திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 14 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 14 படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்:381) திருவள்ளுவர் திருக்குறளில் அளித்துள்ள பொருட்பால் முழுமையுமே அரசறிவியலைச் சார்ந்ததுதான். அரசியல் அறிவியல் என்பதைச் சுருக்கி அரசறிவியல் என்பதே சிறப்பாகும். பொருள்நீதி என்றும் ஆட்சியியல் என்றும் சொல்லப்படுவனவும் இதுவே ஆகும். சாக்கிரட்டீசு, பிளேட்டோ…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 13 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 13 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (திருவள்ளுவர், திருக்குறள் 340) “உடம்பினுள் ஒதுங்கி யிருக்கும் உயிருக்கு நிலையான இருப்பிடம் அமையவில்லையோ?” என வனவுகிறார் திருவள்ளுவர். தங்குமிடம் நிலையற்றது என்பதன் மூலம் உயிரும் நிலையற்றது என்கிறார் திருவள்ளுவர். “துச்சில் இருந்த உயிர்க்கு” என்பதற்கு நோய்கள்/நோயுயுரிகள் குடிகொண்டுள்ள உடலில் ஓரமாக உள்ள…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 12 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம் 12 குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.(திருவள்ளுவர், திருக்குறள் 338) கூட்டிற்கும் அக்கூட்டில் இருந்து அதைத் தனித்துவிட்டுப் பறந்து செல்லும் பறவைக்கும் உள்ள தொடர்புதான் உடலுக்கும் உயிருக்கும் என்கிறார் திருவள்ளுவர். மறுபிறவியில் நம்பிக்கை உள்ள சமயவாதிகள் உடலிலுள்ள உயிர் குறித்து மீண்டும் வேறு உடலில் புகும் என்பதுபோன்ற…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 11 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 11 நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.( (திருவள்ளுவர், திருக்குறள் 335) “நாவை அடக்கி விக்கல் எழுந்து இறப்பு நெருங்கும் முன்னே நல்வினைகள் செய்ய வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர். சுருங்கி விரிந்து சீராக இயங்கும் மறுகம்(உதரவிதானம்), சுருக்கதிர்ச்சியால் கீழிறங்கித் தொண்டை வழியாகக் காற்றை உள்ளிழுக்கிறது….
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 10 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 334) “நாள் என்பது காலங்காட்டிபோல் தோன்றினாலும் உயிரைப் பறிக்கும்(ஈரும்) வாளே அது. வாழ்நாள்இயலை உணர்ந்தவர்கள் இதனை அறிவர்” என்கிறார் திருவள்ளுவர். இத்திருக்குறள் மூலமாகத்தான் நாட்காட்டி என்ற சொல் உருவானது என்பர். நாள் என்பதைத் திருவள்ளுவர் 20…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 9 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 306) தீப்பிழம்பில் முக்கி எடுததாற்போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு குறித்து முன்னரே குறிப்பிட்டிருந்தோம். நெருப்பு அல்லது ‘தீ’ என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயல், ‘தீ’ என்பது, பொருட்களில்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 8 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் ) நிலத்தைக் கையால் அடித்தால் அடித்தவன் கைதான் வேதனைக்கு உள்ளாகும். அதுபோல், சினத்தைக் கொண்டால் கொண்டவனுக்குத்தான் துன்பம் என்கிறார் திருவள்ளுவர். நிலைநிற்றல் என்னும் பொருளில் ‘நில்’ என்னும் சொல்லிலிருந்து நிலம் என்னும் சொல் உருவானது….
இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..! நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி மீட்பதே மக்கள் இயல்பு. ஆனால் தமிழ் ஆர்வலர்கள் நமக்குரிய தமிழ்ச்சொற்களை அடுத்தவருக்கு உரியவை எனத் தாங்களே கொடுத்து விடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள் பழக்கத்தில் இல்லாத புதிய சொல்லை மட்டும் தமிழ் என்று ஏற்றுக் கொண்டு பழக்கத்தில் உள்ள நல்ல சொல்லைத் தமிழல்ல என்று தூக்கி எறியும் பழக்கமும் உள்ளது. எனவே, தமிழல்ல எனத் தவறாக எண்ணும் தமிழ்ச்சொற்களி்ல்ஒன்றை இப்பகுதியில் காணலாம். ‘ஆதி’…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 7 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 7 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 306) சினம் என்னும் நெருப்பு, அதனைக் கொண்டவரை மட்டுமல்லாமல் அவருக்குத் துணையாக இருப்பவரையும் அழிக்கும் என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பின் உணவைச் சமைத்தல் போன்ற நிலைகளில் பயன் தரும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 5 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.(திருவள்ளுவர், திருக்குறள் 271) ஐம்பூதங்கள் சேர்க்கையே இப்பெரு உலகம். உலகம் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் ஐம்பூதங்களின் சேர்க்கை என்பதுதான் அறிவியல். இந்த அறிவியல் செய்தியைத் திருவள்ளுவர் மேற்குறித்த குறட்பா மூலம் தெரிவிக்கிறார். வஞ்சக மனம் கொண்டு அதனை மறைத்து வெளியில்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 4 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 4 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (திருவள்ளுவர், திருக்குறள் 267 ) மண்ணில் இருந்து எடுக்கப்படும் பொன் முழுத் தூய்மையானது அல்ல! அதில் கலந்துள்ள வேண்டாப் பொருள்களை அகற்றினால்தான் தூய்மையான தங்கம் கிட்டும். அதற்குப் பயன்படுவது நெருப்பு. நெருப்பின் தன்மை சுடுவது. தங்கத்தை நெருப்பால்…
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் – 3, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி
திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.) 3 அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி (திருவள்ளுவர், திருக்குறள் 245) “அருள் உள்ளம் கொண்டவர்க்குத் துன்பம் இல்லை. அதற்குச் சான்று காற்று இயங்கும் வளம் உடைய பெரிய உலகம்” என்கிறார் திருவள்ளுவர். காற்று எல்லாக் காலத்தும் எல்லா இடத்தும் எல்லா உயிர்க்கும் உதவி நிலைத்து…
