தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 04: தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத் திருமணப் பதிவு முறையைப் பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார். திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக்…
வெருளி நோய்கள் 1071-1075: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1066-1070) வெருளி நோய்கள் 1071-1075 1071. சுடுநர் வெருளி – sniperphobia மறைவான இடத்திலிருக்கும் ஒருவரால் சுடப்படுவோம் என்றுகாரணமற்ற அளவு கடந்த பேரச்சம் சுடுநர் வெருளி. sniper என்றால் பதுங்கிச் சுடுநர். அஃதாவது பதுங்கி மறைவாக இருந்து குறிபார்த்துச் சுடுநர் எனப் பொருள். யாரும் மறைவாக இருந்து சுடுகிறார்களோ என்ற பேரச்சத்தையே குறிக்கிறது. போர்க்களத்தில் பதுங்கு குழியில் இருந்து யாரும் சுடுகிறார்களோ என்ற பேரச்சத்திற்கு ஆளாவதால் வெருளி உண்டாகிறது. 00 1072.சுட்டுரை வெருளி – Twitterphobia சுட்டுரை குறித்த வரம்பற்ற பேரச்சம்…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு இக்கோப்பில் ‘ஆபிசர் குவார்ட்டர்சு’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அலுவலர் குடியிருப்பு என்று தமிழில் குறி்த்திருக்க வேண்டும். ???? ‘குவார்ட்டர்’ என்றால் கால் என்று பொருளில்லையா? ஆம். அவ்வாறும் பொருள் உள்ளது. அவ்வாறு பார்த்தால் காலாண்டுகள் என வர வேண்டும். ஆனால், இடத்திற்குத்தகுந்த பொருளைக் குறிக்க வேண்டுமல்லவா Quarters என்றால், உறையுள், உறைவிடம், குடியிருப்பு, படைத்தங்கல் இடம்,குடியிருப்பில்லம்; குடியிருப்புகள்;தங்குமிடம் எனப் பல பொருள்கள். இருப்பினும்…
நாலடி நல்கும் நன்னெறி 23: பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!: இலக்குவனார் திருவள்ளுவன்
((நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : தொடர்ச்சி) பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க! கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனைஇடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,தொன்மை யுடையார் தொடர்பு. நாலடியார் 216 கருத்து: முதல், இடை, கடைநிலையில் உள்ள நட்பை உணர்ந்து பனைமரம்போன்று. தொடர்ந்து உதவாவிடினும் நட்புத்தன்மை குறையாதவரிடமே நட்பு கொள்ளல் வேண்டும். பதவுரை : கடையாயார் = கடைநிலையினர்; நட்பில் = தோழமை உணர்வில்; கமுகனையர் = கமுகு மரம்போன்ற தன்மையர்; ஏனை = பிறர்; …
வெருளி நோய்கள் 1026-1030: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1021-1025: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1026-1030 சிதை பொருள்(decaying matter) குறித்த வரம்பற்ற பேரச்சம் சிதை பொருள் வெருளி.அழுகும் பொருள்களால் ஏற்படும் தீய நாற்றம்,நோய் முதலியவற்றால் பேரச்சம் கொள்வர்.sep என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிதைவு/அழுகிப்போதல்.00 குழந்தை உருச்சிதைந்து பிறக்கும், கோரமாகப் பிறக்கும், அருவருப்பான தோற்றத்தில் பிறக்கும் என்றெல்லாம் குழந்தைப் பிறப்பு குறித்து அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வது சிதைவுரு வெருளி.இது மகப்பேறு வெருளியுடன் (Lockiophobia/Tokophobia/Tocophobia/ Maieusiophobia/ Parturiphobia தொடர்புடையது.பழங்கிரேக்கத்தில் téras என்றால் கோர உரு எனப் பொருள். இச்சொல்லில் இருந்து…
வெருளி நோய்கள் 1021-1025: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய் + படங்கள் 1016-1020 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1021-1025 இறப்பு வரும் என்ற அச்சத்தால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் சாவு வெருளிசாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின் (நற்றிணை : 397.7)கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது (புறநானூறு :137 : 5)சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் (பரிபாடல் : 2:71)(‘இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே’ எனக் குறுந்தொகை(209.3) அடியில் இறப்பு என்பது கடத்தல் என்னும் பொருளில்தான் வருகின்றது. பிறகுதான் உலக வாழ்வைக் கடத்தலையும் இறப்பு…
வெருளி நோய்கள் 1016-1020: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1011-1015 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1016-1020 சாம்பல் நிறம் தொடர்பானவற்றின் மீது ஏற்படும் வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சாம்பல்நிற வெருளிசாம்பல் நிறம் நடுவுநிலைமை, ஒத்துப்போதல், சலிப்பு, ஐயப்பாடு, முதுமை, புறக்கணிப்பு, நாணம் ஆகியவற்றுடன் தொடர்புடைய குறியீடாக விளங்குகிறது.glauco என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சாம்பல்நிறம்.00 தனித்திராமல் பிறரைச் சார்ந்திருக்கும் சார்பு(dependence on others) நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் சார்பு வெருளி.தற்சார்பின்றிப் பிறரை அண்டியிருத்தல் உரிய செயலைக் குறித்த காலத்தில் முடிப்பது குறித்த கவலையை உருவாக்கும். சார்தலுக்குரியவர் எதிர்பார்க்கும் உதவியைச் செய்யாமல்…
வெருளி நோய்கள் 1011-1015: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1006-1010: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1011-1015 1011. சாக்கடைப் புழை வெருளி – Manholephobia சாக்கடைப் புழை(Manhole) குறித்த வரம்பற்ற பேரச்சம் சாக்கடைப் புழை வெருளி. manhole என்பதன் நேர் பொருள் மனிதத் துளை. இது புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பைக் குறிக்கிறது. புதை சக்கடைக்குள் மனிதர் இறங்குவதற்கு அமைக்கப்பட்ட வாயில் அல்லது வழி். இதனைப் புழை என்பர். எனவே, சாக்கடைப்புழை எனப்படுகிறது. 00 1012. சாச்சன் வெருளி – Saxophonophobia சாச்சன் இசைக் கருவி/ சாச்சன் இசைப்பி (சாச்சபோன்/saxophone)குறித்த…
வெருளி நோய்கள் 1006-1010: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1001-1005: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1006-1010 சனவரி 31 ஆம் நாள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சனவரி 31 வெருளி.சனவரி 31 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 31 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.31 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 31 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி மாதம் குறித்த வரம்பில்லாப் பேரச்சம் சனவரி வெருளி.Yi என்னும் சீனச்சொல்லிற்கு முதல் எனப் பொருள். yue என்னும் சீனச்சொல்லிற்கு மாதம் எனப்…
வெருளி நோய்கள் 1001-1005: இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 996-1000: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1001-1005 சனவரி 16 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 16 வெருளி.சனவரி 16 ஆம் நாள் நிகழ்ந்த துயர நிகழ்வுகளை எண்ணி சனவரி 16 மீது காரணமற்ற தேவையற்ற அச்சம் கொள்வர்.16 ஆம் எண் மீது அச்சம் கொள்பவர்களுக்கும் சனவரி 16 மீது தேவையற்ற பேரச்சமும் கவலையும் கொள்வர்.00 சனவரி 17 ஆம் நாள் மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் சனவரி 17 வெருளி.சனவரி 17 ஆம் நாள் நிகழ்ந்த துயர…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03: இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 02 தொடர்ச்சி) தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது? 03 “தமிழின் பழைய மரபுகள் அழிந்து, தமிழ் அழிந்து போகாமல் காக்கவே தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். ஆனால், இன்றைக்கு நாம் தமிழ் மரபுகளை அழித்துக் கொண்டு அழிவுப் பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம். “தொல்காப்பியர் காலத்துத் தமிழ் மிகவும் வளம்பெற்று இருந்தது. அதனை நன்கு எடுத்துக் காட்டுகின்றது தொல்காப்பியம். தொல்காப்பியத்தால் மொழி நிலை – இலக்கியநிலை மட்டுமன்று; அக்கால மக்கள் நிலையும் அறியலாகும்….
க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? – திருத்துறைக் கிழார்
(கஅ. தமிழர் காலக்கணிப்பு முறை : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார்ஆ.தமிழர் க௯.இளந்தமிழ்த் தலைமுறையே, என்ன செய்யப் போகிறாய்? க. உன் தாய்மொழி பல வகையிலும் உருக் குலைக்கப்படுகிறது. உ. உன் இனமக்கள் பெயர்கள் தமிழாக இல்லை ௩. உனது நாட்டுக் கடைத்தெருக்களில் உள்ள பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படவில்லை! வேற்றுமொழிச் சொற்களைத் தமிழ் எழுத்துகளால் எழுதியுளர். ௪. உனது நாட்டு மக்கள் நாவில் வேற்றுமொழிச் சொற்களே விளையாடுகின்றன. அரசு அலுவலகங்களில் நடைமுறைகள் தமிழில் இல்லை. ரு. உனது…
