மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  60

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  59 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 22 வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்வாடினேன் பசியினால் இளைத்தேன்வீடுதோ றிரந்து பசியறாது அயர்ந்தவெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்நீடிய பிணியால் வருந்துகின்றோரென்நேருறக் கண்டுளந் துடித்தேன்ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சுஇளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.      — திருவருட்பா தந்தியில் தெரிவித்திருந்தபடி அரவிந்தன் கோடைக்கானலுக்கு வரமுடியாமல் சொந்தக் கிராமத்துக்குப் போக நேர்ந்த காரணத்தை முதலில் பூரணிக்கு விவரித்தார் மீனாட்சிசுந்தரம். அவன் வராதது அவளுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதை மிக நுணுக்கமாக அவர் புரிந்து கொண்டார். அந்த ஏமாற்றம் வெளியே தெரிந்து விடாமல்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  59

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி  சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும் பாதிப் புத்தகம் படித்து நிறுத்தினாற் போல் முடித்துக் கொண்ட விதத்தையும் நினைத்தால் அரவிந்தனுக்குப் பரிதாபமாக இருந்தது. தந்தி வந்தபோது மீனாட்சிசுந்தரமும் முருகானந்தமும் அருகில் இருந்தனர். தந்திச் செய்தியை அவர்களும் படித்து அறிந்து கொண்டிருந்தனர். ‘ஏறக்குறைய இலட்ச ரூபாய் சொத்துக்காரர் இறந்து போயிருக்கிறார். அவ்வளவுக்கும் உரிமையாளனாகப் போகிற இவன் ஏன் இப்படி ஒரு பரபரப்பும் அடையாமல் மலைத்துப் போய் நின்று கொண்டிருக்கிறான்?’ என்று அரவிந்தனைப் பற்றி நினைத்தார்கள்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  58

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 21 தொடர்ச்சி இரவு எல்லாரும் உறங்கின பின் தனக்குச் சொந்தமான இரண்டு மூன்று அழுக்குச் சட்டை, துணிகளையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு இரயில் பாதை வழியாக நடக்க ஆரம்பித்து விட்டான். பயங்கரமான இருளில் தண்டவாளத்தையும் சரளைக் கற்களையும் மாறி மிதித்துக் கொண்டே முழங்காலில் சிராய்த்துக் காயம்படுவதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். மதுரையிலிருந்து கிழக்கே இராமேசுவரம் செல்லும் இரயில் பாதையின் அருகில் மதுரையிலிருந்து பதினெட்டாவது மைலில் உள்ள ஒரு கிராமத்திலிருந்துதான் மதுரையை நோக்கி அவன் புறப்பட்டிருந்தான். ஏன்?…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  57

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  56 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 21 நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்கனற்புகைய வேகின்றான். . .     – புகழேந்தி முதலில் திட்டமிட்டிருந்தபடி அரவிந்தனும் முருகானந்தமும்தான் கோடைக்கானலுக்குப் புறப்படுவதாக இருந்தது. காலையில் புறப்படுகிற சிறிது நேரத்துக்கு முன்னால் அந்தத் தந்தி வந்திருக்காவிட்டால் அரவிந்தன் பயணம் தடைப்பட்டிருக்காது. அரவிந்தனுக்குத் தன்னுடைய சொந்தக் கிராமத்தில் உறவு கொண்டாடிக் கொண்டு ஆள்வதற்கு சொத்து ஒன்றுமில்லாவிட்டாலும் மனிதர்கள் இருந்தார்கள். பேருக்குத்தான் அவர்கள் உறவினர்கள், உண்மையிலோ அத்தனை பேரும் பகைவர்கள், அத்தனை பேரும் குரோதமும் அசூயையும் கொண்டவர்கள்;…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 7

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 6 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி “யாரை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார், குமரியை மட்டும் நிறுத்தவே மாட்டார். “ “ஏன்? என்னா விசயம்?” “செட்டியாருக்கு அவளைப்பார்க்காவிட்டா உசிரே போயிடும்.” ” அம்மா, அவ்வளவு சொக்குப்பொடி போட்டு விட்டாளா அந்தச் சிறுக்கி.” “பொடியுமில்லை, மந்திரமுமில்லை ! அவளைக் கண்டவன் எவன் தான், தேனில் விழுந்த ஈபோல் ஆகாமலிருக்கிறான் அவகூடக் கிடக்கட்டும்; கொஞ்சம் மூக்கும் முழியும் சுத்தமா ஒரு பெண் இருந்தா, எந்த ஆம்பிள்ளை, விறைக்க விறைக்கப்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  56

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  55 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி அவள் துன்பப்பட்டிருக்கிறாள்! பொறுப்புகளைச் சமாளித்திருக்கிறாள். வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக் கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை. கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே மனத்தில் சிந்தனைகளைக் காண்பது சுகமாக இருந்தது. சமையற்கார அம்மாள் வந்து ‘மருந்து சாப்பிட வேண்டிய நேரம்’ என்று நினைவுபடுத்திய போது தான்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 6

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 5 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 தொடர்ச்சி “ஏண்டி ! என்னமோ காணாததைக் கண்டவங்க மாதிரி முழிச்சிட்டு இருக்கறிங்க.” “ஒண்ணுமில்லையே, அக்கா.” ” அக்காவா நானு? இவ கொழந்தை ! வயசு பதினாறு.” இவ்விதம் வேடிக்கையாகப் பேசுவாள் மற்றப் பெண்களிடம், சிறுகல், தலையில் கட்டிய பாகை, வெத்திலைப்பை, இவை அடிக்கடி மீனா மீது தான் விழும். மேசுதிரி இவற்றை அடிக்கடி வீசுவார், அவள் ஏச மாட்டாள். அவளுக்கு அவன் கொடுத்து வந்த எட்டணா கூலி, இந்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  55

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  54 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி  ‘உன் விருப்பம் தெரிந்து இந்தக் கடிதங்களுக்கு நான் மறுமொழி எழுத வேண்டும். அல்லது நீயே அவர்களுக்குத் தனித்தனியே பதில் கடிதம் எழுதி விடலாம். எங்கள் எல்லோருடைய அபிப்பிராயமும் நீ இவற்றுக்கு ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதுதான். உடல்நிலைப் பற்றிக் கவலைப்படாதே! இவற்றில் கலந்து கொண்டு அடைகிற உற்சாகமும் கலகலப்புமே உன் உடம்பைத் தேற்றிவிடும் என்பது எங்கள் கருத்து. மேலும் அவை எல்லாவற்றுக்கும் நீ ஒப்புக் கொண்டாலும் முழுமையாக இன்னும் இரண்டு மாத கால…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 5

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 4 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் அத்தியாயம் 2 பழனி பராரியாகி, சோற்றுக்கே திண்டாடி, மனைவியால் வெறுக்கப்பட்டுத் தன் வீட்டு வாயிற்படிக்கு வந்து நின்று, “அப்பா ! புத்தியில்லாமல் ஏதோ செய்துவிட் டேன், பொறுத்துக் கொள்ளுங்கள் ‘ என்று கெஞ்ச வேண்டும், “சீ நீசா ! என் முகத்தில் விழிக்காதே! உன்னைக் கண்டாலே நரகம் சம்பவிக்கும்” என்று ஏச வேண்டும்; பழனி கதறவேண்டும்; பிறகு அவனை மன்னித்து உள்ளே சேர்த்துக்கொள்ள வேண்டும்; இதுவே செட்டியாரின் நித்தியப்பிரார்த்தனை. எந்தத் தெய்வத்திடம்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  54

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  53 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்20 “ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப்பிறவனைத்தும் தானாகி நீயாய் நின்றாய்தானேதும் அறியாமே என்னுள் வந்துநல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்”      — தேவாரம் மேகங்கள் குவிந்து திரண்ட கருநீலவானின் கீழே அன்று அந்த அந்தி மாலைப்போது கோடைக்கானலுக்கே தனி அழகை அளித்தது. யூகலிப்புடசு மரங்களின் மருந்து மணத்தை அள்ளிக் கொண்டு வரும் காற்று, உடற்சூட்டுக்கு இதமான கிளர்ச்சி. கண்களுக்குப் பசுமையான காட்சிகள், பகலிலும் வெய்யில் தெரியாதது போல் நீலக்கருக்கிருட்டு, மந்தார நிலை. உலாவச்…

பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 4

(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 3 இன் தொடர்ச்சி) குமரிக் கோட்டம் – 4 அத்தியாயம் 1 தொடர்ச்சி இப்படிப்பட்ட கேள்விகள்; அவற்றுக்கு எவ்வளவு சாந்தமான முறையிலே பதில் கூறினாலும், கலவரம், கல்லடி, இவைதான் பழனி பெற்றுவந்த பரிசுகள். பல இலட்சத்தைக் கால் தூசுக்குச் சமானமாகக் கருதித் தன் கொள்கைக்காக, காதலுக்காக, தியாகம் செய்த அந்தத் தீரன், சீர்த்திருத்தப் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊரூராகச் சென்று, சொற்பொழிவு செய்வதை மேற்கொண்டான், ஒரு வேலைக்கும் போகாமல், அவனுக்கு “மகாசனங்கள்” தந்த பரிசுகள் இவை. காதலின் மேம்பாட்டை உணர் மறுத்துக்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  53

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  52 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்19 தொடர்ச்சி திருவேடகநாதரை வணங்கி வரவும், நிலங்கரைகளைப் பார்த்து வரவும் வாரத்துக்கு இரண்டு முறையாவது ஊருக்குப் போய் விட்டு வருவார் மீனாட்சிசுந்தரம். இன்னொரு பழக்கமும் அவரிடம் இருந்தது. தடங்கல்களும் சந்தேகமும் ஏற்படுகிற எந்தக் காரியமானாலும் திருவேடகநாதர் கோவிலில் போய்ப் பூக்கட்டி வைத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதென்று வழக்கப்படுத்திக் கொண்டிருந்தார் அவர். இதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அரவிந்தனைத் தேர்தல் விசயமாகப் பூரணியைக் கலந்து கொண்டு வர கோடைக்கானலுக்கு அனுப்புவதற்கு முன் தினம் அதிகாலை…