைக்கத் திருவள்ளுவர் சிலை திறப்பு, திருப்பூர்
தை 24, 2047 / பிப்பிரவரி 07, 2016
