தமிழ்ப் பெருங்காவலர் வள்ளல் கா.நமச்சிவாயர் – சிறுவை நச்சினியார்க்கினியன்

  வள்ளல் கா.நமச்சிவாயர் என்று விளித்தால்தான் தமிழ் உள்ளங்கள் குளிரும் ஏன்?  வள்ளல் என்று சொன்னால் மட்டும் சில உள்ளங்களுக்கு முழு நிறைவு அளிக்காது. அவரைத் தாயினும் சாலப் பரிந்தூட்டும் தயாளனுக்கே அறிந்தோர் ஒப்பிடுவர். பௌராணிகக் காலத்தில் தோன்றி இருந்தால் தமிழ் அன்னையே இம்மண்ணுலகில் சில நாள் தங்க எண்ணி வந்தனள் எனக் கூறி இருப்பர். இக் கூற்றுகள் அனைத்தும் உயர்வு நவிற்சியின் பாற்பட்டன அல்லவே அல்ல; முற்றிலும் உண்மை. காரணங்கள் ஆயிரம் ஆயிரம்; உவமைகளோ நூற்றுக் கணக்கின. ஆனால் அந்த வள்ளல் இப்புவியில்…

தமிழி – உரோமன் எழுத்துப்பெயர்ப்பு – 2 : முனைவர் இராம.கி

  இக்கருத்தரங்கில் தமிழ்ப்பின்னங்கள், குறியீடுகளை ஒருங்குறியிற் சேர்ப்பது கருதி, தமிழ்ப்பெயர்களை ஒரேவகை உரோமன் எழுத்தில் [அதாவது உயர் கட்டெழுத்தையும் (upper case letters), தாழ் கட்டெழுத்தையும் (lower case letters) கலக்காது அந்தந்த தனிக்கட்டெழுத்தில்] எப்படிக் குறிப்பதென்ற கேள்வியெழுந்திருக்கிறது. அதை முடிவு செய்வதற்காக பேராசிரியர் மு.பொன்னவைக்கோ, துணைவேந்தர், தி.இரா.நி.பல்கலைக்கழகம் பேரா.வி.செயதேவன், முதன்மைப் பதிப்பாசிரியர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சீராய்வுத் திட்டம் பேரா.முருகையன், பேராசிரியர்(ஓய்வு), அண்ணாமலைப்பல்கலைக்கழகம் முனைவர் மா.பூங்குன்றன்,  பதிப்பாசிரியர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் முனைவர் மு.கண்ணன், பதிப்பாசிரியர்,செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்…

திருக்குறளில் உருவகம் – 5: பேராசிரியர் வீ. ஒப்பிலி

   (பங்குனி 23, தி.பி.2045 / 06 ஏப்பிரல் 2014   இதழின்  தொடர்ச்சி)    இனி நீர் உருவகமாகப் பயன்படும் மற்ற குறட்பாக்களை எடுத்துக் கொள்வோம். நீர் தூய்மையை உண்டாக்கும் தன்மையுடையது. புறத்தே தோன்றும் அழுக்கை நீக்கும் நீர் அகத்தே தோன்றும் வாய்மையின் உருவகமாகிறது. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (298)   வாய்மையின்மையால் நேரும் கேட்டினையும், அப்போது நீர் பயன்படாது போவதையும் ‘மாக்பெத்து’ என்ற நாடகத்தில் சேக்சுபியர் எடுத்துக் காட்டுகிறார். அகத் தூய்மையைக் குறிக்கும் போதெல்லாம் அக்கவிஞரும் நீரை…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ படித்தேன்! இன்புற்றுக் களித்தேன்! – முனைவர் குமரிச் செழியன்

  இலக்கியத்திலிருந்து பெறப்படுவதுதான் இலக்கணம் என்றாலும் இலக்கியத்தின் அழகுக்கும் இளமைக்கும் கட்டுக்கோப்பு குலையாமல் காப்பதற்கும் இலக்கணம் முக்கியமானது. எனவே, இலக்கியத்திலிருந்து இலக்கணமும், இலக்கணத்தின் வழியே இலக்கியமும் வளம் பெற்று வளர்ந்த சிறப்பு தமிழ் மொழிக்கே உரியது. எனவே, இலக்கியம், இலக்கணம் என்பவை தூய தமிழ்ச் சொற்களே. எழுத்துக்களே இல்லாத மொழியில் சொல்கள் எப்படி இருந்திருக்க முடியும். எனவே, இலட்சியமே இலக்கியமாயிற்று என்பாரின் கூற்று வெறும் பேத்தலே. அது போல்தான் இலக்கணமும் என்க. இலக்கணம் என்றும் தமிழ்ச்சொல்தான் இலட்சணமாயிற்று என்க.  தொல்காப்பியத்தின் சொல்கள் பல வடமொழி…

தமிழி – உரோமன் எழுத்துப்பெயர்ப்பு – 1 : முனைவர் இராம.கி

  ஒருங்குறியிற் தமிழ் – தேவைகளும், தீர்வுகளும் (Tamil in Unicode – requirements and solutions) என்ற கருத்தரங்கு மார்ச்சு 5 இல் தமிழிணையக் கல்விக்கழகத்தில் நடந்தது. அப்போது சென்னையில் நான் இல்லாததால் என்னாற் கலந்து கொள்ள இயலவில்லை. அதுபற்றித் தமிழிணையக் கல்விக்கழக நெறியாளரிடம் முன்னரே தெரிவித்திருந்தேன். அந்தக் கருத்தரங்கில் தமிழ்ப் பின்னங்கள், குறியீடுகள் – பெயரிடலும் கீற்றுகளும் [Tamil Fractions and Symbols – Naming and Glyphs] தமிழ் அனைத்தெழுத்துக் குறியேற்றம் [Tamil All Character Encoding (TACE-16)] ஓரிந்தியா…

மொழித்திற முட்டறுத்தல் 1 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய( நாட்டா)ர்

  கட்டிளங் கன்னியாய்க் காலம் கடந்து நின்றாய் சொட்டும் அமிர்தத் துவர்வாயாய் –  மட்டில்லா மாட்சி யுடையாயிம் மாநிலத்தின் கட்டிலில் நீ ஆட்சி செய்வ தென்றோ அமர்ந்து.  ‘மொழித்திற முட்டறுத்தல்’ என்னும் இத்தொடர், இயற்றமிழ்ச் செய்யுட்களில் முன் பின்னாகக் கிடக்கும் சொற்களைக் கொண்டு கூட்டி முறைப்படுத்தி இலக்கண விதிகாட்டி விளங்க வைத்தல் எனப் பொருள்படும். ஈண்டெழுதப்படும் கட்டுரை இப்பொருள் குறித்ததன்று. மொழித் தோற்றம் பற்றியும் மொழி வகை பற்றியும் மொழி நூலறிஞர் கொண்டுள்ள கருத்துகளில் சிலவற்றின் முட்டறுத்து எம் கருத்து விளக்குதலும், நாகரிக மக்களாற்…

குறள் நெறி – மே.சி.சிதம்பரனார்

குறுமை என்ற பண்பின் பெயர் அப்பண்பினையுடைய பாவிற்குப் பெயராகி, மை விகுதி குன்றி, அள்சாரியை பெற்று, குறு + அள் = குறள் என்றானது. ஒரு தடியில் துண்டித்ததடி குறுந்தடி. ஒரு அரிசியில் துண்டித்த பகுதி குறுநொய் (குறுணை) என்றாங்கு முதற்பாவான ஒரு வெண்பாவின் நான் கடியிற்றுண்டித்த ஒன்றே முக்காலடி, குறள் எனப் பண்பாகு பெயர் பெற்றது. இக்குறட்பாக்களாலாகிய நூலுக்கும் குறள் என்றது கருவியாகு பெயராய் வந்தது. இங்ஙனம் இருமுறை ஆகுபெயர் மடங்கி வரலால் இருமடியாகு பெயரென்றுங் கூறலாம். மேலும் சிறப்புக்குறித்த திரு என்ற…

ஊர்ப்புற மேம்பாட்டில் தகவல் தொடர்பு, தொழில்நுட்ப ஏந்துகளின் தாக்கம்

  – கே.சி.சிவபாலன்                 ஆராய்ச்சி மாணவர் வேளாண் விரிவாக்கத்துறை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை – 03                                     இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியில்,  சிற்றூர்களில் மட்டும் 70 கோடிக்கு அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். நமது நாட்டில் உள்ள ஆறு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் (6,36,000) சிற்றூர்களில் வசிக்கும் உழவர்களே நாட்டின் உணவுத் தேவைக்காகக் கூலங்களை(தானியங்க‌ளை) உற்பத்தி செய்கின்றனர். சிற்றூர்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட சிற்றூர் மேம்பாட்டுத் திட்டங்கள், வேளாண் தொழில்நுட்பங்கள், விடுதலை அடைந்த 65 வருடங்களில் இன்னமும் முழுமையாக…

ஆதிபகவன் யார்?- புலவர் செம்பியன் நிலவழகன்

    வெண்பா   வாலறிவன் ஆசான் மலர்ந்த மனத்திருப்பான்   நூலறிஞன் நுண்மாண் நுழைபுலத்தான் – கோலக்   கலையாவும் கற்பித்தான் கற்றோர்தம் நெஞ்சில்  நிலைத்தானை என்றும் நினை.  (நன்மொழி நானூறு 4)   தனக்குவமை இல்லான் தருங்கல்வி ஆசான்  மனக்கவலை மாற்றிய மாண்பின் மனத்தான்  அறவாழி அந்தணன் ஆன்றோன் அவனை   மறவா மனேம மனம்.      (நன்மொழி  நானூறு  5)    “அகர முதல வெழுத்தெல்லா மாதி  பகவன் முதற்றே யுலகு”   திருவள்ளுவனார் இம்முதன்மைத் திருக்குறளில் இரண்டு கருத்துகளைச் சொல்கின்றார். ஒன்று,…

சங்க இலக்கியக் காட்சிகள் : தாய்மனம் – மு.வ.

சங்க இலக்கியக் காட்சிகள் தாய்மனம் – பேராசிரியர் முனைவர் மு.வரதராசனார்     காக்கை உட்கார்ந்தது! அந்தப் பனை மரத்தில் ஒரு பனம்பழம் விழுந்தது, இந்தக்காட்சியைக் கண்டவன் ‘‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’’ என்றான்; அவன் சொன்னதைக் கேட்டவன், ‘‘அந்தக் காக்கை உட்கார்ந்ததே பனம்பழம் விழுந்ததற்குக் காரணம்’’ என்று தவறாக எண்ணவும் கூடும். இவ்வாறு எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் காரணகாரியமாக்கிக் தொடர்புபடுத்திக் கூறக்கூடாது என்பதே பெரியோர் கருத்து தருக்க நூலார் ]காகதாலிய நியாயம்’ என்ற பெயரால் இதனைத் தெரிவிப்பர். காக்கை அந்த மரத்தில் எத்தனையோ முறை…

வள்ளுவரும் அரசியலும் 4 – முனைவர் பா.நடராசன், ச.ம.உ.,

(பங்குனி 16, தி.ஆ.2045 / 30, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி)   முதலிலே அவனுக்கு, அரசுக்கு வேண்டிய அங்கங்களான படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பவை ஆறும். நன்றாக அமைதல் வேண்டும். ஈகை வேண்டும்; அறிவு வேண்டும்; ஊக்கம் வேண்டும்; செயல்களில் விரைவுடைமை வேண்டும்; தூங்காமை ஆகாது; துணிவு வேண்டும்; கல்வி வேண்டும்; அறன் வழி நிற்றல் வேண்டும். அறனல்லவற்றைக் கடியும் வீரம் வேண்டும். காட்சிக்கெளியனாதல் வேண்டும். கடுஞ்சொல் அல்லாதவனாதல் வேண்டும்; இன்சொல் வழங்கி ஈத்தளிக்கும் இயல்பினனாதல் வேண்டும், செங்கோல்…