வாணாள் குறைவது அரசின் பனைமரத்திற்கு அழகா! -குமரி அனந்தன்
வாணாள் குறைவது அரசின் பனைமரத்திற்கு அழகா! தொல்காப்பியத்தில் ஒரு பொருளைப் பெரிதாகச் சொல்வதற்குப் ‘பனையளவு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளைத் தினையளவு என்றும் பெரிய பொருளைப் பனையளவு என்றும் ஒப்பிட்டனர். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104 ஆவது, பொருட்பாலில் 433 ஆவது, இன்பத்துப்பாலில் 1282ஆவது குறள்களில் பனை என்று வருகிறது. ‘கள் உண்ணாமை’ என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில்தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில்…
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார்
செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் – இலக்குவனார் திருவள்ளுவன் உலகின் முதல் மொழியான தமிழ், உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் செம்மைச்சிறப்புடன் தோன்றும் பொழுதே செம்மொழியாய் அமைந்தது. இருப்பினும் ஆங்கிலேயர் ஆட்சியில் செயற்கை மொழியான சமற்கிருதம் போன்றவற்றைச் செம்மொழி என்ற போர்வையில் ஊக்கப்படுத்தி வந்தது அரசு. ஆனால் உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கும் செம்மொழிக்குரிய அறிந்தேற்பு வழங்க வேண்டும் என நல்லறிஞர்கள் குரல் எழுப்பி வந்தனர். இதன் தொடர் நிகழ்வால் 12.10.2004 அன்று மத்திய அரசு தமிழுக்கான செம்மொழி அறிந்தேற்பை வழங்கியது….
இலக்குவனாரின் புதிய பார்வை – இலக்குவனார் திருவள்ளுவன்
இலக்குவனாரின் புதிய பார்வை இலக்குவனார் திருவள்ளுவன் தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் புரிந்து கொள்ளப் பெரும் உதவியாகஇருப்பன உரைகளே ஆகும். இலக்கிய, இலக்கணக் கடலின் கலங்கரை விளக்கங்களாக உரையாசிரியர்கள் திகழ்கின்றனர். உரையாசிரியர் களால் பல மூல நூல்களும் நமக்குக்கிட்டும் வாய்ப்பு அமைந்துள்ளன. நமக்கு வழிகாட்டும் உரையாசிரியர்களுள்இக்காலத்தில் போற்றத் தகுந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர்முனைவர் சி.இலக்குவனார். உரையாசிரியர்கள் இலக்கிய விளக்கம்நமக்குப் பயன்தருகின்றன என்பது ஒரு பக்கம். மறுபுறமோ, அவர்கள், தம் காலச்சூழலுக்கேற்ற உரை விளக்கம் அளித்தும் தம் விருப்பு வெறுப்புக்கேற்பமூலநூல்களை அணுகியும் பொருந்தா உரைகளும் அளித்துள்ளனர்…
எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! – கவிஞர் தணிகைச்செல்வன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! எங்கேயும் நான் தமிழனாக இல்லை! நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா? என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானியிடம்…
பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்
பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப் பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தைமகற்காற்றும் நன்றி, மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய அக்காலச்சூழலையும் திருவள்ளுவர் கருத்தையும் நன்கு விளக்கி யுள்ளார். இவ்வாறுபெண்களும் ஆண்களும் இணை என்ற பழந்தமிழ்நெறிக்கு மாறான பிறரின் விளக்கங்களுக்குப் பேராசிரியர் தந்துள்ள மறுப்புகள் அனைவரும்…
தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை
தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார். அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…
இலக்குவனார் குறள்நெறி நாளிதழ் தொடங்கியதன் காரணம்
குறள்நெறி இதழ்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் திங்கள் இருமுறைதான் வந்தன. தமிழன்பர்கள் வார இதழாக மாற்றக் கூடாதா? பக்கங்களைக் கூட்டக்கூடாதா என்றெல்லாம் வேண்டினர். வாரஇதழாக மாற்றுவதைவிட நாளிதழாக மாற்றுவதே தக்க பணியாகும் எனப் பேராசிரியர் கருதினார். இதழ்கள் வாயிலாக மொழிக்கொலை நடைபெறுவதால் அதைத் தடுத்து நிறுத்தத் தாமே முன்முறையாக நன்முறையாக நற்றமிழில் நாளிதழ் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து குறள்நெறி நாளிதழும் தொடங்கினார். இதுகுறித்த நாளிதழ் ஆசிரிய உரை வருமாறு: “நற்றமிழில் உரையாட வேண்டும், எழுத வேண்டும் என்று கருதுபவர்களால்கூட நற்றமிழைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை…
உள்ளத்தை வெளிப்படுத்து – சுமதி சுடர்
உள்ளத்தை வெளிப்படுத்து வாழ்க வளமுடன் நாள்தோறும் நினைவில் உள்ளத்தை வெளிப்படுத்து கதை சொல் கவிதை இயற்று கட்டுரை வரை பேசிப் பழகு நடித்து மகிழ் நாட்டியம் ஆடு ஓவியம் தீட்டு சிலை வடி பாட்டுப் பாடு கடிதம் எழுது – சுமதி சுடர், பூனா http://sudarwords.blogspot.in/
“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார்
“தமிழ் மாநாடுகளில் தமிழ்ப் பகைவர்க்கே முதன்மை” : வருந்திய இலக்குவனார் பேராசிரியரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும் “தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும் இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர். எம் போன்றோரை எள்ளியே தள்ளினர்” எனப் பேராசிரியர் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப் பங்கேற்றுத்…
உழவுக்கு வந்தனம் செய்வோம் – கெ.செல்லத்தாய்
உழவுக்கு வந்தனம் செய்வோம்! உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மனிதனுக்கு மிகவும் தேவை. இவை அனைத்தும் விவசாயத்தின் அடிப்படையில் பெற வேண்டும். உணவு இல்லையென்றால் மனிதனால் உயிர்வாழ முடியாது. உழவன் ‘சேற்றில் கால்வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும்’.’தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு’ என உழவின் மாண்பைத் திருவள்ளுவர் கூறுகிறார். இன்றைக்கு உழவின் நிலை என்ன? உழவு அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணமும் மனிதர்களாகிய நாம்தானே. மனிதனின் உயிர்மூச்சாக இருந்தது உழவு. அரசுவேலை வேண்டா…
சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு : இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னையில் திருவையாறு தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு இலக்குவனார் திருவள்ளுவன் அமிழ்தினும்இனிய தமிழ்க் கடலில்நஞ்சு ஆறாகப் பெருகிக் கலந்தால்அழிவுதானே நமக்கு!ஆனால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அழிப்போருக்குஉதவுகிறோம். அல்லதுகண்டும் காணாமல்இருப்பதன் மூலம் மறைமுகமாகத்துணைபுரிகிறோம்.திசம்பர்த் திங்களுக்கு உரிய பெருமைகளுள் ஒன்று, ‘சொல்லில்உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்பதை உணர்த்தி அதனைத் தொழுது படித்திடச் சொன்னபாரதியார்பிறந்த திங்கள் என்பது. இந்தத் திங்களில்தான் சென்னையில் சிலஆண்டுகளாகநஞ்சு கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவையாறு தமிழிசைப் பரம்பரைக்குரிய ஊர்தான். என்றாலும் நமக்கு என்னநினைவிற்கு வர வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழர்களின் பொருளால் தமிழர்களால்கட்டப்பட்ட மேடையில் தமிழ்ப்பாட்டுப்…
தனிமை போக்கும் நினைவுகள் – தணிகா சமரசம்
விண்ணில் மிதக்கும் விண்முகில்போல் விரைவில் மறையும் நீர்க்குமிழ்போல் கண்ணின் பார்வை தொலைநோக்கக் காணும் உலகம் விரிந்தோடத் தண்ணீர் மீதின் காட்சிகள்போல் தளிர்ந்து மனத்தில்சஞ்சரிக்க என்னுள் வாழ்ந்து எழுச்சியுறும் இறந்த கால நினைவுகளே ! பள்ளிப் பருவ நாளங்கே ! பாடித் திரியும் நண்பரங்கே ! சொல்ல இயலாச் சிரிப்பங்கே ! துயரம் தாளா மனதங்கே ! செல்லம் கொடுக்கத் தாயங்கே ! சிந்தை ஊக்கும் தந்தையங்கே ! உள்ளம் என்னும் உலகினிலே உலவித் திரியும் நினைவுகளே ! இன்ப துன்ப நினைவெல்லாம் இறந்த காலமனச்சின்னம் ! இன்று நடக்கும் நிகழ்ச்சிகளை எளிதாய் முடிக்கவழிக்காட்டி ! என்றும்…
