பிற்பகல் விளையும் – ஆல்பர்ட்டு, விச்கான்சின், அமெரிக்கா.

“அரசு கிளம்பு! இப்பொழுது புறப்பட்டால்தான் இருட்டுமுன் தெட்டுராய்டு போய்ச் சேர முடியும்” என்றவாறு குமரன் வந்தான். திருநாவுக்கரசு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே, “மூன்று நாள், கொண்டாட்டமாக இருந்துவிட்டு நாளைக்கு வேலைக்குப் போக வேண்டுமே எனக் கவலையாக இருக்கிறதா?” என்று மீண்டும் கேட்டான் குமரன். “ம்ம்… மகிழ்நனும் புகழும் ஆயத்தமாகி விட்டார்களா?” என்றவாறே அரசு படுக்கையை விட்டு எழுந்தான். “நாங்களெல்லாரும் கிளம்பியாகிவிட்டது! நீ என்ன தூங்கி விட்டாயா?” கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் மகிழ்நன். “இதோ! ஒரு நொடியில கிளம்பி விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள்! நானும் குமரனும்…

காப்பாற்றுங்கள்……….!

– களப்பாள் குமரன்              எங்கே தமிழ்……. எங்கே தமிழ்…..? கல்விக்கூடத்தில் தமிழ் உண்டா… கடைத்தெருவில் தமிழ் உண்டா….? ஆலயத்தில் தமிழ் உண்டா….? ஆட்சியில் தமிழ் உண்டா தொலைக்காட்சியில் தமிழ் உண்டா…. திரைப்படத்தில் தமிழ் உண்டா….. தமிழ்நாட்டில் தான் தமிழ் உண்டா….எங்கே தமிழ்… தமிழ் எங்கே….?

மருமகள்

மருமகள் –   க.தமிழமல்லன் “இனி ஒரு நொடி கூட நான் இங்கிருக்கமாட்டேன். உங்க அப்பாவுக்குக் கொஞ்சங் கூட நாகரிகமே தெரியவில்லை. இவ்வளவு முதுமையிலும் கீழ்த்தரப்பண்பு போகவில்லையே! ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்க வேண்டும்.  உடனே வழிபண்ணுங்கள்”