மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் – வல்லிக்கண்ணன்

மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் வல்லிக்கண்ணன்                 சிறுகதைகள் விதம் விதமாக எழுதப்படுகின்றன. கதைகள் எழுதுகிறவர்கள் மனிதர்களையும், அவர்களது இயல்புகளையும், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் செயல் விசித்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டே சொற்சித்திரம் தீட்டுகிறார்கள். இவற்றில் ஒரு சிலருடைய கதைகள் மட்டுமே தனித்தன்மையும், குறிப்பிடத் தகுந்த சிறப்புகளும் கொண்டதாக அமைகின்றன.                 வாழ்க்கையையும் மனிதர்களையும்பற்றிய தனித்த நோக்கு, வாழ்க்கையும் சூழ்நிலையும் பட்டறிவுகளும், மனசில் ஏற்படுத்துகின்ற சலனங்களும் பதிவுகளும், வாழ்க்கை, மனிதர்கள் இயற்கைச் சூழ்நிலைகள் மரங்கள், மிருகங்கள், பறவைகள் முதலிய அனைத்திலும் ஒருவர் கொள்கிற பற்றுதலும்…

படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி

சொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது…

வியர்வையே! – இலக்குவனார் திருவள்ளுவன்

வியர்வையே! வியர்வையே வியர்வையே உனக்கிது முறையோ அயர்விலா துழைப்போன்உடலில்  பிறப்பாய் உள்ளத்தில் சிறிதும் நன்றியை எண்ணாய் கள்ளமாய் ஏய்ப்போன் பேழையைச் சேர்வாய் காலமும் மாறும் கோலமும் மாறும் ஞாலமும் நம்மை வளமாய்க் காணும் நாளும் உழைப்போம் மேலும் உயர்வோம் வாழும் உலகில் வளத்தைக் காண்போம் என்பன நினைக்கும் ஏழையை ஏய்ப்பாய் உண்பதைப் பறிப்பாய் உடுப்பதைக் களைவாய் வியர்வை என்னும விலையை வினவும் அயர்வை அறியா முதலையை வளர்ப்பாய் கொழுக்கக் கொழுக்கச் செழித்திடச் செய்வாய் கருவைத்  தந்தோன் கருகிச் சாகிட உருவைக்காணான் பெருகி உயர்ந்திட உதவும்…

கவிஞர் மு.முருகேசிற்குத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது

 சிறந்த சிறுகதை நூலிற்காகக் கவிஞர் மு.முருகேசிற்கு விருது வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசு எழுதிய ’அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் சிறுவர் கதை நூலுக்குத், திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது.           திருப்பூரில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் விருதுகளைஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் பாரதி தோட்டத்தில்…

உதவிய உள்ளங்கள் – பேரரசி முத்துக்குமார்

உதவிய உள்ளங்கள்  “மணியாகி விட்டது. நிகழ்ச்சி முடிவதற்குள் போகணும்பா…..சீக்கிரம் வண்டியை ஓட்டுங்கள்……இல்லை என்றால் இசையரசி ஆசிரியர் என்னைத்தான் திட்டுவார்கள்,” என்று தமிழரசன் கூறினான்.      “இரு…இரு…இது என்ன ‘ஃபார்முலா 1’ வண்டியா? வேகமாக போவதற்கு?” என்றார் அவன் அப்பா அமுதன்.      திரு. அமுதன் ஊர்தி, சாலையில் போய்க் கொண்டிருந்தது. அப்போது…. யாரோ வயதான மூதாட்டி ஒருவர் அவர்களின் ஊர்தியின் முன் மயக்கமாகி ‘தொப்’ என்று விழுந்தார். இருவரும் பயந்து விட்டனர். வாகனத்தை விட்டு இறங்கி அந்த மூதாட்டியின் முகத்தில் தாங்கள் கொண்டு வந்த…

தமிழில் முதல் சிறுகதை?

தமிழில் முதல் சிறுகதை? தமிழில் முதல் சிறுகதை எது? என்ற தலைப்பில்  முனைவர் ஆர்.எசு.யாக்கோபு(சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் வெளியாகியுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மேய்ந்தபொழுது, என் பார்வை பதிவான இந்த நூலை வாங்கினேன். தமிழ் இலக்கியவரலாற்றில் வ.வே.சு.(ஐயரின்) ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற சிறுகதைதான் முதல் சிறுகதை என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் மகாகவி பாரதிதான் ‘துளசிபாய்’ என்ற முதல் சிறுகதையை எழுதியவர் என ஆய்வாளர்கள் சிலர்…

கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை

கைலாசத்தின் சிந்து இளவரசி – முன்னுரை    முனைவர் கைலாசம் ‘சிந்து இளவரசி’ என்ற அதிஅற்புதமான சிறிய  வரலாற்றுப் புதினத்தில் பாண்டிய நாட்டையும். சிந்துப் பேரரசையும் இணைத்துஅவற்றிலிருக்கும் ஒற்றுமைகளை அருமையாக குறிப்பிட்டுள்ளார்.   இந்தப் புதினத்தில் குறிப்பிட்டவை ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எழுதப்பட்டிருக்கிறது என்பதிலும், அவை தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உதவும்என்பதிலும் எந்த  ஐயமும் இல்லை.  ‘திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’ என்ற கருத்தினைத் தெரிவித்தவர்கள் தேவநேயப் பாவாணரும் மற்ற மதிப்புக்குரிய தமிழறிஞர்களும். அவர்கள் சொன்னது உண்மையாகவே இருக்க வேண்டும். இந்தக் கருத்தினை மனத்தில்…