பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும்
(பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை – தொடர்ச்சி) பூங்கொடி 3 : பதிப்புரை உலகில் பிறந்தவருட் சிலர், அவர் தம் நாட்டை, மொழியைக் காக்க உடல், பொருள், ஆவியை ஈந்துள்ளனர் என்பதை உலக வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் தமிழ்நாடும் குறைந்ததன்று என்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நின்று எத்தனையோ நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறலாம். அந் நிகழ்ச்சிகளில் நினைவூட்டுவன சில; உணர்ச்சி யூட்டுவன சில; மறைந்தன பல. ஆனால், மறக்க முடியாதன சில வுள. அவ்வரலாற்று நிகழ்ச்சிகளை உள்ளத்திற் கொண்டு உணர்ச்சி குன்றா…
பூங்கொடி 2 – கவிஞர் முடியரசன்: புகழ்மாலை
(பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன் – தொடர்ச்சி) புகழ்மாலை (பூங்கொடி வெளியீட்டு விழாவில்-1964) இன்று நாட்டிலுள்ள நிலையை-தமிழுக்குத் தொண்டாற்றிய புலவர்களை, பேராசிரியர்களை, அரசியல் தலைவர்களை, அறிஞர்களை, நாவலர்களை, கலைஞர்களை வெவ் வேறு பெயர்களால் காட்டுகிறது. பூங்கொடி. பண்டாரகர் அ. சிதம்பரநாதனார் எம்.ஏ.,பி.எச்.டி. தமிழ் வாழ, தமிழர் குறிக்கோள் வாழ வழி காட்டுகிறது பூங்கொடி. பண்டாரகர் மா. இராசமாணிக்களுர் எம்.ஏ.,பி.எச்.டி. ஆற்றொழுக்கனைய கவிதை யோட்டமும் ஆழ்ந்த கருத்துச் செறிவும் நிறைந்த காப்பியம் பூங்கொடி. அறப்போர்க்கும் மறப்போர்க்கும் விளக்கங்கரும் வரிகள் இதனை உறுதிப்படுத் தும். ஆருயிர்…
பூங்கொடி 1 – கவிஞர் முடியரசன்
பூங்கொடி முகப்புப் பாடல் பூங்கொடி கண்ணனைய மொழிகாக்கக் கடிமணத்தைத் துறந்த ஒரு பெண்ணணங்கின் வரலாறு பேசுமொரு காப்பியமாம். பூங்கொடி மொழிகலங் கேடுறக் கண்டுளந் தளர்ந்தாள் விழிநலங் குறைவது போலவள் உணர்ந்தாள். உணர்ச்சி எழுச்சியாயிற்று – எழுச்சி வளர்ச்சியாயிற்று: அவள் வாழ்வே ஓர் அறப்போராயிற்று. முடிவு? செந்தமிழாம் மொழிகாக்கத் தனைக்கொடுத்தாள் செயிர்தீர்ந்த மொழிப்போரில் உயிர்கொடுத்தாள். அதனால் எங்கள் உடலுங் குருதியும் அவளானாள் உளத்தில் கொதிக்கும் அழலானாள் மூச்சும் பேச்சும் அவளானாள் மும்மைத் தமிழின் அணங்கானாள். அவள் வரலாறு கூறும் இப்பெருங்காப்பியம் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியப் பேழை…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி 6: தொடர்ச்சி உதாரன்: அரசனுக்குப் பின்னிந்ததூய நாட்டைஆளுதற்குப் பிறந்தவொருபெண்ணைக் கொல்லஅரசனுக்கோ அதிகாரம்உங்க ளுக்கோஅவ்வரசன் சட்டத்தைஅவம தித்தான்சிரமறுத்தல் வேந்தனுக்குப்பொழுது போக்கும்சிறியகதை நமக்கெல்லாம்உயிரின் வாதைஅரசன்மகள் தன்னாளில்குடிகட் கெல்லாம்ஆளுரிமை பொதுவாக்கநினைத்தி ருந்தாள் மோனை: புறம்பேசிப் பொல்லாங்குபுரிவான் தானும்பொருந்திமனத் துயர்களையும்நண்ப னாகான்மறம்பேசி மனத்திலாண்மையில்லா தானும்மங்கையரின் காதலிலேவெற்றி கொள்ளான்திறம்பேசுந் திருட்டுவழிச்செல்வன் தானும்செய்கின்ற பூசனையால்பக்த னாகான்அறம்பேசும் அருந்தமிழைக்காவா தானும்அற்றத்தை மறைக்கின்றமனித னாகான் அறுசீர் விருத்தம் எண்சீர்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 5 காட்சி : 6கொலைக்களம் – அதிகாரிகள், கொலைஞர், உதாரன், அமுதவல்லி, பொதுமக்கள்கலி விருத்தம் அதிகாரி: சாவிலும் பிரியா இன்பம் காணஆவிநீர் துறக்குமுன் அந்நாள் தொட்டுப்பூவுலக மரபினைப் போற்றும் படியாய்மேவுஞ் சொல்சில மேன்மையீர் சொல்வீர் எண்சீர் விருத்தம் உதாரன் : பேரன்பு கொண்டோரேபெரியோ ரேஎன்பெற்றதாய் மாரேநல்லிளஞ்சிங் கங்காள்நீரோடை நிலக்கிழிக்கநெடும ரங்கள்நிறைந்தபெருங் காடாகப்பெருவி லங்குநேரோடி வாழ்ந்திருக்கப்பருக்கைக் கல்லின்நெடுங்குன்றில் பிலஞ்சேரப்பாம்புக் கூட்டம்போராடும் பாழ்நிலத்தைஅந்த…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 5அரண்மனை – அரசனும் அமைச்சனும்அறுசீர் விருத்தம் அமைச்சன் : வாடிய முல்லையைக் கண்டேவாய்த்தநற் றேரங்கே நிறுத்திநீடிய புகழ்கொண்ட பாரிநிறுவிய தமிழ்மரபில் வந்தோய்கூடிய காதலரைக் கொன்றேகொடும்பழி ஏற்றிடலும் நன்றோதேடிய பெருமையெலாந் தீரத்திக்கெலாம் பழிவந்து சேரும் எண்சீர் விருத்தம் அரசன்: தமிழ்காக்கும் முனைப்பினிலேதடையேது மில்லைதமிழ்ப்புலவோர் நிலைகாக்கமறுப்பேது மில்லைஇமிழ்கடல்சூழ் புவியினுக்கேஉயிராவா னென்றேஇறையாகும் மன்னவரைச்சொன்னவரும் நல்லதமிழ்காத்த புலவர்தாம்அவ்வுரையுந் தீதோஅடிமரத்தை நுனியிருந்துவெட்டுதல்நன் றாமோஉமிழ்நீராய் மன்னர்குலம்வீழுமாயின்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 4
(புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 3 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி : களம் : 5 காட்சி : 4 நாற்சந்தி – பொதுமக்கள், மோனைப்புலவன்அறுசீர் விருத்தம் முதியோன்1: ஆவதும் அழிவதும் பெண்ணாலேஆன்றோர் பலரும் சொன்னாரேகாவது காக்கும் வலியின்றிக்காளை காதல் வயப்பட்டான்காவலன் மனத்தை அறியாளாய்க்கன்னி காதல் கொண்டிட்டாள்மேவன எண்ணா தரசனுந்தான்மிகையாய்த் தண்டம் வித்திட்டான் எண்சீர் விருத்தம்மோனை: ஆணுக்கும் பெண்ணுக்குங்காத லின்றேல்அன்றுமுதல் இன்றுவரைஉலக மில்லைவீணுக்குப் பெண்ணடிமைஉள்நு ழைத்தார்விடிவிலையே சாதியிழிவுக்கிங்கு மட்டும்நாணுமின்றிச் சுந்தரர்க்குக்காதல் தூதுநடராசர் நடந்ததாகப்புராணஞ் சொல்லும்சாணுக்குங் குறைவானவயிற்றைக் காக்கச்சாற்றிவைத்த தல்லாமல்பயன்வே றுண்டோ…
புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 3
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 5 காட்சி : 3அரசவை. அரசன், அமைச்சர் முதலியோர்.உதாரன் வீரர் சூழ நிறுத்தப்பட்டிருக்கிறான்.சிந்து கண்ணி அரசன் : கொற்றவன் பெற்ற குலக்கொடியை – கவிகற்க உன்பால் விடுதேன் – அடக்குற்றம் புரிந்தனையா இல்லையா இதைமட்டும் உரைத்துவிடுவெற்றி எட்டுத்திக்கும் முற்றிலுஞ் சென்றுமேவிட ஆள்பவன் நான் – அடஇற்றைக்கு நின்தலை அற்றது -மற்றென்னைஎன்னென்றுதான் நினைத்தாய் உதாரன் : மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் – முகில்வார்க்கும் மழை நாடா…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 2 மோனைப்புலவன் – அல்லி அகவல் அல்லி : ஏனையா புலவரே என்ன வியப்பிது கன்னிநான் வருதலைக் கண்ணாற் கண்டும் புன்னை நிழலில் பொருள்தே டுகின்றாய் தின்னுங் கருவாடு திகட்டுமோ பூனைக்கு கன்னியென் பார்வை கசந்ததோ நினக்கு மோனை : அய்யகோ அத்தை மகளே அல்லியே…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 5 தொடர்ச்சி) களம் : 5 காட்சி : 1 நாற்சந்தியில் பொதுமக்கள் அறுசீர் விருத்தம் முதியோன் 1 : மண்ணாள் வேந்தன் குலக்கொடிக்கு மறவா வண்ணம் யாப்புரைக்க எண்ணி யழைத்தார் சூதாக இளமைப் பருவந் தோதாக பெண்ணாள் கவியின் தமிழாலே பிணையல் கொண்டாள் அன்பாலே நண்ணும் அவையில் இற்றைநாள் நல்ல முடிவைக் காண்குவமோ முதியோன் 2:…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 5
(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 4 தொடர்ச்சி) களம் : 4 காட்சி : 5 கவிஞனும், இளவரசியும் காதற்பூங்காவில் உலவுகின்றனர். இறுதிக்கட்டத்தில் மன்னன் மறைந்திருந்து காணுகிறான். இசைப்பாடல் அவன் : வானத்து முழுநிலா வஞ்சியுன் பால்வடியும் தாமரை முகம் நாணி தயங்குதடி வான்முகிலில் நெஞ்சையே கருப்பாக்கி நிலவரை போட்டொளிக்கும் கருப்புப் பணக்காரர் கனவில் பிதற்றுதலாய் வஞ்சியே என்மனது வாட்டுந் துயராலே பஞ்சினும் மெலிதாகிப் பதைத்துப் …
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 தொடர்ச்சி) அரசன் அமர்ந்திருக்க – தோழியர் வருகின்றனர். களம் : 4 காட்சி : 4 பஃறொடை வெண்பா அல்லி : குடிமக்கள் போற்றும் முடிவேந்து வாழ்க அடிபணிவார் காக்கும் அருள்வேந்து வாழிய நாட்டின் ஒளிவிளக்காம் நங்கை இளவரசி ஏட்டி லெழுதவொணா இன்பமுடன் வாழியவே அரசன் : மங்கையீர் நீங்கள் மதிக்குந் தலைவிதான் பங்கமில் யாப்பைப்…