தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொல்காப்பியத்தை புறக்கணிப்பது ஏன்? – இன்மதியில் இலக்குவனார் திருவள்ளுவன்

by Inmathi Staff | சன 5, 2022 | கல்வி ஒன்றிய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு தமிழக அரசு  ஒத்துழைக்க வேண்டுமா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் தொல்காப்பியத்துக்கு இடமில்லையே ஏன்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் தமிழ்த்தாள் கட்டயாமாக்கப்பட்டிருப்பது குறித்துத் தமிழ்க்காப்புக்கழகத் தலைவரான இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை அரசு உருவாக்கியிருப்பதில் எனக்கும் இரட்டை மகிழ்ச்சி. தமிழறியாதவர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் பணியில் அமர்ந்து கொண்டு, மக்களுக்கும் அரசிற்கும் இடையே இடைவெளியை உருவாக்கிக்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 79-106 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 60-78 இன் தொடர்ச்சி) 79. ஆவியியல்   pneûma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் மூச்சு. நடைமுறையில் ஆவி, தூய ஆவி என்று சொல்கின்றனர். pneûma என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மூச்சு. நடைமுறையில் ஆவி, தூய ஆவி என்று சொல்கின்றனர். spectrum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் தோற்றம், உரு. மாய உருவை – பேயுருவை இதன் மூலம் குறிக்கின்றனர். spook என்பதற்கு ஒல்லாந்தர் (Dutch) மொழியில் பேய் எனப் பொருள்.  fantosme என்னும் பழம்பிரெஞ்சுச்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 60-78 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 44-59 இன் தொடர்ச்சி) 60. அறியாப்பறப்பியல் பறக்கும் தட்டு ஆய்வியல், அறியா பறக்கும் பொருளியல், அறியாப் பறப்பியல்   எனப்படுகிறது. Ufo என்பது unidentified flying object என்பதன் தலைப் பெழுத்துச் சொல்லாகும். இதன் பொருள் அடையாளம் அறியாத பறக்கும் பொருள் என்பதாகும். இதனைச் சுருக்கமாக அறியாப் பறப்பியியல்  – Ufology எனலாம். Ufology 61. அறிவீட்டவியல் Gnoseology 62. அறுவடை பிந்திய நுட்பியல் Post Harvest Technology 63. அறை ஒலியியல் Room Acoustics 64. அற்பச் செய்தியியல்…

ஈழத்து நாடக இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 15 6. நாடகம்  ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிாிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகங்களும் நவீன நாடகங்களாகும். மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாது.  ஈழத்தில் நாடக…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 44-59 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43 இன் தொடர்ச்சி) 44. அலையியல் Tidology 45. அல்பேனியரியல் Albanology 46. அழகெழுத்து வரைவியல் பிரெஞ்சுச் சொல்லின் மூலமான kállos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அழகு. +  gráphō  என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எழுத்து. எனவே, kalligraphía என்பது அழகான எழுத்தைக் குறிக்கிறது.           Calligraphic graphics 47. அழிப்புநுட்பியல் Terminator Technology 48. அழுத்த இயங்கியல் Barodynamics 49. அளபுரு நீரியல்  Parametric Hydrology 50. அளவறிபுவிவடிவியல் Quantitative Geomorphology 51. அலகியல்  …

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 21-43: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1-20 இன் தொடர்ச்சி) 21. அண்டஆண்டியல்   அண்டநேரவியல், அண்டக் காலவியல் என்றும் குறிக்கின்றனர். நேரம் என்பது இந்த இடத்தில் பொருந்தாது.  காலம் என்பதும் பொதுவாகப் பருவகாலத்தையே குறிப்பதால் அண்டத்திலுள்ள விண்மீன் முதலான உறுப்புகளின் ஆண்டுக் காலத்தைக் குறிப்பதால் ஆண்டியல் எனப் படுகிறது.     Cosmochronology 22. அண்ட மின்னியங்கியல் Cosmic electrodynamics 23. அண்டப் பயணவியல் Cosmonautics 24. அண்டவியல்   Universology அண்ட கோளங்கள், அண்ட கோளங்கள் பற்றிய ஆய்வு, படைப்பாய்வு நூல், மன்னல ஆய்வு…

தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 30 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 31 3. மொழிபற்றிய சிந்தனைகள் 3. மொழி மொழிபற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை உங்கள்முன் வைக்கிறேன். (1) மொழி பற்றியவை: (அ) மொழி என்பது ஒருவர் கருத்தை மற்றவருக்கு அறிவிக்கப் பயன்படுவது என்பது தவிர வேறு எதற்குப் பயன்படுவது? இது தவிர மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொழிப்பற்று என்பதும், முன்னோர் மொழி என்பதும் எதற்காக மொழிக்குப் பொருத்துவது என்பது எனக்குப் புரியவில்லை….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1-20: இலக்குவனார் திருவள்ளுவன்

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர வேண்டும்! தமிழில் வரும் பிற துறைகள் பற்றிய கட்டுரைகளையும் நூல்களையும் பார்க்கும் பொழுது தமிழ் அறிவியல் துறையில் முன்னேறிவிட்டதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் நாம் எட்ட வேண்டிய இலக்கு மிக மிகத் தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது “அறிவியலிலும் தமிழ்! அனைத்திலும் தமிழ்!” என்பதே அரசின் முழக்கமாக அமைந்தது. ஆனால், இதனைச் செயல்படுத்தும் வகையில் போதிய துறையறிவும் தமிழ்ப் புலமையும் நிறைந்தவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் உள்ளனர். பிற…

ஈழத்து ச் சிறுகதை இலக்கியம் – தொடர்ச்சி: மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 14   4 1950 ஆம் ஆண்டுகளின் சிறுகதைப் போக்குகள் 60 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதைக் காணலாம். உண்மையில் 50 களில் அரும்பிய போக்குகள் 60 களில் முதிர்ச்சி அடைந்தன என்று கொள்வதே பொருத்தம். 50 களில் தோன்றிய எழுத்தாளர்கள் பலர் 60 களிலேயே அதிக ஆற்றலுடன் எழுதத் தொடங்கினர். புதிய எழுத்தாளர்கள் பலர் எழுத்துலகில் புகுந்தனர். 1956இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து இடதுசாாிச் சிந்தனைப் போக்கின் செல்வாக்கு 60 ஆம்…

தந்தை பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் தொடர்ச்சி : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 29 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 30 3. மொழிபற்றிய சிந்தனைகள் 2. மொழியின் தோற்றம் ‘மொழி’ என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலையாகும். மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்றதாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல்; அவள் முதலில் அடையும் பெருமகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதிலேயே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு ஒத்துவளர்ந்து வருவது மொழிவளர்ச்சியேயாகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது; மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின்…

ஈழத்துப் புதின இலக்கியம் – . மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 8   அத்தியாயம்  4. புதினம்    பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முதலியவை தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. புதினம், சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்றாகும். பத்தொன்பதால் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற புதின இலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும்…

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்: தமிழக அரசு அறிவித்தது சரியா?

by Inmathi Staff | டிசம்பர் 24, 2021 | பண்பாடு English தமிழ் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார். அவர் எழுதி 1891இல் வெளியான மனோன்மணீயம் என்ற நாடக நூலில் உள்ள பாயிரத்தில் தமிழ்த் தெய்வ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள பாடலின் ஒரு பகுதிதான் நீராரும் கடலுடுத்த பாடல். தமிழகத்தின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும் என்று கரந்தைத் தமிழ் சங்கத்தின் 1913ஆம் ஆண்டு ஆண்டறிக்கையில் இடம் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, 1914இல் கரந்தைத் தமிழ் சங்கத்தின் விழாக்களில் அந்தப் பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலைத்…