மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  67

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 66 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 24 தொடர்ச்சி “நான் இரவில் சாப்பிடுவதில்லை, சிற்றுண்டிதான். காலையில் நீங்களும் வருவதானால் நாம் எல்லோரும் சேர்ந்தே கோடைக்கானலுக்குப் போகலாம்” என்று அந்த அம்மாளோடு காரில் செல்லும் போது அரவிந்தன் சொன்னான். “பூரணியை இலங்கைக்கும் மலேயாவுக்கும் சொற்பொழுவுகளுக்கு அழைத்துக் கடிதங்கள் வந்திருக்கின்றனவாம். அவள் அதைப் பற்றி இன்னும் முடிவு சொல்லவில்லையாம். மங்கையர் கழகத்திலிருந்து அவளைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று என்னிடம் வந்து நச்சரிக்கிறார்கள். அதற்காக நான் கோடைக்கானல் போக வேண்டியிருக்கிறது” என்று மங்களேசுவரி அம்மாள்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 12

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம்  11 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 தொடர்ச்சி “என் குடும்பத்திலே நீ செய்து வைத்த காரியத் துக்கு, ஊரார் எங்களுக்கு மகுடம் சூட்டுவார்களா? மடையா ! ஒரு பெண்ணின் கற்பை அழிக்கத் துணிந்து விட்டு, குலப் பெருமை, குடும்பப் பெருமைகளைக் கூறுகிறாயே, மானமின்றி, ஈவு இரக்கமின்றி!” “நான் வைசிய குலம். ………..”“நான் உப்பிரசாதி . . . . . . . . . . . .” “உப்பிரசாதியில் பெண் கொள்ளும் வழக்கம்,…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  66

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 65 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 24 பால்வாய் பிறைப்பிள்ளை ஒக்கலை கொண்டுபகல் இழந்தமேம்பால் திசைப்பெண் புலம்பறுமாலை      — திருவிருத்தம் இரண்டு கைகளாலும் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கும் போது (இ)ரப்பர் காட்டுகிற நீளம் அதனுடைய இயல்பான நீளமன்று. இழுத்துக் கொண்டிருப்பவனுடைய கை உண்டாக்கிக் காட்டும் செயற்கையான நீளம் அது! அதைப் போல் இயல்பாகவே தங்களிடம் உள்ள நேர்மைக் குறைவால், அதைத் தாங்கள் பிறரிடம் காட்டும்போது பெரிதாக்கிக் காட்டி வாழ்கிறவர்கள் சிலர் சமூகத்தில் உண்டு. அகவாழ்வில் கொடுமையே உருவானவராய்த் தெரியும்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 11

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 10 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 3 கதிரவனைக் கண்டு கமலம் களிக்கும் என்பார்கள். காமத்துக்குப் பலியான குமரியின் முகத்திலே காலைக் கதிரவன் ஒளி பட்டபோது, இரவு நேரிட்ட சேட்டையின் அடையாளங்கள், கன்னத்தில் வடுக்களாகத் தெரிந் தனவேயன்றி, முகம் மலர்ச்சியாகத் தெரியவில்லை. கண் திறந்தாள் ; புதியதோர் இடமாகத் தோன்றிற்று. திகைப்புடன் பார்த்தாள், செட்டியார் மீது சாய்ந்து கொண்டிருப்பதை. “ஐயோ” என்று அலறியபடி எழுந்திருக்கலானாள். செட்டியாரோ, “அன்பே !” என்று கூறி, அவளை மீண்டும் தம் மீது…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  65

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 64 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம்  23 தொடர்ச்சி ‘பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பருமாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துகளுக்கு நான் வாரிசு ஆகப் போகிறேன் என்பதற்காகவா? அடடா; பணமே, உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா‘ என்று எண்ணிக் கொண்டான் அரவிந்தன். பருமாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஓர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  64

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 63 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 23 தொடர்ச்சி மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 10

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 9 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி ’சே, கட்டேலே போறவனே?’ என்று கூவிக் கொண்டே, செட்டியார் பிடியிலிருந்து திமிரிக் கொண்டு கிளம்பினாள் குமரி. இதற்குள், ஆடை நெகிழ்ந்து புரண்டிடவே, காலிலே புடவையின் ஒரு முனை சிக்கிக் கொள்ள, இடறிக் கீழே வீழ்ந்தாள். செட்டியார் அவளைத் தூக்கி நிறுத்தினார். அவளுக்கு மேலும் மேலும் மயக்க உணர்ச்சி அதிகரித்தது. எதிர்க் கும் போக்கும் போய்விட்டது. அவளும், அணைப்புக்கு அணைப்பு, முத்தத்துக்கு முத்தம், என்ற முறையில் விளையாடத் தொடங்கினாள்….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  63

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 62 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 23 கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து – இங்குஉள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?     – சித்தர் பாடல் ஒரே கரும்பின் ஒரு பகுதி இனிப்பாகவும் மற்றொரு பகுதி உப்பாகவும் இருக்கிற மாதிரி மனிதனுக்குள் நல்லதும் கெட்டதும் ஆகிய பல்வேறு சுவைகளும், வெவ்வேறு உணர்ச்சிகளும் கலந்து இணைந்திருக்கின்றன. எல்லா கணுக்களுமே உப்பாக இருக்கிற ஒருவகைக் கரும்பு உண்டு. அதற்குப் ‘பேய்க்கரும்பு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்குக் கரும்பு போலவே தோற்றம் இருக்கும். ஆனால் கரும்பின் இனிமைச்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 9

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 8 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த கோயிலிலேயே ஒரு சிறு அறை, செட்டியார் தங்கி இருந்த இடம். அகல் விளக்கு அதிகப் பிரகாசமின்றி எரிந்து கொண்டிருந்தது. வேலையாட்கள் தூங்கும் சமயம். குமரி அவசரமாக ஓடி வந்தாள் கோயிலுக்கு. அறை யிலே செட்டியார் உலவிக் கொண்டிருக்கக் கண்டு, ” என்னாங்க உடம்புக்கு ! என்னமோ நொப்பும் நுரையுமா தள்ளுது, போய்ப் பாருடி, யாரையும் எழுப்பாதே. யாருக்கும் சொல்லாதே என்று மீனா அக்கா சொன்னாளே…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  62

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  61 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 22 தொடர்ச்சி “நானே தபாலாபீசுக்குப் போய்விட்டு வருகிறேன் அம்மா!” என்று மீனாட்சிசுந்தரம் புறப்பட்டு விட்டார். முருகானந்தம் வசந்தா உறவு மிகக் குறுகிய காலத்தில் உள்ளுக்குள்ளே கனிந்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. கடந்த தினங்களில் வசந்தாவின் உற்சாகத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பது இப்போது அவளுக்கு விளங்கிற்று. அன்று அவள் பெயருக்கு வந்திருந்த கடிதத்தின் முகவரி எழுத்து இப்போது பூரணிக்கு மறுபடியும் நினைவு வந்தது. அது முருகானந்தத்தின் எழுத்தே என்பதையும் அவளால் உறுதி செய்ய…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 8

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 7 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள். “என்னாங்க உடப்புக்கு? ஒரு மாதிரியா இருக்கறிங்க.” “ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே! “ரொம்பக் களைச்சாப்போல இருக்கறிங்க” “எனக்கென்ன களைப்பு ! நான் என்ன, உன் போல வெயிலிலே வேலை செய்கிறேனா?” “உங்களுக்கு ஏனுங்க, தலை எழுத்தா என்ன, கூலி வேலை செய்ய? நீங்க மகாராசா.” “உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  61

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  60 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 22 தொடர்ச்சி அப்பாவின் நினைவு, உள்ளத்தில் உண்டாக்கிய உரத்துடன் எதிரே உட்கார்ந்திருந்த மீனாட்சிசுந்தரத்தையும், முருகானந்தத்தையும் நோக்கி உறுதியான குரலில் கூறலானாள் பூரணி. “நீங்கள் மிக்க அனுபவசாலி, எவ்வளவோ பெரியவர். உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நீங்கள் சொல்லுகிற காரியத்துக்கு எப்படி இணங்குவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. இத்தகைய உலகியல் வழிகளில் சிக்கிப் பொருளும் புகழும் பெறுவதை என் தந்தையே தம் வாழ்நாளில் வெறுத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அப்போதே அப்படியானால் இப்போது உள்ள…