பகுபடைத்தலைவர் பால்ராசின் ‘சமர்க்கள நாயகன்’ நூல் அறிமுக விழா

  தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பகுபடைத்தலைவர் பால்ராசு  27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர். தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாகச் செயற்பட்டவர். இவரது நினைவுகளைச் சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீட்டுப்  பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியீடப்பட்ட நூல் …

ஈழமும் பன்னாட்டுச் சதிகளும் – ஈரோட்டிலும் கோபியிலும் கருத்தரங்கம்

கோபியில் சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் காலை10 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். ஈரோட்டில்  சித்திரை 06, 2046 / 19 ஏப்பிரல் மாலை 5 மணிக்கு ஈழம் குறித்தான கருத்தரங்கம். மே17 இயக்கம் தவறாமல் வருக!

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில் பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன். மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00    http://wintvindia.com இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம்.  வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

சாதியும் சமயமும் – ஒரு பன்மய விவாதம் சேலத்தில் முழுநாள் கருத்தரங்கம்!

  “சாதியும் மதமும் – ஒரு பன்மய விவாதம்” என்ற தலைப்பில், சேலத்தில் சித்திரை 05, 2046 / ஏப்பிரல் 18, 2015 சனிக்கிழமை முழுநாள் கருத்தரங்க நிகழ்வு நடைபெறுகின்றது.     மாரி தலம், ஆக்கம், நிழல், தளிர்கள், ஐந்திணை வாழ்வியல் நடுவம், சேலம் பேச்சு ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் இவ்விவாத நிகழ்வு, சேலம் மூக்கனேரி ஏரிப் பகுதியிலுள்ள, மாரி தலத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகின்றது.   காலை 10 மணி முதல்…

ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சி தொடக்கவிழா

  அன்புடையீர், வணக்கம். உலகத் தமிழரின் உறவுப் பாலமாய் வெளிவரும் ஐ.பி.சி. (IBC) தமிழ்த் தொலைக்காட்சியின் தொடக்கவிழா எதிர்வரும் சித்திரை 6, 2046 / ஏப்பிரல் 19 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாய் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். நேரம்: மாலை 6மணி  இடம்: இலண்டன் தொகுப்பறை, ஐஎல்இசி மாநாட்டு மையம், 47, (இ லில்லி சாலை, இலண்டன் [London suite, ILEC Conference Centre, 47, Lillie road, London, SW6 1UD] விழா, கலை நிகழ்ச்சியுடன் தொடங்கி விருந்துடன் நிறைவுறும்….

பிரண்டைத் திருவிழா – பனை ஓலை நுழைவுச் சீட்டு!

சித்திரை 20, 2046 / மே 3, 2045 பனை ஓலையில் நுழைவுச் சீட்டு! நண்பர்களே, பிரண்டைத் திருவிழாவிற்கான நுழைவுச் சீட்டுகளைப் பனை ஓலையில் அச்சிட்டுள்ளோம். பனை மட்டைகளை வெட்டிப், பதப்படுத்தி, வடிவாக நறுக்கி இதை உருவாக்கியுள்ளோம். பிரண்டைத் திருவிழா என்பதே மரபு வாழ்வியலை மீட்டெடுக்கும் பணிகளுக்கானதுதான். அதன் நுழைவுச் சீட்டு, தொன்மையான நமது பனை ஓலைத் தொழில்நுட்பத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளது. இப்பணியில் ஈடுபடும் இராச நவநீதகிருட்டிணன் , அவர் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நம் வாழ்த்துகள். பிரண்டைத் திருவிழா முத்திரை (logo) உருவாக்கியவர்: அருண் குமார் பெ…

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் : மாத இலக்கியக் கலந்துரையாடல்

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாத இலக்கியக் கலந்துரையாடல் எமது புத்தாண்டு ஒருங்கிணைப்பு: வைத்திய கலாநிதி இலம்போதரன் நிகழ்ச்சி நிரல்: எமது புத்தாண்டு – காலக்கணித மரபு – கலாநிதி பால.சிவகடாட்சம் எமது புத்தாண்டு – தமிழர் மரபு – திரு.வே.தங்கவேலு (நக்கீரன்) எமது புத்தாண்டு – அறிவியல் மரபு – திரு.சிவ.ஞானநாயகன் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: சித்திரை 12, 2046 / 25-04-2015 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் 3A, 5637, Finch avenue East, Scarborough,…

தமிழ்த்தேசச் சூழலியல் மாநாடு

அன்பான தோழருக்கு வணக்கம்!  சிதம்பரத்தில் வரும் பங்குனி 24, 2046 / ஏப்பிரல் 7 செவ்வாய் அன்று நடைபெறவுள்ள “தமிழ்த்தேசச் சூழலியல் மாநாட்டில்” கலந்து கொள்ளவும், மாநாட்டு அழைப்பிதழை தங்கள் நண்பர்கள், சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்ளவும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! தங்கள் முகநூல் பக்கங்களில், மாநாடு குறித்துத் தாங்கள் எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும்!  நன்றி! தோழமையுடன், க.அருணபாரதி தலைமைச் செயற்குழு உறுப்பினர், பேசி:  9841949462 தலைமைச் செயலகம், தமிழ்த் தேசியப் பேரியக்கம்  பேசி: 7667077075, 9047162164 ஊடகம்: www.kannotam.com இணையம்: tamizhdesiyam.com