தோழர் தியாகு எழுதுகிறார் 24: நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? 

(தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5), கடலூர் இரவு-தொடர்ச்சி) நிலக்கரியை நிலத்துக்கே விட்டு விடுவோமா? எங்குச் சுற்றினாலும் இங்குதான் வந்து நிற்க வேண்டும் என்பது போல், காலநிலை மாற்றம் பற்றி எவ்வளவுதான் பேசினாலும் புதைபடிவ எரிபொருளின் வாசலில்தான் நிறுத்தப்படுகிறோம். செடிகொடிகள் மரங்கள் விலங்குகள் (மனிதனும் கூட) மண்ணில் புதைந்து நீண்ட காலம் மக்கிச் சிதைந்துதான் புதைபடிவ எரிபொருள் உண்டாகிறது. அது கரி வளி, நீரகம் எனும் இரு தனிமங்களால் ஆனது. நிலக்கரி, எண்ணெய் (கல்+நெய் = கன்னெய், பெற்றோல்), இயற்கை…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 25

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 24 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 15 குன்னம் சிதம்பரம் பிள்ளை அரியிலூரில் இருக்கையில் எனக்குக் கல்வியில் அபிவிருத்தி ஏற்பட்டதோடு விளையாட்டிலும் ஊக்கம் அதிகரித்தது. பிராயத்திற்கு ஏற்றபடி விளையாட்டிலும் மாறுதல் உண்டாயிற்று. அரியிலூரிலுள்ள பெருமாள் கோயில் வாசலிலும் உள்ளிடங்களிலும் நண்பர்களோடு விளையாடுவேன். படத்தை (காற்றாடியை)ப் பறக்கவிட்டு அதன் கயிற்றை ஆலயத்திற்கு வெளியேயுள்ள கருடதம்பத்திலே கட்டி அது வான வெளியில் பறப்பதைக் கண்டு குதித்து மகிழ்வேன். கோபுரத்தின் மேல் ஏறி அங்கும் படத்தின் கயிற்றைக் கட்டுவேன். தோழர்களும் நானும் சேர்ந்து ஒளிந்து பிடிக்கும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5) : கடலூர் இரவு

(தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும் தொடர்ச்சி) கடலூர் இரவு சிறைப்பட்ட எவரும் சிறையிலிருந்து தப்ப எண்ணுவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது அந்த எண்ணத்தைச் செயலாக்க முற்படுவதும் இயல்புதான். சாதாரணமான ஒருவருக்கே இப்படி யென்றால், பொதுவாழ்வில் ஈடுபட்டு ஏதேனுமொரு குறிக்கோளுக்காகச் சிறைப்பட்டவர்களுக்கு அதுவே புகழ்தரும் சாதனையாகி விடுகிறது. ஒளரங்கசீப்பின் ஆகுரா சிறையிலிருந்து தப்பியது வீர சிவாசிக்கும்,தென் ஆப்பிரிக்க பூவர் சிறையிலிருந்து தப்பியது வின்சுடன் சர்ச்சிலுக்கும், ‘வெள்ளையனே வெளியேறு!’போராட்டக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சிறையிலிருந்து தப்பியது செயப்பிரகாசு நாராயணனுக்கும், அதே ஆட்சியின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பியது…

 தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 21 : ஏ. எம். கே. (4)தொடர்ச்சி) காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும் (CLIMATE ACCOUNTABILITY AND CLIMATE JUSTICE) இந்தப் புவிக் கோளத்தில் காலநிலை மாற்றத்துக்குப் புவி வெப்பமாதல் காரணம். புவி வெப்பாமதலுக்கு கரியிருவளி(Carbon dioxide) உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு காரணம். இந்த உமிழ்வு என்னும் கேடு செய்வதில் நாடுகளிடையே நிகர்மை (சமத்துவம்) இல்லை. கேடு செய்யும் நாடுகள் சில என்றால், கேட்டின் கொடும்பயனைத் துய்த்துத் துன்புறும் நாடுகள் பல. அந்தச் சில நாடுகள் தொழில்துறையில் வளர்ச்சி…

தமிழ்நாடும் மொழியும் 24: சோழர் கால ஆட்சி முறை – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 23 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 24 சோழர் கால ஆட்சி முறை சோழ மன்னர்கள் வெற்றி வீரர்கள் மட்டுமல்ல; திறமை மிக்க ஆட்சி புரியும் ஆற்றல் உடைய மன்னர்கள் என்றும் கூறலாம். சில மன்னர்கள் போரிலே புலிகளாக இருப்பர்; மாற்றாரும் கண்டு தோற்றுக் காற்றெனப் பறந்தோடச் செய்யும் பெரு வீரமிக்க மன்னர்களாகவும் இருப்பர்; கூற்றுவனும் அத்தகைய அரசர்களைக் காணின் குடல் கலங்குவான். ஆனால் அவர்கள் நாட்டை ஆளத் திறமை சிறிதும் இல்லாது இருப்பர். இதனால் கண்ணீரும் செந்நீரும் சிந்திப்பெற்ற பெரு நாடுகளை…

தோழர் தியாகு எழுதுகிறார் 21 : ஏ. எம். கே. (4) : சட்டம் ஒன்றுதான்

(தோழர் தியாகு எழுதுகிறார் 20: காலநிலைக் களம் தொடர்ச்சி) சட்டம் ஒன்றுதான் சிறைக் கண்காணிப்பாளரையும் ஏனைய அதிகாரிகளையும் காவலர்களையும் சிறைக்கு வெளியே துரத்தியடித்த பின், ஆர்வக் குரல் எழுப்பிய கைதிகளிடையே ஏ.எம். கே.யின் எச்சரிக்கைக் குரல் ஒலித்தது. “தோழர்களே! நிதானம் வேண்டும். பகைவனிடம் அஞ்சத் தேவையில்லை. ஆனால் அவனைக் குறைத்து மதிப்பிடவும் கூடாது. நியாயம் நம் பக்கம்தான் உள்ளது. ஆனால், போராடித்தான் அந்த நியாயத்தை நிலைநாட்ட முடியும். நாம் இன்னும் வெற்றி பெற்று விடவில்லை என்பதை மறவாதீர்கள். பகைவனின் அடுத்த தாக்குதலுக்கு நாம் தயாராக வேண்டும்.” வெளியிலிருந்து…

தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 3/3- முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 2/3தொடர்ச்சி) 7. தமிழ்நடை வளர்த்த தமிழ்த் தென்றல் 3/3 1945ஆம் ஆண்டில் ‘புதுமை வேட்டல்’, ‘கிறித்துவின் அருள் வேட்டல்’ என்னும் இரு நூல்களும் வெளிவந்தன. இந்நூல்கள் அவர்தம் சமரசப் பற்றினை விளக்க வல்லன. வாகும். 1940ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சிவனருள் வேட்டலும்’ 1937ஆம் ஆண்டில் வெளிவந்த ‘கிறித்து மொழிக் குறளும்’ உளப் பண்பாட்டினை உயர்த்தும் உயரிய நூல்களாகும். ‘இருளில் ஒளி’ என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் வெளிவந்த நூலாகும். இந்நூலில் ‘எண்ணத்தின் உயர்வே வாழ்வில் ஏற்றத்தைத் தரும்’ என்பதனை நயமுறப்…

         இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’   சங்கம் தோன்றித் தமிழ் வளர்த்த வரலாற்றை அறிஞர் வையாபுரிப் பிள்ளையும் ஏற்றுக் கொள்கின்றார். சங்கம் தோன்றிய பின்னர், புதிதாக இயற்றப்படும் நூல்கள் சங்கப் புலவர் முன்னிலையில் அரங்கேற்றப்படுதல் வேண்டும் என்ற ஒரு விதியுமிருந்தது என்பதை யாவரும் அறிவர். சங்கம் தோன்றுவதற்கு முன்னர் புதிய நூல்கள் அரசர் கூட்டும் அவையில் அரங்கேற்றப்பட்டன. தொல்காப்பியம் நிலந்தரு திருவின் நெடியோன் அவையில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.1 ஆதலின்  தொல்காப்பியம் சங்க காலத்திற்கு முற்பட்டதாகும் என்று தெளியலாம். ஆதலின் தொல்காப்பியர் ++…

தோழர் தியாகு எழுதுகிறார் 20: காலநிலைக் களம்: ஏற்றமும் சறுக்கலும்

(தோழர் தியாகு எழுதுகிறார் 19.3 தொடர்ச்சி) காலநிலைக் களம்: ஏற்றமும் சறுக்கலும் கரியிருவளி(Carbon dioxide) முதலான பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவியலர்களும் சூழலியர்களும் வலியுறுத்தத் தொடங்கி பல்லாண்டு கழிந்த பிறகுதான் உலகத் தலைவர்களுக்கு மெல்ல உறைக்கலாயிற்று. 1979இல்தான் சுவிட்சர்லாந்து நாட்டில் செனிவா நகரில் காலநிலை மாற்றம் பற்றிய உலகத் தலைவர்களின் முதல் பெரிய மாநாடு நடைபெற்றது. அதற்குப் பிறகு காற்று மண்டலத்தில் கரியளவு கிட்டத்தட்ட 25 விழுக்காடு உயர்ந்துள்ளது. 1997ஆம் ஆண்டு சப்பான் நாட்டு கியோட்டா நகரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 21. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22 4. குலமும் கோவும் தொடர்ச்சி அதியர்     தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.12 அன்னார் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும், அதியர் கோமான் என்றும் வழங்கப்பெற்றான். ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி தமிழ் நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தைச் சார்ந்த தலைவருள் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான்.13 அவனது நாட்டின் தலைநகர் தகடூர் என்று தமிழ் இலக்கியம் கூறும்….

தோழர் தியாகு எழுதுகிறார் 19 :ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

(தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி) ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி ஒரு கட்டத்துக்குப் பின் பொன் நாடார் பரிதாபமாய்க் கெஞ்சத் தொடங்கினார். “என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் ஐயா. என்னைக் கொன்றுவிடாதீர்கள் ஐயா.!” இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று மெளனமாகிப் போனார். அதன் பிறகும் அடி நிற்கவில்லை சில நிமிடங்கள் கழிந்த பிறகுதான், சந்தேகம் வந்து அடியை நிறுத்தி விட்டுப் பார்த்தார்கள் – பொன் நாடார் பிணமாகியிருந்தார் நெடுமாடத்தில் (டவரில்) நடந்த இந்தக் கொலையைத்…

தமிழ்ச்சொல்லாக்கம் 606-610

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 601-605 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 606-610 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 606. பட்சி சகுனம்              –              புற்குறி 607. அத்தினாபுரம்             –              குருநகர் நூல்        :               பெருமக்கள் கையறு நிலையும் –…