தமிழ்நாடும் மொழியும் 9 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 8 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி கரிகாலனைப் பற்றி உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலை என்னும் நூல் பாடியுள்ளார். பொருநராற்றுப்படையும் இவனை நன்கு புகழ்ந்து பேசுகின்றது. இவனது ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்து விளங்கியது. இத்துறைமுகத்தில் அயல் நாட்டுக் கப்பல்கள் பல வணிகத்தின் பொருட்டு வந்துசென்றன. வெளிநாட்டு வணிகர் பலர் இவ்வூரில் வந்து குடியேறினர். வெளிநாடுகளிலிருந்து பல பொருள்கள் வந்து இந்நகரில் குவிந்தன. தமிழ்நாட்டுப் பொருள்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. மேலும் இப்பெருநகர் சோழர் தம் தலை நகராகவும் விளங்கியது….
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5 குழந்தைத் தோழர்கள் குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பசுவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது, குத்திச் சண்டை செய்யவோ?குப்பை கிண்டி மேயவோ?கத்திபோல் உன் கால் விரல்கடவுள் தந்து விட்டனர்! காலை கூவி எங்களைக்கட்டில் விட்டெ ழுப்புவாய்,வேலை…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 461-464
(தமிழ்ச்சொல்லாக்கம்: 453-460 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 461-464 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 461. சங்கீத வித்துவான்கள் – இசைப் புலவர்கள் தற்கால வழக்கிலுள்ள சுமார் 40 சாதாரண இராகங்களை இனங்கண்டு பெயர் சொல்லத் தெரிந்தவர். மேலும்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 10 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் மொழியில் காணப்படும் இலக்கணக் கூறுகளின் மாற்றமும், சொற்பொருள்களின் மாற்றமும், சொல்மாற்றமும் விரைந்து நிகழ்வன அல்ல; மிகுந்தும் நிகழ்வனவல்ல. நூற்றாண்டு தோறும் சிலவாகவே நிகழும். இவ்வாறு மாற்றங்கள் நிகழ்வதற்குரிய காரணங்கள் மொழியைப் பயன்படுத்தும் மக்களுடைய சோம்பர், விரைவு, அயல் மொழியாளர் கூட்டுறவு, மொழியறிவு இன்மை எனப் பல திறப்படும். இம் மாற்றங்கள் மொழி வளர்ச்சியில் இயல்பாக நிகழக் கூடியன என்பதைத் தமிழ்மொழி இலக்கண ஆசிரியர்கள் நன்கு அறிந்துள்ளனர். தொல்காப்பியர் இவ்வகை மாற்றங்களை…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 9
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 8 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 9 மருத நிலம் தொடர்ச்சி கேணி, கிணறு இன்னும், ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத்தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள திருவல்லிக்கேணியும்,நெல்லை நாட்டிலுள்ள நாரைக் கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும். நிலம் இங்ஙனம் ஆற்று நீராலும், ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும்நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள்பலவாகும். நிலம் என்னும் சொல்லை நன்னிலம் என்ற ஊர்ப் பெயரிற்காணலாம். அப்பெயரிலுள்ள அடைமொழி அந்நிலத்தின் வளத்தைக்குறிப்பதென்பர். புலம் …
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 453-460
(தமிழ்ச்சொல்லாக்கம்: 447-452 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 453-460 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 453. பிரதிகம் – பிண்டம் 454. பதிகம் – பத்து மற்றி தற்குப் பதிகம்வன் றொண்டர்தாம் புற்றி டத்தெம் புராண னருளினாற் சொற்ற…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 447-452
(தமிழ்ச்சொல்லாக்கம்: 437-446 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 447-452 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 447. Scientific culture – சாத்திரக்கல்வி 448. Fine Arts – நற்கலை மநோபிவிர்த்தியினுக்குப் பிரதான சாதனங்களாயுள்ளன முறைப்பட்ட சாத்திரக்கல்வி (Scientific culture)யும்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 10
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 9 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 6என் தந்தையார் குருகுலவாசம் (தொடர்ச்சி) என் தந்தையாருடைய குருகுல வாசம் ஆரம்பமாயிற்று, கனம் கிருட்டிணையர் மனோதைரியமும் பிரபுத்துவமும் உடையவர். என் தந்தையாரை அவர் மிக்க அன்போடு பாதுகாத்து வந்தார். ஆனாலும் அவருக்குப் பல வேலைகளை ஏவுவார். தினந்தோறும் தம்முடைய ஆசிரியருக்கு என் தந்தையார் வசுத்திரம் துவைத்துப் போடுவார்; வெந்நீர் வைத்துக் கொடுப்பார். அந்த சமசுதான சமீன்தாராகிய கச்சிக் கல்யாணரங்கர், கிருட்டிணையரையும் ஒரு சமீன்தாரைப் போலவே நடத்திவந்தார். அவருக்கு எல்லாவிதமான சௌகரியங்களையும் அமைத்துக் கொடுத்தார். கனம்…
பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா – விவேகானந்தன் ஆர்.
தான் வந்த வழியை நினைத்துப் பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா முகநூலில் பகிரப்பட்ட நரிக்குறவர் சமூத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை கோரா நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். மூல எழுத்தர் திரு. அ.சேக்காதர் இப்ராகீம் அவர்களுக்கு நன்றி. பதிவு பெரிது, அதைவிடப் பயணமும் பெரிது, தான் பிறந்த சமூகத்திற்கு முன்மாதிரியான நிகழ்வு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இனத்தோடு ஊர்விட்டு ஊர் நகர்ந்து கொண்டே இருப்பவர்கள்தான் நரிக்குறவர்கள். இவர்களில் சுவேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால், இது…
தமிழ்நாடும் மொழியும் 8 – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 7 தொடர்ச்சி) கடைச்சங்கக் காலம் தமிழகத்தின் பொற்காலம் கடைச்சங்கக் காலமாகும். இக்காலமே தமிழ் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டிய காலமாகும். இனி இக்காலத் தமிழகத்தின் கலை, கல்வி, பண்பாடு, வாணிக வளம், மொழியின் செழுமை ஆகியவற்றைப் பார்ப்போம். மேற்கூறியவற்றை நாம் அறிய உதவுவன சங்கத் தொகை நூல்களும், கி. பி. முதலிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த என்போரின் குறிப்புகளும், பெரிப்புளூசின் ஆசிரியர் குறிப்புகளுமாம். தமிழ் வேந்தர்கள் சங்கக் காலத்தில் தமிழகம் முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர் முதலியோரால் ஆளப்பட்டது. குறுநில மன்னர் ஏறத்தாழ…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 437-446
(தமிழ்ச்சொல்லாக்கம்: 430-436 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 437-446 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 437. அபிவிருத்தி – மேம்பாடு 438. புண்ணியம் – நல்வினை 439. பராக்கிரமம் – வல்லமை 440. அனுமதி – கட்டளை 441….
4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 – சி.பா.
(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 1/5 தொடர்ச்சி) 4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 2/5 தம்முடைய இருபத்தைந்தாம் வயது தொடங்கிய-அதாவது 1901ஆம் ஆண்டு முதல்-தம்முடைய திருமண ஆண்டு முதல் குழந்தைப் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். 1917-18ஆம் ஆண்டில் “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் கவிதை ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர்தம் குழந்தைப் பாடல்கள் 1941ஆம் ஆண்டில் ‘இளந்தென்றல்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுதியை, மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, உள்ளமும் உணர்வும் என்னும் ஐந்து…
