நீதான் கண்ணே அழகு! – அன்பு

  அம்மா!    நான் ஏம்மா அழகாய் இல்லை! யாரம்மா சொன்னது அப்படி? நீ அழகுதானே! போங்கம்மா! நான் சிவப்பாகவே இல்லையே! சிவப்பு நிறம் அழகு என்று யாரம்மா உன்னிடம் சொன்னது? எல்லா நிறமும் அழகுதான். காலச்சூழலுக்கேற்ப மக்கள் நிறம் மாறுபடுகிறது. சில நாடுகளில் மக்கள் அனைவருமே கருப்பாகத்தான் இருக்கின்றார்கள்! அப்படி என்றால் அந்த நாட்டில் அனைவரும் அழகற்றவர்கள் என்று ஆகுமா? இல்லைம்மா! என் முகம் கூட உருண்டையாக அழகாக இல்லையே! உருண்டையான முகம்தான் அழகு என்று யார் சொன்னது? எலும்பு அமைப்பிற்கேற்ப  முகவடிவமும் மாறும்….

பிற்பகல் விளையும் – ஆல்பர்ட்டு, விச்கான்சின், அமெரிக்கா.

“அரசு கிளம்பு! இப்பொழுது புறப்பட்டால்தான் இருட்டுமுன் தெட்டுராய்டு போய்ச் சேர முடியும்” என்றவாறு குமரன் வந்தான். திருநாவுக்கரசு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே, “மூன்று நாள், கொண்டாட்டமாக இருந்துவிட்டு நாளைக்கு வேலைக்குப் போக வேண்டுமே எனக் கவலையாக இருக்கிறதா?” என்று மீண்டும் கேட்டான் குமரன். “ம்ம்… மகிழ்நனும் புகழும் ஆயத்தமாகி விட்டார்களா?” என்றவாறே அரசு படுக்கையை விட்டு எழுந்தான். “நாங்களெல்லாரும் கிளம்பியாகிவிட்டது! நீ என்ன தூங்கி விட்டாயா?” கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் மகிழ்நன். “இதோ! ஒரு நொடியில கிளம்பி விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள்! நானும் குமரனும்…

காப்பாற்றுங்கள்……….!

– களப்பாள் குமரன்              எங்கே தமிழ்……. எங்கே தமிழ்…..? கல்விக்கூடத்தில் தமிழ் உண்டா… கடைத்தெருவில் தமிழ் உண்டா….? ஆலயத்தில் தமிழ் உண்டா….? ஆட்சியில் தமிழ் உண்டா தொலைக்காட்சியில் தமிழ் உண்டா…. திரைப்படத்தில் தமிழ் உண்டா….. தமிழ்நாட்டில் தான் தமிழ் உண்டா….எங்கே தமிழ்… தமிழ் எங்கே….?

மருமகள்

மருமகள் –   க.தமிழமல்லன் “இனி ஒரு நொடி கூட நான் இங்கிருக்கமாட்டேன். உங்க அப்பாவுக்குக் கொஞ்சங் கூட நாகரிகமே தெரியவில்லை. இவ்வளவு முதுமையிலும் கீழ்த்தரப்பண்பு போகவில்லையே! ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது அவர் இருக்க வேண்டும்.  உடனே வழிபண்ணுங்கள்”