தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது ! – சி.இலக்குவனார்
உலக மொழிகளை எல்லாம் கற்று ஆராய வல்ல வாய்ப்பு ஏற்படுமேல் தமிழ் ஒன்றே உலக முதன் மொழியாம் பெருமைக்கும் தகுதிக்கும் உரியது என்று நிலைநாட்ட இயலும். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பது வெற்றுரையன்று. ஓரிடத்தில் தோன்றிய மாந்தர் பல்வேறு இடங்கட்கும் பிரிந்து சென்று பல வகையாலும் வேறுபட்டு விளங்குகின்றனர். மாந்தர் முதலில் தோன்றிய இடம் தென்னகமே என்று மாந்தர் நூல், வரலாற்று நூல், நில நூல் ஆராய்ச்சியாளர்கள் கூறத் தொடங்கியுள்ளனர். இக் கூற்று வலுப்பெற்று நிலை நாட்டப்படுமேல், தமிழே உலக மொழிகளின்…
முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே! -பேரா.சி.இலக்குவனார்
உலகில் முதல் மாந்தர் தோன்றிய இடம் தமிழகமே என்பதும், முதல் மாந்தரால் உரையாடப்பெற்ற மொழி தமிழே என்பதும் உண்மையோடுபட்ட செய்திகளே யாயினும் இன்னும் யாவராலும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. தமிழர்கள் இந்நாட்டில் தோன்றியவரே என்பதும் ஆரியர் வருகைக்கு முன்னர் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் தமிழர்களே என்பதும் நிலைநாட்டப்பெற்றுவிட்டன. பேராசிரியர் சி.இலக்குவனார் பழந்தமிழ்: பக்கம் 42
பாரத மொழிகளின் தாயே தமிழ்தான்! – பேரா.சி.இலக்குவனார்
நாகரிக மக்கள் கற்க வேண்டிய மொழிகளுள் ஒன்று தமிழ் என்பதை யாரும் மறத்தல் இயலாது. உலக அரங்கில் இடம் பெறுவதற்கு முன்னர் அதன் பிறப்பிடமாம் இந்நாட்டில் அதற்குரிய இடத்தை அளித்தல் வேண்டும். பாரத கூட்டரசுச் செயல்முறை மொழிகளுள் ஒன்றாகத் தமிழை ஏற்கச் செய்தல் வேண்டும். பாரத மொழிகளின் தாயே தமிழ்தான். தாயைப் புறக்கணித்து, மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப்போல் இன்று தமிழைப் புறக்கணித்து இந்தியை அரியணையில் ஏற்ற முயல்கின்றனர். பழந்தமிழுடன் ஆரியம் வந்து கலந்ததனால் உண்டான விளைவே பாரத மொழிகளின் தோற்றம்….
திருக்குறள் அறுசொல் உரை – 086. இகல்: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 085. புல்அறிவு ஆண்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 086. இகல் வெறுப்பு, பகைமை, பேரிழப்பு துயரம்எனப் பெருக்கும் மனமாறுபாடு. இகல்என்ப .எல்லா உயிர்க்கும், பகல்என்னும் பண்(பு)இன்மை பாரிக்கும் நோய். பிரிவுஎனும் தீப்பண்பை வளர்க்கும் கொடிய நோய்தான் மனமாறுபாடு. பகல்கருதிப் பற்றா செயினும், இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. பிளவால் விரும்பாதன செய்வார்க்கும், மாறுபாட்டால், தீங்கு செய்யாதே. இகல்என்னும் எவ்வநோய் நீக்கின், தவல்இல்லாத்…
திருக்குறள் அறுசொல் உரை – 085. புல்அறிவு ஆண்மை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 084. பேதைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 085. புல்அறிவு ஆண்மை பேர்அறிஞர் என்று காட்டுதற்குக் கீழ்அறிவைக் கைஆளும் அறியாமை அறி(வு)இன்மை, இன்மையுள் இன்மை; பிறி(து)இன்மை, இன்மைஆ வையா(து) உலகு. அறிவு இல்லாமையே, வறுமை; பிறஎலாம், வறுமைகள் அல்ல. அறி(வு)இலான் நெஞ்(சு)உவந்(து) ஈதல், பிறிதுயாதும் இல்லை, பெறுவான் தவம். அறியான் மனம்மகிழ்ந்து தருதல், பெறுவான் செய்த தவத்தால்தான். அறி(வு)இலார், தாம்தம்மைப் பீழிக்கும் பீழை, …
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 2/3 தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும் அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார். எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால் ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும்….
திருக்குறள் அறுசொல் உரை – 083. கூடா நட்பு: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 082. தீ நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல் அதிகாரம் 083. கூடா நட்பு கூடாத மனங்களின் கூடாத போலிமை நட்போடு கூடாமை. சீர்இடம் காணின், எறிதற்குப் பட்டடை, நேரா நிரந்தவர் நட்பு. மனம்கூடா நண்பர், வாய்ப்புவரின், துயரம் செய்வார்க்கும் துணைஆவார். இனம்போன்(று) இனம்அல்லார் கேண்மை, மகளிர் மனம்போன்று, வேறு படும் போலிமை நண்பர்தம் நட்பும், விலைமகளிர் மனம்போல் மாறுபடும். பலநல்ல கற்றக்…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 06: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6 1959ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிய வருமாறு அழைப்புக் கிடைத்தவுடன் மதுரை சென்றார். கலைத்தந்தை தியாகராசச் செட்டியாரின் அரவணைப்பில் 1965 தொடக்கம் வரை மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். புலவர் விழா நடத்தி, மாணவர்களிடம் தமிழ் உணர்வையும் தமிழ்ப்பற்றையும் வளர்த்தார். தொல்காப்பிய ஆராய்ச்சி’16 என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலையும் பழந்தமிழ்’17 என்னும் நூலையும் எழுதினார். மேலும் ‘குறள்நெறி’ என்னும் பெயரில்…
ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் 2/2 ‘‘தமிழ் என்பது தூய தமிழ்ச் சொல்லே. 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மொழிக்கு ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட மொழியால் பெயர் இடப்பட்டது எனச் சொல்வது ஏற்கத்தக்கதா’’ என வினவுகிறார். ஐந்தெழுத்தால் ஒரு பாடையாகுமா என்று சொல்வோருக்கு ‘‘8 எழுத்தால் சமசுகிருதததை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா? 2 எழுத்தால் ஆங்கிலத்தை ஒரு மொழி எனச் சொல்ல முடியுமா’’ என விளக்கித் தமிழ், தனித்தியங்கும் மூல மொழி எனத் தெளிவுபடுத்துகிறார். சிலர் தமிழ்…
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதே பழந்தமிழர் பண்பாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
‘கற்பு என்பது ஆண்களுக்கும் உண்டு’ என்று பாரதி வந்துதான் கற்புநிலையை இருவருக்கும் பொதுவாக வைத்தார் என்று தவறாகக் கூறுபவர்கள் பலர் உள்ளனர். பிறன்மனை விழையாமையை நம் தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தியுள்ளன என்றால் ஆடவர் தன் வாழ்க்கைத் துணையன்றி வேறு பெண்ணை விரும்பக் கூடாது என்று ஆடவர் கற்பை வலியுறுத்தியுள்ளார்கள் என்றுதானே பொருள். போர் இறப்புகளால் ஆண்கள் எண்ணிக்கை குறைந்தபொழுது சில வீரர்கள் இருமணம் புரிந்திருக்கலாம். ஆட்சிப் பரப்பைப் பெருக்குவதற்காகச் சில மன்னர்கள் அயல்நாட்டு அரசன் மகளை மணம் புரிந்திருக்கலாம். இலக்கிய மரபிலே…
திருக்குறள் அறுசொல் உரை – 084. பேதைமை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 083. கூடா நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 084. பேதைமை அறிய வேண்டுவன அறியாமையும், அறிய வேண்டாதன அறிதலும். பேதைமை என்ப(து)ஒன்று யா(து)…?எனின், ஏதம்கொண்டு, ஊதியம் போக விடல். தீமையைப் பிடித்துக் கொண்டு, நன்மையைப் போகவிடும் அறியாமை. பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை கைஅல்ல தன்கண் செயல். ஒழுக்கம் அல்லாத செய்கை, அறியாமையுள் பெரிய அறியாமை. நாணாமை, நாடாமை, நார்இன்மை,…
கல்வெட்டிலேயே தொடங்கிய சமற்கிருதத் திணிப்பு – தமிழ நம்பி
கல்வெட்டிலேயே தொடங்கியசமற்கிருதத் திணிப்பு! கழக(சங்க)க் காலத்தில் தமிழ்நாட்டில் அரசர், போர்மறவர் முதலிய செல்வர் மனைகளில் மகன் பிறந்தால் அவனை முதன்முதலாகத் தந்தை சென்று காண்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சி! அதனைத் “தவமகன் முகம் காண்டல்” என்பர். தகடூரை ஆண்ட அதியமானுக்கு மகன் பிறந்த போது நடந்த இச்சிறப்பை ஒளவையார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம்.100) கூறுவதை அறியலாம். இந்த வழக்கம் கி.பி.14ஆம் நூற்றாண்டிலும் இருந்தது என்பதைத் திருமயம் பகுதியிலுள்ள நெக்கோணம் பெருமாள் கோயில் கல்வெட்டு (பி.எசு.672) தெரிவிக்கிறது. இங்கிருந்து நாடுகாவல்…
