கலைச்சொல் தெளிவோம் 57: இடையீடு-provision

 57: இடையீடு-provision     இடை என்பது நடு என்னும் பொருளிலும், இடையே என்னும் பொருளிலும், இடுப்பு என்னும் பொருளிலும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றது. இடையின் அடிப்படையாக இடைப்படுதல் முதலான வேறு சொற்களும் கையாளப்படுகின்றன. இடையே வருதல் என்னும் பொருளில் உள்ள சொற்கள், இடையே தடையாக வருதல் என்னும் பொருளில்தான் வந்துள்ளன. எனினும் இடையிடுபு என்னும் சொல் பின்வருமாறு கையாளப்படுகின்றது. கூர்உளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு (நெடுநல்வாடை 119) இடையே இடுதல் என்னும் இச்சொல்லை நிலையான ஒன்று வழங்குவதற்கு இடையே தரப்படுகின்ற-இடையே இடப்படுகின்ற-என்னும் பொருளில்…

கருவிகள் 1600 : 481-520 : இலக்குவனார் திருவள்ளுவன்

  481. கணக்குமானி – arithmometer :  கணிப்புமானி எனச் சென்னைப் பல்கலைக்கழக அகராதி கூறுகின்றது. கணக்குமானி என்பதே ஏற்றதாக இருக்கும். 482. கதிரலகுமானி  – roentgen meter :ங-கதிர் அல்லது ஞ- கதிர் (x-rays or γ-rays)களின் திரள் அளவை அளவிடும் கருவி.கதிர்வீச்சு அலகினை (roentgen) அளவிடுவதால் கதிர் அலகுமானி> கதிரலகுமானி எனலாம். 483. கதிரலைவுநோக்கி  –  ray oscilloscope 484. கதிருமிழ்வுமானி  –  emanometer 485. கதிர்ப்பு நோக்கி –   spinthariscope  :  ஊடிழை கதிர்த்திரை , நீளலை மினுக்கத்தால் கதிரியக்க…

கலைச்சொல் தெளிவோம் 55: தலைமையாளர்-dean

 55: தலைமையாளர்-dean தாம்வரம்பாகிய தலைமையர் என்கிறது திருமுருகாற்றுப்படை(134).  டீன்/ dean என்பதற்குத் தலைமையர் என்று சொல்லலாம் என அறிஞர் ஔவை அவர்களிடம் முன்பு ஒருமுறை(199௦) சொன்னதற்கு, இச் சொல் சரியாக இருந்தாலும், வேறு வகை யில் (தலைமயிர் என) இழிவாக மாற்றிக் கூறுவதற்கு இடம் தரும் என்பதால் வேண்டா என்றார். ஆனால், சங்கஇலக்கியத்திலேயே இச்சொல் உள்ளதை இப்பொழுதுதான் அறிந்தேன்.   அறிஞரின் கருத்தும் புறந்தள்ள இயலா ஒன்றே. எனவே, தலைமை(1) அடிப்படையில் தலைமையாளர் எனச் சொல்லலாம். தலைமையாளர்-dean

கலைச்சொல் தெளிவோம் 54: குறுங்காலம்-short term; சிறுநனி-swift/instant; சிறுபொழுது-short period

 54: குறுங்காலம்-short term; சிறுநனி-swift/instant;  சிறுபொழுது-short period சிறுநனி(7) : மிகச்சிறிய பொழுதைக் குறிக்கும் வகையில் இச்சொல்லைக் கையாண்டுள்ளனர். சிறுநனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும் (கலித்தொகை ௧௨.௮) சிறுநனி தமியள் ஆயினும் (புறநானூறு ௨௪௭.௯) சிறு நனி வரைந்தனை கொண்மோ பெருநீர் (அகநானூறு ௧௮௦.௧) நனி என்னும் சொல் மிகுதி என்னும் பொருளைத் தந்தாலும் சிறுநனி எனச் சிறு என்னும் சொல்லுடன் சேர்ந்து ஒற்றைச் சொல்லாகும் பொழுது குறுகிய பொழுதையே குறிக்கிறது. short period-குறுங்காலம்(பொரு.,) என்றும் short term-குறுகியகாலம், குறுங்காலம்(மனை.,உள.,) என்றும் அனைத்துத்…

கலைச்சொல் தெளிவோம் 53: இடங்கர்-crocodile; கராஅம்-alligator; முதலை-gavial

  53: இடங்கர்-crocodile;  கராஅம்-alligator;  முதலை-gavial   குரோகடைல்(crocodile), அலிகேட்டர்(alligator) என இரண்டையும் நாம் முதலை என்றே சொல்கிறோம். பொருள் அடிப்படையில் இரண்டும் சரிதான். பல்லி என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது குரோகடைல். பல்லி என்னும் பொருளுடைய இசுபானியச் சொல்லில் இருந்து உருவானது அலிகேட்டர். மூலப் பொருள் ஒன்றாயினும் வெவ்வேறு வகையைக் குறிப்பதால் நாமும் அவ்வாறே குறிப்பதே சிறப்பு. முதலை, இடங்கர், கராம் என முதலைகளின் வெவ்வேறு வகைகள் பழந்தமிழகத்தினர் அறிந்திருந்தனர். குறிஞ்சிப்பாட்டில் ஒரே வரியிலேயே(257) கொடுந் தாள் முதலையும், இடங்கரும்,…

கலைச்சொல் தெளிவோம் 52: மலைப்பாம்பு-boa ; மாசுணம்-python

 52. மலைப்பாம்பு-boa; மாசுணம்-python   மலைப்பாம்பு பைதான்(python) என்றாலும் போ (boa)என்றாலும் மலைப்பாம்பு என்றுதான் சொல்கின்றனர். களிறு அகப்படுத்த பெருஞ் சின மாசுணம் (நற்றிணை 261.6) துஞ்சுமரம் கடுக்கும், மாசுணம் விலங்கி (மலைபடுகடாம் 261) ஆகியவற்றில் மாசுணம் என மலைப்பாம்பின் வகை குறிக்கப்பட்டுள்ளன. எனவே, மலைப்பாம்பு-boa மாசுணம்-python என வேறுபடுத்தலாம்.

கலைச்சொல் தெளிவோம் 51 : படப் பொறி- camera; காட்சிப்பொறி-video

 51 : படப் பொறி- camera;  காட்சிப்பொறி-video    படம் எடுக்கும் பொறியை நிழற்படக் கருவி (ஆட்.), புகைப்படக் கருவி (வேளா.,மனை.), ஒளிப்படக்கருவி(பொறி.), என்று சொல்கின்றனர். போட்டோ/photo என்பதற்குத் தொடக்கத்தில் புகைப்படம் என்றும் பின்னர் நிழற்படம் என்றும் சொல்லி இப்பொழுது ஒளிப்படம் என வந்தாலும் பழஞ் சொற்களையே சில துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படம் அல்லது நிழற்படம் அல்லது ஒளிப்படம் என்னும் கருவியின் அடிப்படையில் படமெடுக்கும் கருவியைக் குறிப்பிடுகின்றனர். போட்டோ/ போட்டோகிராபிக்(கு) என்றால் ஒளிப்படம் என்று சொல்லி அதனை எடுக்கும் கருவியை – ஒளிப்படக்…

கலைச்சொல் தெளிவோம் 50 பிடரென்பு – atlas (உடற்கூறு); திணைப்படம்- atlas (புவியியல்)

           50. பிடரென்பு – atlas (உடற்கூறு)      முதுகெலும்பில் முதல் எலும்பு அட்லாசு எனப்படுகிறது. இதனை முள்ளெலும்பு என்று சொல்வதைவிடப் பிடர்(௨)+என்பு(௧௧) > பிடரென்பு எனலாம்.    ஆனால் புவிப்பரப்பைக் காட்டும் நிலப்படம்-அட்லாசு/atlas நிலப்படத்தொகுதி [(ஆட்.), (புவி.), (மனை.)] எனக் குறிக்கப் பெறுகின்றன. ஐந்திணைப் பாகுபாட்டுச் சிறப்புடைய தமிழர் நிலவகைகளைத் திணை (௧௮)என்று சொல்வதுதான் எளிமையாயும் மரபாயும அமையும். ஐந்திணைப் படங்களைக் குறிப்பதால் திணைப்படம் என்பதே பொருத்தமாக அமையும். திணைப்படத்தைக் கோளவடிவில் காட்டும் கோள வடிவிலான குளோபு-globe…

கலைச்சொல் தெளிவோம் 49 : குழியம்-acetabulum

 49.குழியம்–acetabulum     அசெட்டாபுலம்- acetabulum என்பது இடுப்பு எலும்பின் உட்குழிவான பகுதியைக் குறிக்கிறது. பந்துக்கிண்ண மூட்டுக்குழிவு(வேளா.), இடுப்பெலும்புக்குழி(உயி.), கிண்ணக்குழி(மனை.), கிண்ணக்குழிவு(மரு.), இடுப்பு எலும்புக்குழி, ஆழ்குழி(கால்.) என இதனைக் குறிப்பிடுகின்றனர். குழி(௧௭), குழிசி(௧௨), குழித்த(௭), குழித்து(௧), குழிந்த(௩), என்றும் மேலும் சிலவுமாகக் குழிபற்றிய சங்கச் சொற்கள் உள்ளன. இவைபோல் குழிவாக அமைந்த உறுப்புப் பகுதியைக் குழியம் என்று சுருக்கமாகச் சொல்லலாம். குழியம்-acetabulum  

கலைச்சொல் தெளிவோம் 48 : மது வகைகள்

   48 : மது வகைகள் பழந்தமிழகத்தில், நுங்கு, கரும்புச்சாறு, இளநீர் ஆகியவற்றைப் பருகி மகிழ்ந்து வாழ்ந்துள்ளனர் என்பது இரும் பனையின் குரும்பை நீரும், பூங் கரும்பின் தீஞ் சாறும் ஓங்கு மணற் குலவுத் தாழைத் தீ நீரோடு உடன் விராஅய், என வரும் புறநானூற்று(24) அடிகளால் தெரியவருகின்றது. இருப்பினும் உற்சாகத்திற்காகவும் களிப்பிற்காகவும் பல்வகையிலான சாறுநீர்களை உட்கொண்டுள்ளனர். மதுவகைகள் உடலுக்குத் தீது என்ற வகையில் அறவே நீக்கப்பட வேண்டியவைதாம். எனினும், இப்போது விற்பனையில் பல்வகை மதுவகைகள் உள்ளன என்பதால் அவற்றைத் தமிழில் குறிக்க வேண்டி…

கலைச்சொல் தெளிவோம் 47 : சிமிழ்-chip

 47 : சிமிழ்–chip சிப்-செதுக்கல், சில்லு எனக் கணிணியியலில் குறிக்கின்றனர். கணிணியியலில் சிப் என்பது செதுக்கும் பணியைக் குறிக்கவில்லை. மின்னணுச் சுற்றுகள் அடங்கிய சிறு கொள்கலனைக் குறிக்கிறது. பல்புரிச் சிமிலி நாற்றி (மதுரைக் காஞ்சி 483) எனப் பொருள்களை ஏந்தித்தாங்கும் உறியைச் சிமிலி எனக் குறித்துள்ளனர். சிமிலி என்னும் சங்கச் சொல்லின் அடிப்படையில் பிறந்ததே சிமிழ். ‘சிமிழ்’ என்பது சிறு கொள்கலன்தான். எனவே, செதுக்கல், சில்லு என்று எல்லாம் சொல்லாமல் ‘சிமிழ்’ என்றே குறிக்கலாம்.   சிமிழ்-chip

கலைச்சொல் தெளிவோம் 46 : ஒலிப்பம்-decibel

 46 : ஒலிப்பம்-decibel தெசிபல்/decibel என்பதைப் பொறிநுட்பவியலில் ஒலித்திறன்அலகு என்றும், சூழலியலில் ஒலிச்செறிவுஅலகு என்றும், மனையறிவியலில் ஒலியலகு என்றும் கையாளுகின்றனர். ஒலியலகை ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு வகையாகக் கையாளுவதவிட ஒரே சொல்லைப் பயன்படுத்துவதுதான் சிறப்பாக அமையும். சங்கச் சொல்லான ஒலி என்பதன் அடிப்படையில் ஒலிப்பம் என்று சொல்லலாம். ஒலிப்பம்-decibel ஒலிப்பமானி-decibel meter