உ.வே.சா.வின் என் சரித்திரம் 4

(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 3 இன் தொடர்ச்சி) அத்தியாயம்-2என் முன்னோர்கள் ‘பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராசா உதவி செய்ய வேண்டும்’ என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போசனம் செய்வித்து மிகுதியான தட்சிணையும் கொடுத்து அனுப்பினார். அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விசயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம்…

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3

(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3 தொடர்ச்சி) 1. மொழிபெயர்ப்புப் பணி சேம்சு ஆலன் என்னும் மேனாட்டுப் பெரியாரின் கருத்துகள் சிதம்பரனாரின் நெஞ்சைப் பிணித்தன.‘அகத்திலிருந்து புறம்’ (Out from the heart) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கோயமுத்துார்ச் சிறைவாசத்தின் போது இந்நூல் மொழிபெயர்க்கப்பெற்று, அவர் விடுதலை அடைந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1-4-14 அன்று ‘அகமே புறம்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. நூலின் முன்னுரையில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு : “இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும், சிறுவரும் சிறுமியரும் கற்க…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 3

(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 2/4 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் 3 அத்தியாயம் 1 – எங்கள் ஊர் கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா சோசியர் மேல் விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும் (இ)ரிசபம் போன்ற நடையையும் முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரசுதேதார் மூலமாக அவரைச் சில விசயங்கள் கேட்கலானார். கலெக்டர் :-உமக்குப் படிக்கத் தெரியுமா?சோசியர் :-தெரியும்.கலெக்டர் :-கணக்குப் பார்க்கத் தெரியுமா?சோசியர் :-அதுவும் தெரியும். நான் சோசியத்தில்…

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 தொடர்ச்சி) செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் 1/3 இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் தலைப்பட்டு நின்ற அவர் கடலில் கலம் செலுத்த நினைத்ததோடு நிலையான தமிழ்த் தொண்டினையும் ஆற்ற முனைந்தார். அந்நல்லுள்ளத்தின் பயனாகச் சில நற்பேறுகள் தமிழிற்கு வாய்த்தன எனலாம்….

உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4

(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 1/4 தொடர்ச்சி) என் சரித்திரம் மகாமகோபாத்தியாய முனைவர் உ. வே. சாமிநாதர் அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 2/4 இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதான புரத்துக்கும் ‘எங்கள் ஊர்’ என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர்தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புகள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகசுதர்கள்…

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 4/4 : ஓய்வுக் காலப் பணி

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 3/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ்  1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 4/4 பணியிலிருந்து ஓய்வுபெற்றபின் ஏறத்தாழ 25 ஆண்டுகள் தமிழ் நூற்பதிப்பிலேயே தம் காலத்தை ஐயரவர்கள் கழித்து வந்தார். தம் வாழ்நாள் அனுபவங்களை விரிவான உரை நடையில் எழுதத் தொடங்கினார். பல பத்திரிகைகளின் மலருக்குக் கட்டுரைகள் வழங்கினார். கலைமகளில் மாதந் தோறும் ஒரு கட்டுரை எழுதி வந்தார். அவர் கட்டுரைகளில் தமிழ் மக்களின் பழம் பெருமையையும் புலவர் பெருமக்களின் வரலாறுகளையும் பண்புகளையும் விளக்கி…

என் சரித்திரம்-உ. வே. சா. : அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 1/4

(உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை தொடர்ச்சி) என் சரித்திரம்மகாமகோபாத்தியாய முனைவர் உ. வே. சாமிநாதர்அத்தியாயம் 1 – எங்கள் ஊர் 1/4 சற்றேறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூர் சமசுதானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்தும், தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில், தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து கல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போசனம்…

. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. : 3/4

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா. 2/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ்  1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – 3/4 சேலம் இராமசாமி முதலியார் தூண்டுதலினால் சமண நூலாகிய சிந்தாமணி நூலை ஆராய்ந்தார். சைன சமய உண்மைகளைச் சமணப் புலவர்களிடம் உரையாடித் தெரிந்து கொண்டார். 1887ஆம் ஆண்டு சீவக-சிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குத் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமதிப்பைத் தேடித் தந்தது. சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டும், சிலப்பதிகாரமும், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களும் வெளிவந்தன. புறநானுாறு…

உ.வே.சா.வின் என் சரித்திரம், முகவுரை

என் சரித்திரம் சிவமயம்முகவுரை திருத்தாண்டகம் திருச்சிற்றம்பலம்“திருவேயென் செல்வமே தேனே வானோர்        செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீமிக்கஉருவேயென் னுறவேயென் னூனே ஊனி        னுள்ளமே யுள்ளத்தி னுள்ளே நின்றகருவேயென் கற்பகமேகண்ணே கண்ணிற்        கருமணியே மணியாடுபாவாய் காவாய்அருவாய வல்வினை நோயடையா வண்ணம்        ஆவடுதண் டுறையுறையு மமரரேறே.”திருச்சிற்றம்பலம் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு முதலிய நூல்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு தமிழன்பர் பலர் பாராட்டி வரும்போது எந்தையாரவர்கள் தம் ஆசிரியராகிய மகாவித்துவான் திரு மீனாட்சிசுந்தரம் (பிள்ளை)யவர்களை…

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4

(தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.1/4 தொடர்ச்சி) சான்றோர் தமிழ் 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.  2/4 ‘நான் தமிழ் படிக்க வேண்டுமென்று தொடங்கிய முயற்சி வறுமையாலும் வேறு காரணங்களாலும் தடைப்பட்டுத் தடைப்பட்டுச் சோர்வடைந்தது. ஆனால் அப்படியே நின்றுவிடவில்லை; எல்லாருடைய வற்புறுத்தலுக்கும் மாறாக என் உள்ளம் இளமையிலிருந்தே தமிழ்த் தெய்வத்தின் அழகிலே பதிந்து விட்டது. மேலும் மேலும் தமிழ்த்தாயின் திருவருளைப் பெற வேண்டுமென்று அவாவி நின்றது.’(என் சரித்திரம் ; பக்கம் : 221-222)என்று சாமிநாத( ஐய)ரே…

உ.வே.சா.வின் என் சரித்திரம், பதிப்புரை

உ.சா.வின் என் சரித்திரம் பதிப்புரை ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை        எழுதி யாய்ந்த குறிப்புரை யெத்தனைபாடு பட்ட பதத்தெளி வெத்தனை        பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனைநாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு        நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனைகூட நோக்கினர்க் காற்றின வெத்தனை        கோதி லாச்சாமி நாதன் றமிழ்க் கென்றே!        – இரா.இராகவையங்கார்தமிழ்த்தாத்தா அறிஞர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது. இந்நூலைக்…

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா – சி.பா.1/4

சான்றோர் தமிழ் 1. தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா 1/4 தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப் பெறுவது தஞ்சை மாவட்டம் ஆகும். ‘கலை மலிந்த தஞ்சை’ என்றும் தஞ்சை மாவட்டம் போற்றப் பெறும். ஆடல், பாடல்களும், அழகுக் கலைகளும் நிறைந்த மாவட்டமும் தமிழ் நாட்டில் அதுவேயாகும். ‘பெரிய கோயில்’ என்று சிறப்பாகப் பேசப்பெறும் முதலாம் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோயில் அமைந்திருப்பதும் தஞ்சை மாவட்டத்திலேயேயாகும். வற்றாத வளம் கொழித்துக் காவிரிப் பேராறு பாய்ந்து வளம் சிறக்கும் நாடு தஞ்சை மண்ணேயாகும். இத்தகு பெருமை…